Ankita Dwivedi Johri
Ayodhya land dispute case hearing ram janmabhoomi babri masjid demolition : ஹர்ஷ் ஸ்ரீவஸ்தவிற்கும் சர்ஃபார்ஜ் அலிக்கும் எண்ண ஓட்டங்கள் ஒன்றாய் தான் இருக்கிறது. அத்வாத் பல்கலைக்கழகத்தில் இருவரும் ஒன்றாய் தான் படித்தார்கள். டெலிகாம் நிறுவனம் ஒன்றில் இருவரும் நான்கு வருடங்கள் வேலை செய்தார்கள். தற்போது இருவரும் ராம் ஜென்ம பூமிக்கு மிக அருகில் ஹனுமன் கர்ஹி என்ற இடத்தில் சியோமியின் ஷோரூம் ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார்கள்.
அக்டோபர் 17ம் தேதி அயோத்தி வழக்குகளின் விசாரணை அனைத்தும் முடிவிற்கு வருகிறது. இதனால் அனைவரின் எண்ண ஓட்டங்களும் அயோத்தியின் வழக்கில் தான் இருக்கிறது என்று கூறினாலும் மிகையாகாது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் தீபாவளி திருநாளுக்கு மொத்த உத்திரப் பிரதேசமும் காத்திருப்பது போல், அயோத்தி விவகாரத்தால் பிரச்சனைகளை அடைந்த மக்களும் அயோத்தி வழக்கின் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
இது குறித்து ஸ்ரீவஸ்தவ் கூறுகையில் “மக்கள் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு மூவ்- ஆன் செய்ய வேண்டும். மதம் முக்கியம் தான். ஆனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அதற்கு வேலையேயில்லை என்று கூறிய அவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு கோவிலுக்கு சாதகமாக வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அலி தன்னுடைய கருத்தை கூறுகையில் “ஒரு முஸ்லிமாக மசூதிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மகிழ்ச்சி அடைவேன்” ஆனால் கோவில் வரும் பட்சத்தில் சுற்றுலாத்துறை மேம்பாடு அடையும். இங்கு வியாபாரம் அதிகரிக்கும். அதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால் கோவில் வந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படிக்கும் ஷிவம் யாதவ் இது குறித்து பேசுகையில் “இந்த நகரத்தில் எதுவும் இல்லை. மால்கள், ஹோட்டல்கள், அசைவ உணவுகள். ஆனால் சர்ச்சை மட்டும் உள்ளது. மக்கள் மத்தியில் நம்பிக்கையற்ற தன்மையை அரசியல்வாதிகள் விதைத்துவிட்டனர் என்று கூறுகிறார்.
ராஜத் ஸ்ரீவஸ்தவ் நீட் எக்ஸாமிற்காக தேர்வாகி வருகிறார். இந்துவோ முஸ்லிமோ இன்றைய சூழலில் இங்கு வாழும் புதிய தலைமுறையினருக்கு நல்ல கல்வி தான் தேவை என்று கூறுகிறார்.
அப்துல் ரசாக் மாணவரும் நீட் தேர்விற்காக ஆயத்தம் ஆகி வருகிறார். அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்புகையில் “அரசியல்வாதிகள் மக்களை உண்மையான பிரச்சனைகளில் இருந்து விலக்கி வைத்துள்ளனர். யாரேனும் கல்வி, மேம்பாடு குறித்து கேள்வி எழுப்பினால் இங்கு ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறி பிரச்சனையை முடிக்கத்தான் பார்க்கிறார்கள்” என்று கூறுகிறார்.
பெண்கள் என்ன கூறுகிறார்கள்?
அம்ரிதா வெர்மா. 22 வயதான முதலாமாண்டு டி-ஃபார்ம் மாணவி. இங்கு பெண்களுக்கான அரசின் முக்கியத்துவங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. பெண்களின் நலன்கள் மீதும் அரசு அக்கறை செலுத்த வேண்டும். இந்த விவாதங்களின் முடிவுகள் பிரச்சனையை உருவாக்கிவிடாமல் இருந்தால் சரி தான். பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் கேள்விமட்டுமே படுகின்றோம். நிஜவாழ்வில் எங்களுக்கு எங்கும் பாதுகாப்பு கிடையாது.
கந்தி யாதவ் கூறுகையில் “இங்கு பெண்கள் அலைபேசிகள் வைத்திருக்க அனுமதிப்பது கிடையாது. நீதிமன்றம் இங்கு ஒரு கல்லூரியை கட்டி இந்து மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் ஒன்றாக படிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்” என்று கூறுகிறார்.
சங்கல்ப் அக்காடெமியில் ஜெனெரல் ஸ்டடீஸ் பாடம் எடுக்கும் அஜய் சௌத்திரி கூறுகையில் ”இந்த கல்வி நிலையத்தில் வேலை பார்க்கும், படிக்கும் அனைவரும் 1992ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள். இங்கு பெரும்பாலானோர் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் இது எப்படி எங்களை மேம்படுத்தும். இங்கு படிக்கும் அனைவரும் வெளியூர்களில் கிடைக்கும் வேலையை நம்பித்தான் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.