ஆண்ட்டி என்று அழைத்த ஜான்வி கபூரை இன்ஸ்டாவில் கலாய்த்த ஸ்ம்ரிதி இராணி…

சமூக வலைதளங்களில் எப்போதும் எங்கேஜ்டாகவே இருக்கும் ஒரு அமைச்சர் யாரென்றால் ஸ்மிரிதி இராணி தான்.

By: Updated: December 28, 2018, 02:08:05 PM

Aunty kisko bola : இன்றைய அமைச்சரவையில், மிகவும் ஜாலியான, சமூக வலைதளங்களில் எப்போதும் எங்கேஜ்டாகவே இருக்கும் ஒரு அமைச்சர் யாரென்றால் ஸ்ம்ரிதி இரானி.

சமீபத்தில் நடைபெற்ற, தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணத்தின் போது, தீபிகா – ரன்வீர் திருமண புகைப்படங்களுக்கு காத்திருந்தால் நிலைமை இப்படியாகத்தான் இருக்கும் என்று எலும்புக் கூட்டுடன் கூடிய புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து இன்ஸ்டாகிராமை அதகளப்படுத்தியவர்.

Aunty kisko bola – ஸ்ம்ரிதி இராணியின் இன்ஸ்டாகிராம் பதிவு

நேற்று ஜான்வி கபூருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை “ என்னை யாரோ ஒருவர் படம் பிடிக்கிறார்’ மொமெண்ட்: ஸ்மிரிதி இரானியை ஒருவர் படம் பிடிப்பதை  தனது கண் அசைவுகளால் உணர்த்துகிறார் ஜான்வி” என்ற கேப்சனுடன் பகிர்ந்திருந்தார்.

மேலும் “ஜான்வி கபூருடன் ஆவலுடன் பேசிக் கொள்ளும் போது, அவர் ஆண்டி என்று அழைத்து அதற்கு அழகாக மன்னிப்பு கேட்கும் போது” என்ற கேப்சனையும் இணைத்திருந்தார். இந்த பதிவினை ஜான்வி கபூர் லைக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Aunty kisko bola smriti iranis post with janhvi kapoor has left everyone in splits

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X