Maulshree Seth
அடுத்த வாரம் ராமர் கோயிலின் பூமி பூஜையை ஒளிபரப்பும் செய்தி சேனல்கள் எந்தவொரு விவாதத்திற்கும் சர்ச்சைக்குரிய கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைக்கக்கூடாது என்ற உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும் என்று அயோத்தி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எந்தவொரு மதம், சமூகம் அல்லது பிரிவு, அல்லது எந்தவொரு குறிப்பிட்ட தனிநபர் குறித்தும் எந்தக் கருத்தும் பேசக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக அமைய உள்ள ராமர் கோவிலுக்கு வருகிற 5ம் தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. கோலாகலமாக நடைபெற உள்ள இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
மிகவும் சிறப்பாக நடைபெற உள்ள இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் பிரதமருடன் பங்கேற்கிறார். பிரதமரும், ஆர்.எஸ்.எஸ். தலைவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
கொரோனாவை வீழ்த்தி வீடு திரும்பிய மனைவி – ‘கபாலி’ கம்பேக் கொடுத்த ரஜினி ரசிகர்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இந்த நிகழ்வில், கொரோனா காரணமாக 200 பேரை மட்டுமே அழைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார். எனவே 4 பிரிவுகளில் மொத்தம் 200 பேர் அழைக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், ராமர் கோவில் பூமி பூஜை தொடர்பாக, விவாதம், நிகழ்ச்சிகளை அயோத்தியிலிருந்து ஒளிபரப்பினால், அதில் வழக்கு தொடர்பான சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி பேசக் கூடாது என டிவி சேனல்களுக்கு, அயோத்தி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையின் படி, ஒரு சேனல் காரணமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு நிலைமை ஏற்பட்டால் மின்னணு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும், அசம்பாவிதங்கள் ஏதேனும் இருந்தால் அது எனது தனிப்பட்ட பொறுப்பாகும்" என்று ஊடக நிறுவனங்களின் தலைவர்களால் கையெழுத்திடப்பட வேண்டும் இன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகளில் விவாதங்களுக்கு அழைக்கப்படும் கட்சிகளில், "இந்த திட்டத்திற்கு சர்ச்சைக்குரிய நபர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள்" என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். எந்தவொரு "தர்மம், சம்பிரதாயம், பந்த் (மதம், சமூகம் அல்லது பிரிவு)", அல்லது "வியாகி விஷேஷ் (எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரும்)" பற்றி எந்த கருத்தையும் பேசக் கூடாது.
புலிகளின் மிகப்பெரிய புகலிடமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை…
தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பதை சேனல்கள் உறுதிசெய்ய வேண்டும். சேனல் ஊழியர்கள், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
இதுகுறித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பேசிய துணை இயக்குனர் முர்லி தார் சிங், "இந்த நிகழ்வை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஒரு தனி ஊடக மையம் மற்றும் நேரடி ஒளிபரப்பு இருக்கும். சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், கோவிட்டைக் கருத்தில் கொள்வதற்கும், செய்தி சேனல்கள் முன் அனுமதி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும், சர்ச்சைக்குரிய அறிக்கைகள் இங்கு எதுவும் இல்லை, சரியான நெறிமுறை பராமரிக்கப்படுகிறது" என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil