அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-இல் வழங்கிய தீர்ப்பு என்ன?

அலகாபாத் உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை சுறுக்கமாக கூறுவதானால், பகவான் ராம்லல்லா விரஜ்மான், நிர்மோஹி அகாரா மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வஃப்...

அயோத்தி வழக்கில், 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.

அயோத்தி வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிப்காத் உல்லா கான், சுதிர் அகர்வால் மற்றும் தரம் வீர் சர்மா அடங்கிய அமர்வு விசாரித்தனர். அவர்கள் இந்த வழக்கில் 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கினர். நிலம் குறித்த விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் வேறுபட்ட பார்வைகளை கொண்டிருந்தனர்.

நீதிபதி கான் தனது உத்தரவில், மசூதி கட்டப்படுவதற்காக, அங்கு எவ்வித கோயில்களும் இடிக்கப்படவில்லை. ஆனால், மசூதி கட்டப்பட்ட இடத்தில் அதற்கு முன்பாக கோயில் இருந்ததற்கான தரவுகள் இருந்துள்ளன. அவர்கள் பயன்படுத்திய கட்டுமானபொருட்களும் இருந்துள்ளன. இந்துக்கள் பெரிய அளவிலான அந்த இடத்தில், ராமர் பிறந்த இடமான அந்த சிறிய இடத்தின் மீதே அதீத ஈடுபாடு கொண்டுள்ளனர். அதை தேடும் முயற்சியிலேயே அவர்கள் தீவிரமாக இருந்துள்ளனர்.

நீதிபதி கான் தனது உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ராம் சபுத்ரா மற்றும் சீதா ரசோய், 1855ம் ஆண்டுக்கு முன் வாழ்ந்துள்ளனர். இந்து வழிபாட்டாளர்கள் அங்கு வழிபாடுகளை நடத்திவந்துள்ளனர். இதனடிப்படையிலேயே, அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் மூவருக்கும் சரிசம பங்கு என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி அகர்வாலின் உத்தரவின்படி, அங்கு உள்ள கட்டடம், முஸ்லிம் மதத்தினரால் பயன்படுத்தப்படவில்லை. 1856-57ம் ஆண்டுகளுக்கு பிறகே, சர்ச்சைக்குரிய அந்த இடத்தின் வெளிப்புற பகுதி, இந்து மக்களால் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இடத்தின் உட்புற பகுதி, இந்து மற்றும் முஸ்லிம் என இரண்டு மதத்தினராலும் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

நீதிபதி சர்மா தனது உத்தரவில், இந்து கோயிலின் இடிபாடுகளுக்கிடையில் தான் மசூதி கட்டப்பபட்டுள்ளது. 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று வெளியான இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையின்படி, தொகுக்கப்பட்டுள்ள 265 தரவுகளின் படி,அங்கு 11 மற்றும் 12ம் நூற்றாண்டு காலத்தில் பயன்படுத்தப்பட்ட தேவநாகரி எழுத்துருவிலான ஆவணங்கள் கிடைத்துள்ளதன் மூலம், அங்கு இந்து கோயில் இருந்தது புலனாகியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ராகேஷ் திவாரியும், பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டே, அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1949ம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் இந்து சிலைகள் வைக்கப்பட்டதா? அல்லது அங்கு ஏற்கனவே இருந்ததா?

நீதிபதிகள் கான் மற்றும் சர்மா தங்களது உத்தரவில் மசூதியின் உட்புறத்தில் இந்து கடவுள் சிலைகள், குறிப்பிட்ட அந்தநாளின் இரவில் மீட்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால், நீதிபதி அகர்வாலோ தனது உத்தரவில், 1949 டிசம்பர் 22ம் தேதிக்கு முன்னதாகவே, அங்கு இந்து கடவுள் சிலைகள் இருந்துள்ளன. அந்த கட்டடத்தின் வெளிப்புறத்தில் ராம் சபுத்ரா வழிபாட்டிற்கு இந்த கடவுள் சிலைகள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி கான், ஐரோப்பிய புவியியிலாளர் டைபெந்தாலரின் இந்திய பயணத்தை மேற்கோள் காட்டி, டைபெந்தாலர் 1766 முதல் 1771ம் ஆண்டு வரையிலான கட்டத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, ராமர் கோயில் அங்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான தகவல்கள், அரசு கெஜட்டிலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீதிபதி கான் அடுத்து தெரிவித்த தகவலில் தான் முரண்பாடு உள்ளது, அது யாதெனில், மசூதி கட்டப்பட்டபோது, இந்துக்கள், அந்த கட்டடத்தின் குறிப்பிட்ட பகுதி வரை இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர் என்ற கூற்று மட்டும் எதிர்வினையாற்றுவதாக உள்ளது.

அந்த இடம் யாருக்கு சொந்தமாக உள்ளது?

கட்டடத்தின் உட்புற பகுதிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று நீதிபதி அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, வெளிப்புற பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. இந்த நடைமுறை, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. இருந்தபோதிலும், இந்துக்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

நீதிபதி சர்மா தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, வக்பு வாரியத்தின் நிதி நிலவரத்தை பொறுத்து மட்டும், அந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்று கூறிவிட முடியாது. மசூதியின் உட்புற பகுதியில் உள்ள தூண்களில், இந்து கடவுள்களின் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த கட்டடம், முஸ்லீம்களுக்கு முழுவதுமாக சொந்தம் என்று யாராலும் சொல்லிவிட இயலாது. கட்டடத்தின் வெளிப்புற பகுதியில் யார் வேண்டுமானாலும் (முஸ்லீம்களையும் சேர்த்து) போய் பார்க்கலாம். இந்துக்கள் அங்கு கட்டடம் கட்டப்ட்ட பிறகும் வழிபாடு நடத்தி வந்துள்ளதால், கட்டடத்தின் வெளிப்புற பகுதி, இந்துக்களுக்கே சொந்தம் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி கான் தனது உத்தரவில், பாபர் காலத்தில், இங்கு மசூதி கட்டப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல், பழமையான இந்து கோயிலை இடித்துதான் அங்கு மசூதி கட்டப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இந்து அமைப்பால் தரப்படவில்லை. இதன்காரணமாக, இரண்டு அமைப்பினருக்கும் இந்த இடம் சரிபாதி சொந்தம் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மசூதி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?

நீதிபதி அகர்வால் : கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது 1950க்கு முன்னர் வரை, அந்த இடம் மசூதி இடம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்து அமைப்புகள் இதனை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையிலேயே இந்த விவகாரம், பெரும் விவாதமாக மாறியுள்ளது.

நீதிபதி சர்மா : இந்து கோயிலை இடித்தே, இங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதற்கு 200க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. இந்து கோயிலுக்காக கட்டுமான பொருட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக, அங்கு மசூதி கட்டப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிபதி கான் : யாரோ ஒருவரின் இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதால் அதனை முக்கியத்துவம் இல்லாத மசூதி என்று சொல்லிவிட முடியாது. கோயில் கட்டுமான பொருட்கள் அங்கு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அதில் எந்தளவுக்கு உறுதித்தன்மையுள்ளது என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது. பைஜாபாத் சிவில் கோர்ட்டில், பாபர் மசூதி கட்டுமான விபரங்கள், 1950ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக, இது மீண்டும் அலகாபாத் நீதிமன்றத்தில் மறுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பை சுறுக்கமாக கூறுவதானால், பகவான் ராம்லல்லா விரஜ்மான், நிர்மோஹி அகாரா மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வஃப் வாரியம் ஆகியோருக்கு இடையே சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பாகங்களாக பிரிக்க உத்தரவிட்டனர் என்பதே ஆகும்.

மூன்று நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியாகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close