scorecardresearch

மார்ச் 8; இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர் : இரு நாடுகள் உறவை பலப்படுத்த ஆலோசனை

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் 4 நாட்கள் சுற்று பயணமாக இந்திய வருகிறார். வருகின்ற 8ம் தேதி இந்தியா வரும் அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

மார்ச் 8; இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர் : இரு நாடுகள் உறவை பலப்படுத்த ஆலோசனை

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர்  அந்தோனி அல்பானீஸ் 4 நாட்கள் சுற்று பயணமாக இந்திய வருகிறார். வருகின்ற 8ம் தேதி இந்தியா வரும் அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வருகின்ற 8ம் தேதி இந்தியா வருகிறார். இந்த பயணம் 11-ம் தேதி நிறைவடைகிறது. இந்தியா வரும் அந்தோனி அல்பானீஸ், அஹமதாபாத்தில் நடைபெறும் , இந்தியா- ஆஸ்திரேலியா 4வது டெஸ் போட்டியை பார்க்க உள்ளார். இந்த டெஸ்ட் போட்டி 9-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து மும்பை செல்லும் அந்தோனி அல்பானீஸ், தொழில் முனைவோர்களை சந்தித்து பேசுகிறார்.

இந்த பயணம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் கூறுகையில் “இந்தியாவுடனான எங்கள் உறவு வலிமையாக உள்ளது. கூடுதலாக வலிமையாக்க உள்ளோம். இரு நாடுகளின் வாய்ப்பு அதிகரிக்கும். வர்த்தகம், முதலீடுகளும் வளர்ச்சியடையும். இது இரு நாட்டு மக்களின் வாழ்வுக்கு நன்மை தரும்.

இந்த ஆண்டில் நடைபெற உள்ள  குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டுக்கு, பிரதமர் மோடியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்திருக்கிறோம். கூடுதலாக செப்டம்பரில் நடக்க உள்ள ஜி 20 தலைவர் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளது தொடர்பாக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

ஆஸ்திரேலிய பிரதமர்  ஆண்டனி அல்பானிஸ்-க்கு ஜனாதிபதி மாளிகையில் 10ம் தேதி வரவேற்பு நிகழ்வு நடைபெறுகிறது. பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமரும் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். அதில்  இந்திய – ஆஸ்திரேலிய பாதுகாப்பு உறவு, உலக விஷயங்கள் குறித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Australia pm to visit india bats for deeper ties