ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் போக்குவரத்துகளை மேம்படுத்துதல் குறித்து பேசினார்.
மேலும் கோவிட் பெருந்தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் சுட்டிக் காட்டினார்.
இந்த மாநாட்டில் வரும் ஆண்டில் மாநாடு நடத்தவுள்ள இந்தியாவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். இந்த மாநாட்டின் தலைவராக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் உள்ளார்.
இவர் மற்ற நாட்டு தலைவர்களுக்கு உணவு விருந்து அளிக்கும் நேரத்தில் பிரதமர் மோடியின் விமானம் அந்நாட்டில் தரையிறங்கியது.
அப்போது, சமர்கண்ட் விமான நிலையில் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிபோவ் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார்.
இன்று (செப்.16) நடைபெற்ற உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், ஈரான் அதிபர் இப்ராகிம் ராஸி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் போக்குவரத்து உரிமைகள் குறித்த எழுப்பிய நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பார்த்து புன்னகைக்க வில்லை. மேலும் கைகளை குலுக்கி வரவேற்கவும் இல்லை.
கோவிட் பரவலுக்கு முன்னதாக 2019 ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற்றது.
அதன் பிறகு தற்போதுதான் மாநாடு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil