குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது மூன்று பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று செய்தி நிறுவனம் ANI ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த மூவரும் பெண்கள். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: டெல்லியில் கார் மோதி 4 கிமீ தூரம் இழுத்துச் சென்றதில் பெண் மரணம்; 5 பேர் கைது
இந்த கூட்டத்தில், வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பரிசுகளை வழங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு இருந்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கூட்டம் முடிந்ததும், பொதுமக்கள் பரிசுகளை வாங்க முண்டியடித்ததால், நெரிசல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லூரில் சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். அப்போது 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி ஆகியோரும் நிவாரணத் தொகையை அறிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil