அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் லட்சிய பாதுகாப்பு முயற்சியை வெளிப்படுத்தி கூறுகையில், இந்த நடவடிக்கை இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் அவர்களுடைய விழுமியங்கள் மற்றும் நலன்களை பகிர்ந்து ஆதரிக்கும் என்று கூறினார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் முயற்சியாக ஒரு புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணியில் கையெழுத்திட்டன. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து ஒப்பந்தம் குறித்து அறிவித்தார் என்று வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் வியாழக்கிழமை தெரிவித்தன.
லட்சிய பாதுகாப்பு முயற்சியை வெளிப்படுத்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும். அவர்களுடைய விழுமியங்கள் மற்றும் நலன்களை ஆதரிக்கும் என்று கூறினார்கள்.
AUKUS (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா) என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், ராஜதந்திர யுக்தி முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் இந்த மூன்று நாடுகளுக்கிடையிலான கூட்டணி குறித்து தெரியாது என்றும் இந்த ஒப்பந்தத்தின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இதை முதுகில் குத்துவது என்று அழைத்துள்ளது.
2016ம் ஆண்டில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்ட 90 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர்) நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்கு AUKUS ஒப்பந்தம் தடுக்கும் விதமாக அமைத்ததால் பிரான்ஸ் கோபமடைந்தது.
மூன்று நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கைக்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன் யெவ்ஸ் லெ ட்ரியன், “ஆஸ்திரேலியாவுடன் நாங்கள் ஒரு நம்பகமான உறவை ஏற்படுத்தினோம், இப்போது இந்த நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டுள்ளது … இந்த பிரிவினை பற்றி நான் இன்று மிகவும் கோபமாகவும் மிகவும் கசப்பாகவும் இருக்கிறேன். கூட்டாளிகளிடையே இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமெரிக்காவின் நடத்தைதான் எனக்கு கவலை அளிக்கிறது. இந்த கொடூரமான, ஒருதலைப்பட்சமான, கணிக்க முடியாத முடிவு டிரம்ப் செய்வது போலவே தெரிகிறது. கூட்டாளிகள் ஒருவருக்கொருவர் இதைச் செய்வதில்லை <குறிப்பாக எப்போதும்> அவர்கள் ஒத்திசைவான இந்தோ-பசிபிக் அணுகுமுறைகளைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள். இது தாங்க முடியாதது” என்று அவர் கூறினார்.
புதுடெல்லியில், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, புதிய AUKUS கூட்டுறவு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது அடுத்த வாரம் வாஷிங்டன் DC-ல் முதல் நபர் குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வருகிறது.
மோடி, மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹிட் சுகா ஆகியோர் கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டை அமெரிக்க அதிபர் பைடன் நடத்தவுள்ளார்.
AUKUS ஒப்பந்தம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த பாக்சி, “இந்த நேரத்தில் இதைப் பற்றி நான் பகிர்ந்து கொள்ள எதுவும் இல்லை.” என்று கூறினார்.
AUKUS ஒப்பந்தம் குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் ஆகியோர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை அழைத்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
AUKUS-ஐ அறிவிக்கும் கூட்டறிக்கையின் ஒரு பகுதியாக, பைடன் கூறுகையில், “இந்தோ-பசிபிக் பகுதியில் நீண்ட காலத்திற்கு அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்வதன் அவசியத்தை நாம் அனைவரும் அங்கீகரிப்பதால், நமது மூன்று நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் முறைப்படுத்தவும் மற்றொரு வரலாற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்று கூறினார்.
“இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகள் - நாங்கள் புவியியல் ரீதியாக பிரிந்திருக்கலாம், ஆனால், நம்முடைய நலன்களும் விழுமியங்களும் பகிரப்படுகின்றன” என்று இந்த ஒப்பந்தத்தை அறிவிக்கும் போது ஜான்சன் கூறினார்.
“இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் கூட்டுறவு தொடர்பில் AUKUS நம்முடைய பங்களிப்பை மேம்படுத்தும். … நம்முடைய ஆசிய நண்பர்கள், நம்முடைய இருதரப்பு உத்தி பங்காளிகள், குவாட், ஐந்து கண்கள் நாடுகள் நிச்சயமாக நம்முடைய அன்பான பசிபிக் குடும்பமாக இருக்கும். AUKUS-இன் முதல் பெரிய முயற்சி ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வழங்குவதாகும்” என்று ஆஸ்திரேலியாவின் மோரிசன் கூறினார்.
பெய்ஜிங்கில், சீன வெளியுறவு அமைச்சகம் முத்தரப்பு இராணுவ கூட்டணியை கடுமையாக விமர்சித்தது. இது பிராந்திய ஸ்திரத்தன்மையை மோசமாக பாதிக்கும்; ஆயுதப் போட்டியை மோசமாக்கும் மற்றும் சர்வதேச பரவல் தடுப்பு முயற்சிகளை பாதிக்கும் இந்த ஒப்பந்தத்தை சீனா உன்னிப்பாக கண்காணிக்கும் என்று கூறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.