Attacks on Kashmiris : புல்வாமா பகுதியில் பிப்ரவரி 14ம் தேதி, சி.ஆர்.பி.எஃப். ராணுவ வீரர்கள் பயணித்த பேருந்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 40 வீரர்கள் பரிதபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
மேலும் படிக்க : தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட ஆதில் அகமது தார் யார் ?
இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைதியற்ற, பதட்டமான சூழல் நிலவி வருகின்ற நிலையில், நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் உள்த்துறை அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டது. பின்பு இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஷ்மீர் மாணவர்கள், மற்றும் காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்கள், அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு வந்திருப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் மத்திய உள்த்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களிலும், காஷ்மீர் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரா மற்றும் இண்டெலிஜென்ஸ் உயர்க்குழு அதிகாரிகளிடமும் ஆலோசனையில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங், இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பதை தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மதக்கலவரங்களை உண்டாக்கும் வகையில் பகிரப்படும் சமூக வலைதள பதிவுகளை எப்படி நீக்குவது என்பது குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது.
காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மேலும் ராஜ்நாத் சிங், காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங்குடன் பேசியுள்ளார். அங்கு நிலைமையை சீராக்க முயலவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டாதைத் தொடர்ந்து நிர்மல் சிங், அம்மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் எங்கும் யாரும் பேச்சு வார்த்தையோ அல்லது அறிக்கையோ விடக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
Attacks on Kashmiris
ஜம்முவில் இருக்கும் குஜ்ஜார் நகரில் சில போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட பகுதியில் வாகனங்களுக்கு தீ வைத்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெஹ்ராண்டூன் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் காஷ்மீர் மாணவர்களை வெளியேறச் சொல்லி கோஷங்கள் எழுப்பியதால் அங்கும் பதட்டமான சூழல் நிலவியது.
பாட்னாவில் ஷால் வியாபாரம் செய்யும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் மாநிலத்தை விட்டு காஷ்மீரிகள் வெளியேற வேண்டும் என போராட்டக்காரர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.