ராமர் கோவில் பூமி பூஜை: தூர்தர்ஷனில் நேரலை ஒளிபரப்ப ஏற்பாடு

Ayodhya ram temple construction : அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது இந்து மக்களின் 500 ஆண்டுகால கனவு ஆகும். தற்போது அது நனவாகும் நாள் வந்துள்ளது

By: Updated: July 27, 2020, 07:14:42 AM

Avaneesh Mishra , Krishn Kaushik

அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில், இந்த நிகழ்வு, தூர்தர்சன் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்ற உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா, இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை, மத்திய அரசின் தூர்தர்சன் சேனல் நேரலையாகவும், மற்ற சேனல்கள், அதனிடமிருந்து பெற்றும் ஒளிபரப்ப உள்ளன.
பிரதமர் மோடி பங்கேற்ற மற்ற நிகழ்ச்சிகளையும், தூர்தர்சன் நேரலை செய்துவருவதாக பிரசார் பாரதி உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத் தேசிய செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமியில், ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உடன், சாமியார்கள், ஸ்காலர்கள், டிரஸ்ட் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

பூமி பூஜை நடைபெற உள்ள இடத்தில் நடந்துவரும் பணிகளை, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜூலை 25ம் தேதி ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடியின் அயோத்தி வருகையை ஒட்டி, சுவாச் அபியான் திட்டத்தின் கீழ், அங்கு சிறப்பு தூய்மை திட்டங்களை ஆகஸ்ட் 3ம் தேதி வரை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது இந்து மக்களின் 500 ஆண்டுகால கனவு ஆகும். தற்போது அது நனவாகும் நாள் வந்துள்ளது. இந்த நிகழ்வை கொண்டாடும் பொருட்டு, அயோாத்தியில் உள்ள ஒவ்வொருவரும், ஆகஸ்ட் 4 மற்றும் 5ம் தேதிகளில், இரவில் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

 

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா டிரஸ்டின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, 22ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, பிரதமர் மோடி, ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று தாங்கள் விடுத்த அழைப்பை அவர் ஏற்று கலந்துகொள்ள சம்மதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பூமி பூஜை நிகழ்ச்சி நண்பகல் வேளையில் நடைபெற உள்ளதாகவும், இதற்கு முன்னதாக பிரதமர் மோடி, ஹனுமான் கார்கி, ராம்லல்லா சிலைகள் வைக்கப்பட்டுள்ள கோயில்களில் வழிபாடு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, 150 அழைப்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 200 பேர் கலந்துகொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்த 370வது சட்டப்பிரிவை, மத்திய அரசு நீக்கியதன் முதலாம் ஆண்டு நிறைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோயில் மற்றும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே எழுப்பப்பட்டு வந்த நிலையில், அப்போதிருந்த கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால் நடைமுறைப்படுத்த இயலவில்லை

3070வது சட்டப்பிரிவை நீக்கி 3 மாதத்திற்குள், அதாவது, 2019ம் ஆண்டு நவம்பர் மாதம், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சர்ச்சைக்குரிய அயோத்தி விவகாரத்தில், ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது மட்டுமல்லாது, அந்த இடத்தை மத்திய அரசு நியமிக்கும் டிரஸ்டிடம் வழங்க வேண்டும் என்றும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Ayodhya, Aug 5: PM at Ram temple event will be live on DD

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Ayodhya pm modi ram temple inauguration ram mandir ayodhya

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X