Advertisment

பல்வேறு அரசுகளின் நம்பிக்கை குரல், 92 வயதில் அயோத்தி வழக்கில் வாதாடும் பராசரன்...

இந்த குடும்பத்தின் 4வது தலைமுறையை சேர்ந்தவர்களும் வழக்கறிஞர்களாக பணியாற்றுகிறார்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ayodhya dispute case Lawyer K Parasaran

Ayodhya dispute case Lawyer K Parasaran

Apurva Vishwanath

Advertisment

Ayodhya dispute case Lawyer K Parasaran is appearing for Ramlalla :  அயோத்தி வழக்குகள் தொடர் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு கடந்த வாரத்தில் இருந்து விசாரனை நடைபெற்று வருகிறது. ராம்லல்லாவிற்கு ஆதரவாக வழக்காடுபவர் 92 வயதுமிக்க   தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே. பராசரன். ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை "நீங்கள் ஏன் அமர்ந்து கொண்டே வாதாடக்கூடாது?" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுள்ளார்.  அதற்கு பராசரன் “நீங்கள் மிகவும் கருணை கொண்டவர் நீதிபதி. இந்திய வழக்காடு மன்றங்களில் நின்று கொண்டு வாதிடுவது தான் காலம் காலமாக இருந்து வருகிறது. அதனால் நான் நின்று கொண்டே வழக்காடுகின்றேன்” என்று கூறியுள்ளார்.

2016ம் ஆண்டில் இருந்து நீதிமன்றங்களில் பராசரனை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனாலும் மிக முக்கியமான இரண்டு வழக்குகளில் வாதாட மீண்டும் அவரை நீதிமன்ற வாசலுக்கு வரவைத்துள்ளது நீதிமன்றம். மூத்த வழக்கறிஞரான இவர் இரண்டு முறை அட்டார்னி ஜெனரலாக பணியாற்றியுள்ளார். சபரிமலை விவகாரத்தை தொடர்ந்து அயோத்தி வழக்கில் வாதாட வந்துள்ளார் அவர்.

1970ம் ஆண்டில் இருந்து இவருடைய வழக்குகளையும் வாதாடும் திறமைகளையும் மெச்சாத இந்திய மாநிலங்கள் எதுவும் இல்லை. அவருடைய நீதிமன்ற வாதங்கள் பலநேரங்களில் இந்து வேதங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. இந்திய நீதிமன்றங்களில் வழக்காடும் பிதாமகன் இவர் என்றும், அவருடைய தர்மங்களில் இருந்து நெறி பிறழாமல் வாதாடும் திறமை கொண்டவர் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பராசரனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை வழக்கில் பராசரன்

நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் சபரிமலை வழக்கில் வாதாடினார் பராசரன். வயது வந்த பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்று கூறி வாதாடினார் பராசரன். அப்போது கோர்ட்டில், கோவிலுக்குள் சென்று கடவுளை பிரார்த்தனை செய்ய கேட்கப்பட்ட கேள்வி தவறானது. ”நான் பிரார்த்தனை செய்யும் போது சிகரெட் பிடிக்கவா என்று ஒருவர் கேள்வி கேட்டால், அவருக்கு அடிதான் விழும். ஆனால் அதுவே அவர் நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது பிரார்த்தனை செய்யவா என்று கேள்வி எழுப்பினால் அவருடைய கேள்வி மதிக்கப்படும். எனவே சரியான கேள்வியே சரியான பதிலை கொண்டு வரும். தவறான கேள்விகள் தவறான முடிவுகளைத் தான் கொண்டு வரும்” என்று அவர் வாதாடினார்.

அந்த சமயங்களில் “சுந்தரகாண்டத்தில் இருக்கும் ”நைஷ்கித்த பிரம்மச்சரியம்”என்ற பதத்தில் வரும் பிரம்மச்சரியத்தின் விளக்கத்தினையும், பெண்களுக்கு ஏன் அனுமதி வேண்டாம் என்றும் அவர் கூறினார்.  ஆனாலும் அவருடைய வாதங்களையும் மீறி சபரிமலையில் பெண்களின் அனுமதியை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

ராமர் பாலம் வழக்கு

சேதுசமுத்திரத்தில் ஒரு ப்ரோஜெக்டினை உருவாக்குவதற்காக அரசு முயற்சி செய்த நிலையில், ராமர் பாலத்தினை இடிக்கக் கூடாது என்று பலரும் போர் கொடி தூக்கினர். அரசுக்கு எதிராக வாதாடிய பராசரன் ஸ்கந்த புராணத்தில் இருந்து நேரடியாக விளக்கங்களை கூறி அங்கு சேது சமுத்திர திட்டம் உருவாக்கப்பட கூடாது என்று வாதிட்டார். ராமனுக்கு என்னால் செய்ய முடிந்தது என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

பராசரன் குறித்து

பராசரன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் 1927ம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை கேசவ ஐயங்கார். அவரும் ஒரு வழக்கறிஞர் வேத விற்பன்னரும் கூட. சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார். பராசரனின் 3 மகன்களான மோகன், சதீஸ், பாலாஜி ஆகியோரும் வழக்கறிஞர்கள் தான். மோகன் பராசரன் மதசார்பற்ற ஐக்கிய கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் சோலிசிட்டர் ஜெனராலாக பணியாற்றினர். இந்த குடும்பத்தின் 4வது தலைமுறையை சேர்ந்தவர்களும் வழக்கறிஞர்களாக பணியாற்றுகிறார்கள்.  1958ம் ஆண்டில் இருந்தே வாதாடி வரும் இவர், எமெர்ஜென்ஸி காலத்தில் தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார். 1980ல் அவர் சோலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். 1983 முதல் 1989 வரை இவர் அட்டார்னி ஜெனரலாக அவர் பணியாற்றினார்.

அரசுகள் கொண்டாடிய வழக்கறிஞர்

அரசுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளில் அவர் வாதாடினாலும், அரசுக்கு எதிராக விவாதம் செய்யவும் அவர் தயங்கியதில்லை. எமெர்ஜென்சி காலத்தில் அவர் சொலிசிட்டர் ஜெனரலாகவும் அவர் பதவி வகித்தார். அப்போது அரசு, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக சோ-காஸ் (show-cause) நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அதனை இந்திரா காந்தி மறுத்துவிட்டார். பின்பு, அரசுக்கு ஆதரவாக என்னை களம் இறங்க கூறினால், நிச்சயமாக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்வேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவருடைய நேர்மையை கருத்தில் கொண்டு அவரை அட்டார்னி ஜெனரலாக உயர்த்தியது அன்றைய இந்திய அரசு.

அரசுகள் மாறின. ஆட்சிகள் மாறின. ஆனாலும் இந்த ஒரு வழக்கறிஞர் மீதான அரசின் பார்வைகளும், ஆட்சிகளின் பார்வைகளும் என்றுமே மாறவில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இவரை இந்திய அரசியல் சாசனம் திருத்தும் பணியில் சீராய்வு பணிக்காக பராசரனை நியமித்தார். வாஜ்பாய் அரசு அவருக்கு பத்மபூசன் விருது வழங்கியது. மன்மோகன் சிங்கின் அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கியது. மேலும் அவரை ராஜ்யசபை உறுப்பினராகவும் தேர்வு செய்தது காங்கிரஸ் அரசு.  நான் இறப்பதற்கு முன்பு இந்த வழக்குகள் முடிவுக்கு வர வேண்டும் என்று அயோத்தி வழக்கௌ பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டார் இந்த வழக்கறிஞர்.

Ayodhya Temple Ram Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment