கேரள மாநிலம் அட்டப்பாடியில் நடந்த படுகொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என கேரள சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்.4) தீர்ப்பளித்துள்ளது.
அட்டப்பாடியை சேர்ந்த 30 வயதான பழங்குடி இளைஞரான மது, 2018 பிப்.22ஆம் தேதி உள்ளூர் கடைகளில் அரிசி மற்றும் மசாலா பொருள்கள் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
நாட்டையை உலுக்கிய இந்தப் படுகொலை சம்பவத்தில் டிரைவர், உள்ளூர் கடைகாரர்கள் மீது ஆட் கடத்தல், கொலை, சட்ட விரோதமாக கூடுதல், பழங்குடி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பாலக்காடு அகலி போலீசார் வழக்குப் பதிவ செய்து விசாரணை நடத்தினர். மொத்தம் 16 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கில் இருந்து இரண்டு பேர் விடுவிக்கப்பட்டனர். மதுவின் படுகொலை நாடு முழுக்க பரிதாபத்தை ஏற்படுத்தியது. எலும்பும், தோலுமாக அவர் காட்சியளித்த புகைப்படங்கள் கல் நெஞ்சு கொண்டோரையும் கலங்க செய்வதாக இருந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“