வாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை

Atal Bihari Vajpayee Death News: வாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

By: Updated: August 16, 2018, 11:04:53 PM

Atal Bihari Vajpayee No More அடல் பிகாரி வாஜ்பாய் இன்று மாலை மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு நாடு முழுவதும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்! 1998-ல் 13 நாட்கள் ஒருமுறை, 13 மாதங்கள் மற்றொரு முறை, 1999 முதல் 2004 வரை 5 ஆண்டுகள் இன்னொரு முறை என மொத்தம் 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை வகித்தவர் அவர்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 93 வயதில் காலமானார்! To Read, Click Here

பாரதிய ஜனதாக் கட்சியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியவர், மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு இலக்கணம் வகுத்தவர், கொள்கை எதிரிகளாலும் மதிக்கப்பட்டவர், ‘பாகிஸ்தான் தேர்தலில் நின்றால்கூட இவர் ஜெயிப்பார்’ என அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்பால் பாராட்டப்பட்டவர்… வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) மாலை 5:05 மணிக்கு மரணம் அடைந்தார்.

ஜூன் 11-ம் தேதி சிறுநீரக பாதை நோய் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாய், கடந்த 24 மணி நேரத்தில் ஆபத்தான கட்டத்திற்கு சென்றார். அவரை மீட்க மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை.

atal bihari vajpayee, atal bihari vajpayee death, atal bihari vajpayee dead,atal bihari vajpayee passes away, வாஜ்பாய் மரணம், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார், வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி Atal Bihari Vajpayee:வாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பாஜக தலைவர் அமித் ஷா பேசியபோது!

Atal Bihari Vajpayee Death LIVE UPDATES: வாஜ்பாய் மரணம், இறுதி அஞ்சலி லைவ் நிகழ்வுகள்:

11:00 PM :வாஜ்பாய் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. தலைவர்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை அவரது உடல் அடக்கத்தையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும்.

10:45 PM: பாஜக தலைவர் அமித்ஷா, ‘இந்தியா தனது மிகப்பெரிய தலைவரை இழந்திருக்கிறது. இளைஞர்கள் தங்கள் உத்வேகத்தை இழந்திருக்கிறார்கள்’ என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

10:20 PM: பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க இருக்கும் இம்ரான்கான் இரங்கல் செய்தி வெளியிட்டார். துணைக் கண்டத்தின் பெரிய அரசியல் தலைவர் அவர் என குறிப்பிட்டிருக்கிறார் இம்ரான்.

10:20 PM: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், வாஜ்பாயின் தேசப்பற்று, இதரக் கட்சித் தலைவர்களுடன் பேணிய உறவு, ஜனநாயகப் பண்பு ஆகியவற்றை குறிப்பிட்டு புகழ்ந்தார்.

10:00 PM: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் வாஜ்பாயின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

9:45 PM: பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், ‘வாஜ்பாயின் மறைவு இட்டு நிரப்ப முடியாத இழப்பை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பல்வேறு இனிய தருணங்கள் எனக்கு அமைந்தன. அவரது தலைமை இந்தியாவின் அடுத்த நூற்றாண்டுக்கு வலுவாக அடித்தளமிட்டது’ என புகழாரம் சூட்டினார்.

9:20 PM: வாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

atal bihari vajpayee, atal bihari vajpayee death, atal bihari vajpayee dead,atal bihari vajpayee passes away, வாஜ்பாய் மரணம், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார், வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி Atal Bihari Vajpayee:வாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பு

9:15 PM: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சிறந்த மகனை இழந்துவிட்டது என இரங்கல் தெரிவித்துள்ளார்.

atal bihari vajpayee, atal bihari vajpayee death, atal bihari vajpayee dead,atal bihari vajpayee passes away, வாஜ்பாய் மரணம், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார், வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி Atal Bihari Vajpayee:வாஜ்பாய் மரணம் குறித்து எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கை

9:00 PM : வாஜ்பாய் மாலை 5:05 மணிக்கு மரணம் அடைந்தார். கட்சி வேறுபாடு இன்று நாடு முழுவதும் அனைத்து தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Atal bihari vajpayee news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X