Ayodhya babri masjid Ramjanmabhoomi verdict security tightened
Asad Rehman
Advertisment
Ayodhya babri masjid Ramjanmabhoomi verdict security tightened : சர்ச்சைக்குரிய ராம்ஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரத்தின் வழக்கு விசாரணைகள் முற்றிலுமாக முடிவுற்ற நிலையில் தீர்ப்புக்காக இந்தியாவே காத்துக் கொண்டிருக்கிறது. அயோத்தி முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராம் ஜென்மபூமி - பாபர் மசூதி அமைக்கப்பட்ட இடம், அனுமான் கர்ஹி கோவில், கிராணா கடை, ராம்கோட் கோவிலுக்கு வெளியே, கார்கள், பேருந்துகள், மோட்டர் சைக்கள்கள் என எங்கும் காவல்துறையினர் மட்டுமே இருக்கின்றார்கள். ஆனாலும் மக்கள் எப்போதும் போல் இயல்பாக இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
குவிக்கப்பட்ட காவல்துறையினர் குறித்து அருண் குமார் குப்தா ”அயோத்தியில் பாபர் மசூதி விவகாரமாக காவல்துறையினர் வருவது ஒன்றும் புதித்தல்ல. அதே போன்று அயோத்தியில் சிக்கலான சூழல் வருவதும் ஒன்றும் புதிதல்ல. நாங்கள் இது போன்ற காவல்துறையினர் வருகையால் பெரிதும் கவலை அடைவதில்லை. அரசியல்வாதிகள் எப்போது வெளியூர் ஆட்களை இங்கே அழைத்து வருகிறார்களோ அப்போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது” என்று கூறினார்.
Advertisment
Advertisements
துளசி உதையன் பார்க்கில் பான் மற்றும் சிகெரெட்களை விற்று வரும் தர்மேந்திர குமார் சோன்கர் கூறுகையில் “காவல்துறையினர் அவர்களின் பணியை தான் மேற்கொண்டு வருகின்றனர். எங்களால் அவர்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. 1992ம் ஆண்டு கூட அவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை. வெளியூர்களில் இருந்து கரசேவகர்கள் வந்த பின்பு தான் அயோத்தியில் மிகப்பெரிய பிரச்சனை உருவானது” என்று நியாபகப்படுத்துகிறார். வர இருக்கும் அயோத்தி தீர்ப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது “இங்கு ராமர் கோவில் தான் கட்டி எழுப்பப்பட வேண்டும். மற்றதை கடவுள் ராமன் பார்த்துக் கொள்வான்” என்று கூறினார்.
ராமர் கோவிலுக்கு அருகே அமர்ந்திருக்கும் மூன்று சாமியார்கள் பேசிக் கொண்டிருந்த போது “இப்போது இங்கு ராமர் கோவில் கட்டவில்லை என்றால் வேறு எப்போது தான்?என்று கேள்வி எழுப்பினார் ஒருவர். மற்றொருவரோ மோடி இருக்கிறார். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதில் கூறினார்.
பாதுகாப்பு குறித்து காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பிய போது “நாங்கள் உள்ளூர்வாசிகள் கூறும் செய்திகளை வைத்தே நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். சின்னஞ்சிறிய வீடுகளில் வாழும், குற்றப்பின்புலம் அற்றவர்களை எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றோம். சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஏதேனும் நடமாட்டம் இருந்தால் உடனே அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டோம் என்று பெயர் கூற விரும்பாத மூத்த காவல்துறை அதிகாரி அறிவித்தார்.
அயோத்தியில் காவல்துறையினரை நியமிப்பது, பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்துவது போன்ற முக்கிய பொறுப்புகள் காவல்துறை கூடுதல் இயக்குநர் அஷ்தோஷ் பாண்டேயிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் புதன் கிழமையன்று (06/11/2019) அயோத்தி வந்தடைந்தார். வந்தவர் அங்கிருந்த காவல்துறையினரிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அயோத்தி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் இக்பால் அன்சாரி. அவருடைய வீடு பஞ்சி தோலா பகுதியில் அமைந்திருக்கிறது. அவருடைய வீட்டிற்கு வந்து செல்பவர்கள் அனைவரும் காவல்துறையின் தீவிர சோதனைக்கு பினே அனும்பதிக்கப்படுகிறார்கள். அன்சாரி வீட்டிற்கு வெளியே நிற்கும் காவல்துறையினர் அன்சாரியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டும் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அன்சாரியின் வீட்டுக்கு வெளியே ஒரு சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு தான் செய்தியாளர்களை அன்சாரி சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பினால் இங்கு எதுவும் நடக்காது. இங்கு எந்தவிதமான பதட்டமான சூழலும் இல்லை. மற்ற அண்டை மாவட்டங்களில் ஏதாவது பிரச்சனை வரலாமே தவிர இங்கு ஒன்றும் நடைபெறாது.
எந்த வகையான தீர்ப்பு வந்தாலும் அயோத்தியில் இருக்கும் இஸ்லாமியர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்பதை திட்டவட்டமாக அறிவித்திருக்கிறேன். அயோத்தியில் 90% இந்துக்களும் 6.19% இஸ்லாமியர்களும் இருப்பதாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நமக்கு அறிவிக்கிறது.
அன்சாரி வீட்டுக்கு அருகே அமைந்திருக்கும் நஃபீஸாவிடம் இந்த தீர்ப்பு குறித்து கேட்ட போது நாங்கள் எங்கள் அண்டை அயலார்களின் திருமணத்திற்கு செல்வோம். ஒன்றாக அமர்ந்து உணவு உண்போம். இங்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அது நிச்சயம் வெளி நபர்களால் வருமே தவிர எங்களுக்குள் இருந்து எழாது என்று அவர் கூறினார். தலைமை பூசாரி ஆச்சர்ய சத்யேந்திர தாஸ் கூறும் போது “ தீர்ப்பு ராமர் கோவிலுக்கு சாதகமாக அமையும் என்றால் எங்களின் வீட்டுக்குள்ளும் கோவில்களுக்குள்ளும் தீபாவளியையும் ஹோலியையும் கொண்டாடுவோம். ஆனால் ஒரு போதும் ஊர்வலம் செல்ல மாட்டோம். தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.