Advertisment

உத்தரப் பிரதேசத்தில் கனமழை: 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
At least 34 killed in rain-related incidents in Uttar Pradesh

ஜூலை 5, 2023, புதன்கிழமை, லக்னோவில் மழைக்கு மத்தியில் நீர் தேங்கிய தெரு வழியாக பள்ளிக் குழந்தைகள் நடந்து செல்கின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்குதல், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக மாநில அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் வழங்கிய தகவலின்படி, மின்னல் காரணமாக 17 பேர் இறந்தனர், 12 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். மேலும், ஐந்து இறப்புகள் மழை காரணமாக நிகழ்ந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில், ஜலுவான், கான்பூர் தேஹாத், கன்னோஜ் மற்றும் காஜிபூரில் தலா இரண்டு இறப்புகளும், பாக்பத், எட்டாவாஹா, உன்னாவ், ஆக்ரா மற்றும் பல்லியாவில் தலா ஒருவரும், மின்னல் தாக்கியதில் மைன்புரியில் நான்கு இறப்புகளும் பதிவாகியுள்ளன.
சந்த் கபீர் நகரில் ஒரு மரணமும், படவுனில் இரண்டு பேரும், பரேலியில் நான்கு பேரும், ரேபரேலியில் ஐந்து பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

மழை தொடர்பான பிற சம்பவங்களில் எட்டா, கன்னாஜ் மற்றும் கௌசாம்பி ஆகிய இடங்களில் தலா ஒருவரும், முசாபர்நகரில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பல மாவட்டங்களில், குறிப்பாக மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35 (+0.1) டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 (+0.2) டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment