மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்து, கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டனர்.
அவுரங்காபாத் மாவட்டத்தில் சட்ட விரோதரமாக குடிநீர் இணைப்பு தொடர்பாக இரு பிரிவினர் இடையே கலவரம் வெடித்ததுள்ளது. இந்த கலவரத்தின் உச்சமாக அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு அங்குள்ள கடைகள் மற்றும் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகங்களுக்கு தீ வைத்தனர்.
இதனால் அங்கிருந்த 100 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பல் ஆகின. அத்துடன் வாகங்களும் மோசமான நிலையில் தீயில் கருகின. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கலவரகாரர்களை விரட்ட தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டும் வீசினர்.
தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால்,அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தைத் தூண்டும் வகையில் யாரேனும் வன்மையான செயலில் ஈடுப்பட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
,
இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பல கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கு இரையாகியது. இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தற்போது அவுரங்காபாத் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால், இந்த தகவலை அம்மாநில அரசு தற்போது வரை உறுதி செய்யவில்லை.