Advertisment

அயோத்தி தீர்ப்பு விவகாரம் : இஸ்லாமிய தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் முக்கிய ஆலோசனை

Ayodhya case verdict : அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், இஸ்லாமிய மத தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ayodhya verdict, rss, bjp leaders meet muslims, union minister mukhtar abbas naqvi, supreme court verdict on ayodhya dispute, ayodhya ram mandir, babri masjid, indian express

ayodhya verdict, rss, bjp leaders meet muslims, union minister mukhtar abbas naqvi, supreme court verdict on ayodhya dispute, ayodhya ram mandir, babri masjid, indian express, அயோத்தி தீர்ப்பு, அயோத்தி வழக்கு, உத்தரபிரதேசம், ஆர்எஸ்எஸ், சங்பரிவார், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, உச்சநீதிமன்றம், தீர்ப்பு, ரஞ்சன் கோகோய், எதிர்பார்ப்பு

Abantika Ghosh

Advertisment

அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தலைநகர் டில்லியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில், இஸ்லாமிய மத தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை, இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளும் உற்றுநோக்கி வருகின்றன. இந்த தீர்ப்பு, தீர்ப்பு குறித்த செய்திகளை சேகரிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்களும் இந்தியா வர உள்ளதால், அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தீர்ப்பு எத்தகையதாக இருப்பினும், மத உணர்வுகளை தூண்டி அதன்மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொடர்ந்து வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ், சங் பரிவார் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளிடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இரு அமைப்புகளின் தலைவர்களிடையேயான சந்திப்புக்கு செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 5ம் தேதி) ஏற்பாடு செய்திருந்தது.

டில்லியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஷா நவாஸ் ஹூசைன் தலைமையில், ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்புகளின் சார்பில் RSS Akhil Bharatiya Sah Sampark பிரமுக் ராம் லால், RSS Sah Sarkaryawah கிருஷ்ண கோபால் உள்ளிட்டோரும் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் ஜாமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பின் பொது செயலாளர் மவுலானா மகமுத் மதானி, முன்னாள் எம்.பி மற்றும் நை துனியா பத்திரிகை ஆசிரியர் ஷாகித் சித்திக், அஞ்சுமன் அஜ்மீர் ஷெரீப் சயீத் மொய்ன் சர்கார், ஓய்வுபெற்ற நீதிபதி ஜகியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் அனைத்து தருணங்களிலும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அயோத்தி வழக்கின் தீா்ப்பை ஆதரித்து அளவுக்கு அதிகமாக கொண்டாடுவதோ அல்லது எதிா்ப்பு தெரிவித்து அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதோ கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்வதென்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

முக்தாா் அப்பாஸ் நக்வி.ஆா்எஸ்எஸ் தலைவா்கள் கிருஷ்ண கோபால், ராம்லால் ஆகியோா் பேசுகையில் , இந்த கூட்டத்தின் மூலம் அமைதிக்கான செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளோம். இதுபோன்ற கூட்டங்கள் எதிா்காலத்திலும் நடைபெறும் என்றாா் , ‘அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதுதான் இந்தியாவின் பாரம்பரியமாகும். எந்த மதத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், ‘தேசமே முதன்மையானது’ என்ற மனநிலை இருக்க வேண்டும். ஒரு சமூகத்தைச் சோ்ந்த தனிப்பட்ட நபா் கூறும் கருத்துகளுக்காக அந்த சமூகத்தை ஒட்டுமொத்தமாக குறைகூறுவது கூடாது’ என்றனா்.

ஷியா பிரிவு மதகுரு ஜாவத் கூறுகையில், ‘அயோத்தி வழக்கின் தீா்ப்பை யாரும் வெற்றி-தோல்வியாக பாா்க்கக் கூடாது. தீா்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும்’ என்றாா்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விரைவில் தீா்ப்பு வழங்கவுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால், அதற்கு முன் தீா்ப்பு வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Ayodhya Temple Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment