Advertisment

பாபர் மசூதி விவகாரம் : புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை அறிவித்தது உ.பி. அரசு!

ஏற்கனவே ஏற்பட்ட சிக்கல் போல் இப்போது ஏற்பட வேண்டாம் என்று யோசனை செய்து இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ayodhya dispute Dhannipur village gets new mosque

Avaneesh Mishra

Advertisment

Ayodhya dispute Dhannipur village gets new mosque : அயோத்தியாவில் இருந்து 30 கி.மீ அப்பால், லக்னோ-கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தனிப்பூர். அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் இந்த சாலையை நேற்றுவரை யாருமே அறிந்திருக்கமாட்டோம். ஆனால் இன்றோ பலரின் கூகுள் தேடல்களும் இந்த இடத்தை குறித்ததாகவே இருக்கின்றது. ராமர் கோவில் - பாபர் மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ராமர் கோவிலுக்கு ஆதரவாக தீர்ப்பினை வெளியிட்டது.  மேலும் உத்திரப் பிரதேச மாநில அரசிடம், இந்த மசூதி நிலத்திற்கு பதிலாக புதிய இடத்தை மசூதி கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி ரௌனஹி என்ற பகுதியில் புதிய மசூதியை கட்ட அடையாளம் காட்டியுள்ளது அரசு.

சன்னி வக்பூ வாரியத்திற்கு 5 ஏக்கர் பரப்பில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ளது இந்த இடம். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த இடம். இந்த பகுதியில் 60% இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். யாதவ வகுப்பினை சேர்ந்த மக்கள் அப்பகுதியின் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கின்றனர். இந்த பகுதியில் மசூதி அமைய உள்ளது என்ற கூறப்பட்ட நிலையில் பல்வேறு விதமான விமர்சனங்களை மக்கள் முன் வைக்கின்றனர்.

To read this article in English

Ayodhya dispute Dhannipur village gets new mosque - மக்கள் கருத்து!

இளைஞர்கள் பலரும், ஏற்கனவே மசூதிகள் நிறைய இருக்கும் இந்த பகுதியில் புதிய மசூதி கட்டுவதற்கான தேவை என்ன என்று கேட்கின்றனர். சிலரோ இது அவர்களின் நம்பிக்கை தொடர்பானது. எனவே இந்த முடிவை வரவேற்கின்றோம் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக அந்த பகுதியில் பிறந்து வளர்ந்து தற்போது அமெரிக்காவில் இருக்கும் எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் ஷபான் கான் கூறிகையில் “ரௌனஹி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கனவே தேவைக்கு அதிகமாக மசூதிகள் உள்ளது. நமாஸ் காலங்களிலும் கூட பிரார்த்தனை செய்யும் மக்களால் இந்த மசூதிகள் நிரம்பி வழிவது இல்லை. உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் நிலம் தர வேண்டும் என்று கூறியது. நிலம் தான் தரவேண்டும் என்றால் அங்கு ஏன் கல்லூரியே, மருத்துவமனையோ, அல்லது ஐ.டி.ஐ-யோ கட்டக் கூடாது. இந்த 25 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு ஐ.டி.ஐ கூட இல்லை” என்று கூறியுள்ளார்.

நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...

publive-image

இது நம்பிக்கை சார்ந்தது

ஆனால் ஷபானின் கருத்திற்கு மாற்றுக் கருத்தாக மற்றொரு கருத்தை முன்வைக்கின்றார் 36 வயதான நஃபீஸ் கான். ”மசூதி கட்டுவதற்கு நிலம் தந்தால் அங்கு மசூதி கட்டியே ஆகவேண்டும். கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நாம் நிலங்களை தேடிக் கொள்ளலாம். ஆனால் இந்த விவகாரம் எங்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. பாபர் மசூதி இருந்த இடத்தில் நமக்கு மசூதி அமைக்க இடம் அளிக்கப்படவில்லை என்றால், இங்கும் மசூதி கட்டவில்லை என்றால், பாபர் மசூதி அழிக்கப்பட்ட ஒன்றையே நாம் மறந்துவிடுவோம்” என்கிறார் நஃபீஸ்.

Ayodhya dispute Dhannipur village gets new mosque Ayodhya dispute Dhannipur village gets new mosque

வேளாண் துறைக்கு சொந்தமான நிலம் தான்

தனிப்பூரில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது, எங்கள் பக்கத்தில் 3 மசூதிகள் உள்ளது. ரௌனஹி பகுதியில் ஒரு டஜனுக்கும் மேல் மசூதிகள் உள்ளது என்று கூறுகின்றனர். முகமது இஸ்லாம் கான் என்பவர் கூறுகையில் “இந்த இடமானது மாநில அரசின் வேளாண் துறைக்கு சொந்தமானது. இங்கு அரிசியும் கோதுமையும் விளைவிக்கப்பட்டது. இந்த கோதுமை வயல்களுக்கு நடுவே ஷாகடா ஷாவின் புனித தலம் உள்ளது. அங்கே இருக்கும் கல்வெட்டுப் படி பார்த்தால் இந்த புனித தலம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்கிறார்.

மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் பேசிய போது இந்த புனித தலத்திற்கு எந்த விதமான பிரச்சனையும் வராமல் இங்கு மசூதி கட்டி எழுப்பப்படும். இந்த நிலம் வேளான் துறைக்கு சொந்தமானது. 5 ஏக்கர் நிலமானது புனித தலத்தின் எல்லைக்குள் வரவில்லை. ராம ஜென்ம பூமிக்கு அருகிலோ அல்லது பரிக்ரமா மார்கிலோ இந்த மசூதியை கட்ட இயலாது. ஏற்கனவே ஏற்பட்ட சிக்கல் போல் இப்போது ஏற்பட வேண்டாம் என்று யோசனை செய்து இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Babri Masjid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment