Advertisment

மகாராஷ்டிராவில் பாய்லர் வெடித்து தீ விபத்து: 48 பேர் காயம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் டோம்பிவிலி கிழக்கில் உள்ள அமுதன் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ரசாயன நிறுவனத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக கே.டி.எம்.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
Fire Accident

டோம்பிவிலியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. (Express photo by Deepak Joshi)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவிலி பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. நேற்று வியாழக்கிழமை நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் சடலமாக மீட்க்கப்பட்டுள்னர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 48 பேர் காயமடைந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது. 

Advertisment

அதிகாரிகளின் தகவல்படி, “டோம்பிவிலியின் எம்.ஐ.டி.சி கட்டம்-2 பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பல தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சுவதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். காயமடைந்தவர்கள் நெப்டியூன் மருத்துவமனை மற்றும் எம்.ஐ.டி.சி-யில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்." என்று தெரிவித்துள்ளனர். 

ஆங்கிலத்தில் படிக்க: 6 killed, 48 injured in massive blast at chemical company in Thane’s Dombivli

டோம்பிவிலி கிழக்கில் உள்ள அமுதன் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் பெரிய வெடிப்பு சத்தம் ஏற்பட்டதாக கல்யாண் டோம்பிவிலி முனிசிபல் கார்ப்பரேஷன் (கே.டி.எம்.சி) அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிச்சத்தத்தின் சத்தம் 2 கிலோமீட்டர் சுற்றளவில் கேட்டது மற்றும் வெடிவிபத்தில் கட்டிடத்தின் அருகில் உள்ள வீடுகளின் கண்ணாடி உடைந்தது. இந்த பாய்லர் வெடிப்புக்குப் பிறகு ரசாயன ஆலைக்கு மேலே பெரிய அளவில் புகை மேகம் தோன்றியதாக அப்பகுதியில் வசிப்பவர் கூறினார்.

தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கல்யாண் - டோம்பிவிலி முனிசிபல் கார்ப்பரேஷன் (கே.டி.எம்.சி) தீயணைப்பு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “இந்த நிறுவனத்தின் வளாகத்திற்குள் ரசாயனங்கள் இருந்ததால், மேலும் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெடிப்பு சத்தம் கேட்டு தொழிற்சாலையில் இருந்தவர்கள் சிறிது நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர் என நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எங்களின் மீட்பு பணி நடந்து வருகிறது” என்று கூறினார்.

கே.டி.எம்.சி-யின் தலைமை தீயணைப்பு அதிகாரி நாம்தேவ் சவுதாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “பிற்பகல் 1-1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன தொழிற்சாலை என்பதால், பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. எங்களின் மீட்புப் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவ கே.டி.எம்.சி கிட்டத்தட்ட 10 தீயணைப்பு இயந்திரங்களை ஈடுபடுத்தியுள்ளது” என்று கூறினார்.

துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் மராத்தியில் பதிவிடப்பட்ட செய்தியில், “டோம்பிவிலி எம்.ஐ.டி.சி-யில் உள்ள அமுதன் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் முதலில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கலெக்டரிடம் பேசினேன், அவர்களும் 10 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து விடுகின்றனர். மீட்புப் பணியில் என்.டி.ஆர்.எஃப், டி.டி.ஆர்.எஃப் மற்றும் தீயணைப்புப் படையின் குழுக்கள் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”  என்று தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மீட்புப் பணி முடிந்ததும் அது குறித்து ஆராயப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016-ம் ஆண்டு இதேபோன்று டோம்பிவிலி எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வெடிவிபத்து நிகழ்ந்து 12 பேர் உயிரிழந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment