Arun Sharma
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூரில் உள்ள காளி தார் பகுதியில் உள்ள துங்கி மோர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் (NH)-144A இல் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த பேருந்து பள்ளத்தாக்கில் வியாழக்கிழமை பிற்பகல் விழுந்ததில் குறைந்தது 15 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க:
உத்தரப் பிரதேச பதிவு எண்ணைக் கொண்ட பேருந்து, ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. ஆதாரங்களின்படி, NH-144A பல்வேறு பாதைகளில் நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணிகளால் மோசமான நிலையில் உள்ளது.
பெரும்பாலான பயணிகள் சௌகி சௌரா மற்றும் அக்னூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலர் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “ஜம்முவின் அக்னூரில் நடந்த பேருந்து விபத்து நெஞ்சைப் பிளக்கிறது. உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கும் சக்தியை உறவினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது, மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துகிறது, என்றும் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“