Atal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னர் வந்த செய்தி கீழே:
Atal Bihari Vajpayee health condition : வாஜ்பாய் பார்க்க செல்லும் அரசியல் தலைவர்கள்:
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் சிறுநீர் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வாஜ்பாயின் உடல்நிலை குறித்த LIVE UPDATES செய்திக்கு
இதனையடுத்து பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வருகின்றனர். மேலும் அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்கின்றனர்.
தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் - வாஜ்பாயை பற்றி கருணாநிதி கூறியது குறித்த செய்திக்கு