இந்தோ-இஸ்லாமிய கலாச்சார நிறுவனம் அறக்கட்டளை, அயோத்தியில் தன்னிபூர் கிராமத்தில் மாநில அரசு ஒதுக்கியுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் கட்டப்படவுள்ள மசூதி மற்றும் பிற வசதிகளின் வரைபடத்தை சனிக்கிழமை வெளியிட்டது.
அயோத்தியில் மசூதி கட்டப்படுவதற்காக முன்மொழியப்பட்டுள்ள வரைபடங்களுக்கு சரியான நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டால், அடிக்கல் நாட்டும் பணிகள் குடியரசு தினத்திலிருந்தே தொடங்கப்படலாம் என்று இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. சரியான நேரத்தில் அனுமதி வழங்கப்படாவிட்டால், அடிக்கல் நாட்டும் பணி சுதந்திர தினத்தில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, அந்த இடத்தில் மசூதியைத் தவிர, இந்தோ-இஸ்லாமிய கலாச்சாரம் ஆய்வு மையம், அறக்கட்டளை மருத்துவமனை, அன்னதானம் மண்டபம், அருங்காட்சியகம் மற்றும் பொது நூலகம் போன்ற பிற வசதிகளும் கட்டப்படும் என்று அறக்கட்டளை உறுதிப்படுத்தியிருந்தது.
சனிக்கிழமை காலை, டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.எம்.அக்தர், கட்டிடக்கலை மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனர் டீன் ஒரு உரையாடலின்போது இந்த திட்டத்தின் முழு பகுதியும் வடிவமைப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவர் மசூதி திட்டத்திற்கான கட்டிடக் கலை ஆலோசகாராகவும் உள்ளார். இவர் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருக்கும் ஓய்வுபெற்ற ஜே.என்.யூ பேராசிரியர் புஷ்பேஷ் பந்த், மருத்துவமனைக்கு நிதி திரட்ட ஆர்வம் காட்டிய மும்பையைச் சேர்ந்த புரவலர் முகமது ஷோப் ஆகியோருடன் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
“பேராசிரியர் அக்தர் முழுமையாக மசூதியின் வளாக திட்டத்தையும் 4 மாடி 200 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையும் காட்சிப்படுத்தியுள்ளார். இதில் அனைத்து நவீன வசதிகளும் அடங்கியுள்ளன. மசூதி கோள வடிவத்தில் இரண்டு தளங்களைக் கொண்டிருக்கும். காலநிலை மாற்றம் குறித்த செய்தியை வழங்குவதே முழு கருத்தாகும். இது கவலைக்குரிய விஷயம் என்பதால் அதில் நமது கவனம் அவசியம் தேவையாக உள்ளது. இது வெறுமனே அடையாள ரீதியாக இருக்காது. ஆனால் அதை, அனைத்து ஆற்றல் கொண்ட கட்டிடமாக மாற்றுவோம். மசூதியின் அனைத்து மின் தேவைகளும் சூரியஒளி மின் பலகைகளின் உதவியுடன் பூர்த்தி செய்யப்படும். மேலும், மின்சார இணைப்பு இருக்காது” என்று அறக்கட்டளையின் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அதர் ஹுசைன் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil