Advertisment

ராமர் கோவில் திறப்பு விழா; பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் நமது ராமர் வந்துள்ளார் - மோடி

Ram Mandir Ayodhya Inauguration Live Updates: 22-01-2024 : ராமர் கோயில் பிரதிஷ்டை விழா தொடர்பான எல்லா செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
modi ram temple

IE Tamil Updates

Ram Mandir Ayodhya Inauguration Live Updates: பல வருடங்கள் சர்ச்சைக்கும், வாக்கு வாதத்திற்கும், சட்டபோராட்டத்திற்கு பிறகு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. எல்லா ஏற்பாடுகளும் நிறைவடைந்து ராமர் கோயில் பிரதிஷ்டை விழா மதியம் 12.20 மணிக்கு தொடங்க உள்ளது. பிரதமர் அயோத்திக்கு சற்று நேரத்தில் வந்துவிடுவார். ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை,  அவர் தொடங்கி வைப்பார். ராமர் சன்னதி நாளை முதல் மக்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும்.  இந்த நிகழ்வில் சுமார் 8 ஆயிரம் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

Read in English : Ayodhya Ram Mandir Inauguration Live Updates: All decked up, temple town set for consecration ceremony amid high security

Read in Malayalam : അയോദ്ധ്യയില്‍ ഇന്ന് നടക്കുന്ന ചടങ്ങുകള്‍ എന്തൊക്കെ? Ayodhya Ram Mandir Inauguration Live Updates

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 22, 2024 21:18 IST
    டெல்லி இல்லத்தில் ராம் ஜோதி ஏற்றினார் மோடி

    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லியிலுள்ள இல்லத்தில் ராம் ஜோதி விளக்கேற்றினார்.



  • Jan 22, 2024 20:44 IST
    ராமர் கோவில் நிகழ்ச்சி நேரலை; இந்துக்களுக்கு உரிமை உண்டு- நிர்மலா சீதாராமன்


    ராமர் கோவில் நிகழ்ச்சி நேரலையை காண அனைத்து இந்துக்களுக்கும் உரிமை உண்டு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



  • Jan 22, 2024 20:07 IST
    ராமர் கோவில் கேள்வி; கமல்ஹாசன் பதில்

     

    அயோத்தி ராமர் கோவில் குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதுகுறித்து பேசியுள்ளேன். அதே கருத்துதான் இன்றும்” என்றார்.



  • Jan 22, 2024 19:42 IST
    தமிழ்நாடு மத நல்லிணக்க மண்- மு.க. ஸ்டாலின்

    தமிழ்நாடு மத நல்லிணக்க மண் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “சமூகநீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு!
    சேலத்தில் நடந்தேறிய  @dmk_youthwing #DMKYW4StateRights மாநாடு இந்திய ஒன்றியம் முழுமைக்கும் இதை உணர்த்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.



  • Jan 22, 2024 19:07 IST
    மன்னர்கள் செய்ததை மோடி செய்துள்ளார்- இளையராஜா


    “அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பெருமை நரேந்திர மோடியை சாரும். மன்னர்கள் செய்ததை அவர் செய்துள்ளார். அயோத்தி பற்றி பேசும்போதே கண்ணீர் வருகிறது” என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.



  • Jan 22, 2024 18:40 IST
    ராமர் பிறந்த இடத்தில் அவருக்காக கோயில் கட்டியுள்ளார் மோடி:  இளையராஜா புகழாரம்

    இசையமைப்பாளர் இளையராஜா: “அயோத்தி ராமர் கோயில் இந்தியா முழுவதற்குமான கோயிலாகத் திகழும். ராமர் பிறந்த இடத்தில் அவருக்காக கோயில் கட்டியுள்ளார்  பிரதமர் மோடி; மன்னர்கள் கோயில் கட்டிய நிலையில் ஒரு பிரதமர் கோயில் கட்டியுள்ளார்” என்று புகழாரம் சூட்டினார்.



  • Jan 22, 2024 18:31 IST
    ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம் - ரஜினிகாந்த் பேட்டி

    நடிகர் ரஜினிகாந்த்: “வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமர் கோயில் நிகழ்வில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நால் பாக்கியம். ராமரின் சிலை மிகவும் சிறப்பாக இருந்தது. இனி ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்கு வருவேன்” என்று கூறினார்.



  • Jan 22, 2024 18:26 IST
    ராம ராஜ்ஜியத்தின் அஸ்திவாரம் அமைத்த நாள் இன்று - ஆளுநர் ஆர்.என். ரவி

    சென்னையில் நாரத காண சபா நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி “ராம ராஜ்ஜியத்தின் அதிவாரம் அமைத்த நாள் இன்று; சுதந்திர தினம் எவ்வளவு முக்கியமோ அது போன்ற நாள் இது. ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப் பார்க்க முடியாது. தமிழ் இலக்கியங்களில் ராமர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது” என்று பேசினார். 



  • Jan 22, 2024 18:24 IST
    ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் - ஹேமா மாலினி

    'வரலாற்று ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் செழுமைப்படுத்தும் பிராண பிரதிஷ்டையில் கலந்து கொண்டதால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று ஹேமா மாலினி கூறினார்.

    பா.ஜ.க எம்.பி ஹேமமாலினி, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் ‘பிராண பிரதிஷ்டை’ விழாவை “வரலாற்று ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் செழுமைப்படுத்துகிறது” என்று கூறினார். இது 500 ஆண்டுகளாக நமது தேசம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்வு என்றும் அவர் கூறினார்.



  • Jan 22, 2024 18:02 IST
    கும்பாபிஷேகத்திற்குப் பிறகு ராமர் கோயில் வீடியோ

    ‘பிராண பிரதிஷ்டை’க்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அழைப்பாளர்களிடம் பேசுகையில், பல வருட காத்திருப்புக்குப் பிறகு, இறுதியாக அயோத்திக்கு ராமர் வந்தடைந்தது தனக்கு உணர்ச்சிகரமான தருணம் என்று கூறினார். “இந்தப் பெரிய கோயில் அவருக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், ராம் லல்லா இனி கூடாரத்தில் வசிக்க மாட்டார்” என்று பிரதமர் கூறினார்.

    பிராண பிரதிஷ்டை என்பது ஒரு சிலையை தெய்வமாக மாற்றும் செயலாகும், இது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ளும் மற்றும் வரங்களை வழங்கும் திறனை அளிக்கிறது. இதற்காக, சிலை பல்வேறு கட்டங்களை கடந்து செல்ல வேண்டும். இங்கே நாம் சில முக்கிய படிகளை விவரிக்கிறோம். சம்பந்தப்பட்ட படிகளின் எண்ணிக்கை விழாவின் அளவைப் பொறுத்தது.



  • Jan 22, 2024 17:40 IST
    ராம் லல்லா தரிசனம் நாளை தொடங்கும் - ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைமை அர்ச்சகர் தகவல்

    இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடந்த ‘பிராண பிரதிஷ்டை’ விழாவுக்குப் பிறகு, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ராம் லல்லாவின் தரிசனம் நாளை ஜனவரி 23-ம் தேதி தொடங்கும் என்று கூறினார்.



  • Jan 22, 2024 16:17 IST
    கட்டிட தொழிலளர்களுக்கு மோடி பூக்கள் தூவி கவுரவம்

    ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டிட தொழிலளர்களுக்கு பூக்கள் தூவி பிரதமர் மோடி கவுரவம் அளித்தார். 



  • Jan 22, 2024 16:15 IST
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு: மோடி உரை

    அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் "பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்து விட்டார்.ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோவில் கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். இந்த நன்னாளில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. அடிமை தனத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம். கோவில் கட்டுவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு ராமரிடம் மன்னிப்பு கோருகிறேன். கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம். நாட்டின் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறைகள் இருப்பின் ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் பிறகும் மக்கள் இந்த நாளை நினைவில் வைத்திருப்பார்கள்." என்று கூறினார். 



  • Jan 22, 2024 16:15 IST
    ராமர் கோயில் திறப்பு: சிரஞ்சீவி ராம் சரண் வருகை

    அயோத்தி ராமர் கோயில் திறப்பிருக்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் வருகை தந்தனர். 



  • Jan 22, 2024 15:57 IST
    வதந்தி பரப்பும் பா.ஜ.க-வினருக்கு கண்டனம்!

    "ராமர் கோயில் திறக்கப்படும் நாளில்,  தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூசைகள் செய்தவற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர்.  மாநாட்டு அரங்கில் இருந்தாலும்,  தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து,  உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.

    ஒரு வதந்தியை வாட்ஸ்ஆப்,  இதர சமூக வலைத்தளங்கள்,  தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.  இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

     



  • Jan 22, 2024 15:50 IST
    நிர்மலா சீதாராமன் மீது சேகர் பாபு  தாக்கு 

    "அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் போது முக்கிய பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு செல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால் அவர் ஆன்மீகத்திற்காக வரவில்லை. ஆன்மீகத்தில் அரசியல்  நடத்தவே அவர் வந்திருப்பது தெரிகிறது 

    பெரிய பதவியில் இருக்கக் கூடிய ஒருவர் இவ்வளவு கீழே இறங்கி வந்து பொய்களை உரைப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார். 



  • Jan 22, 2024 15:49 IST
    நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கண்டனம்

     

    "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  திட்டமிடப்பட்ட பரப்பிய வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை என திட்டமிட்டு வதந்தி" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 



  • Jan 22, 2024 15:44 IST
    ஸ்டாலின் அறிக்கை

    "தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள் பக்தியை தங்களது தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். பெருமாளையும் வழிபடுவார்கள், பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள், பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். 

    இந்த அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர் குலைக்க பாஜகவில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்கள் செயல்படுகிறார்கள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 



  • Jan 22, 2024 14:50 IST
    11 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் பிரதமர் மோடி

    'பிரான் பிரதிஷ்டா' சடங்குகளை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது 11 நாள் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.



  • Jan 22, 2024 14:49 IST
    தீர்க்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் : உத்தரபிரதேச முதல்வர் கருத்து

    ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவைத் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கப்பட்ட இடத்தில் உள்ளது என்று கூறினார்.



  • Jan 22, 2024 14:47 IST
    ராமர் இறுதியாக அயோத்திக்கு வந்திருப்பது எனக்கு உணர்ச்சிகரமான தருணம் : மோடி

    ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டை'க்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அழைப்பாளர்களிடம் பேசுகையில், பல வருட காத்திருப்புக்குப் பிறகு, ராமர் இறுதியாக அயோத்திக்கு வந்திருப்பது எனக்கு உணர்ச்சிகரமான தருணம். “இந்தப் பெரிய கோயில் அவருக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், ராம் லல்லா இனி கூடாரத்தில் வசிக்க மாட்டார்என்று பிரதமர் கூறினார்.



  • Jan 22, 2024 14:02 IST
    ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பரிசு வழங்கிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

    உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் 'பிரான் பிரதிஷ்டா' விழாவில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் பிரதியை பரிசாக வழங்கினார்.



  • Jan 22, 2024 14:01 IST
    தெய்வீக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது பெரும் பாக்கியம் : பிரதமர் மோடி

    அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் 'பிரான் பிரதிஷ்டா' சடங்குகளுக்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கும்பாபிஷேகம் அனைவரையும் உணர்ச்சிகளால் நிரப்பும் ஒரு அசாதாரண தருணம் என்று கூறினார். மேலும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்று இந்த தெய்வீக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது பெரும் பாக்கியம்,"  என்று மோடி தெரிவித்துள்ளார்.



  • Jan 22, 2024 13:28 IST
    ராம் லல்லாவின் சிலை உருவாக்கிய கர்நாடக சிற்பிக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து

    ராம் லல்லாவின் (சிறுவயதில் ராமர்) சிலைகளை உருவாக்கிய மூன்று சிற்பிகளில் ஒருவரான அருண் யோகிராஜுக்கு ஜனவரி 1 முதல் கர்நாடக பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மூன்று சிலைகளில் எது சன்னதியில் வைக்கப்படும் என்பதை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் யோகிராஜின் பணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    மைசூருவில் வசிக்கும் யோகிராஜ், பிரபல சிற்பிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது குடும்பம் கடந்த ஐந்து தலைமுறைகளாக 250 ஆண்டுகளாக  இந்த வேலையைச் செய்து வருவதாக அவர் கூறுகிறார்.



  • Jan 22, 2024 13:23 IST
    அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை விழாவில் பக்தர்கள்

     



  • Jan 22, 2024 12:46 IST
    ராம் லல்லா சிலை திறக்கப்பட்டது

    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டது. சிலை திறக்கப்பட்ட போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மலர் மழை பொழிந்தன. 



  • Jan 22, 2024 12:46 IST
    ராம் லல்லா சிலை திறக்கப்பட்டது

    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டது. சிலை திறக்கப்பட்ட போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மலர் மழை பொழிந்தன. 



  • Jan 22, 2024 12:28 IST
    ‘பிரான் பிரதிஷ்டா’ விழாவை தொடங்கி வைத்தார் மோடி

    ராமஜென்மபூமி கோவிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, 'பிரான் பிரதிஷ்டா' சடங்குகளை துவக்கி வைத்தார். ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த தீட்சித் தலைமையில் 121 அர்ச்சகர்கள் இன்று கும்பாபிஷேகம் செய்கின்றனர்.

    மகாந்த் நிருத்ய கோபால் தாஸ் நாற்காலியிலும், பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மோகன் பகவத், ஆளுநர் ஆனந்தி பென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சிலை முன் கோவில் கருவறைக்குள் அமர்ந்துள்ளனர்.



  • Jan 22, 2024 12:15 IST
    ராமர் கோயிலில் மோடி

    ராமர் கோயிலுக்கு வந்தடைந்தார் மோடி. இன்னும் சற்று நேரத்தில் பூஜைகள் தொடக்கம் 

     



  • Jan 22, 2024 12:15 IST
    ராமர் கோயிலில் மோடி

    ராமர் கோயிலுக்கு வந்தடைந்தார் மோடி. இன்னும் சற்று நேரத்தில் பூஜைகள் தொடக்கம் 

     



  • Jan 22, 2024 12:06 IST
    'இன்று ராம தீபாவளி' : முகேஷ் அம்பானி, நீதா அம்பானி அயோத்தி வருகை

    தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராமர் கோவில் சென்றடைந்தனர். 



  • Jan 22, 2024 11:30 IST
    அயோத்தி வந்தடைந்தார் மோடி

    பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு வந்தடைந்தார்.  ‘பிரான் பிரதிஷ்டா’ சடங்குகளை தொடங்கி வைக்க உள்ளார். ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த தீட்சித் தலைமையில் 121 அர்ச்சகர்கள் இன்று கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர். செவ்வாய்கிழமை முதல் பொதுமக்கள் வழிபாடுக்கு அனுமக்கப்பட உள்ளனர். 



  • Jan 22, 2024 11:30 IST
    அயோத்தி வந்தடைந்தார் மோடி

    பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு வந்தடைந்தார்.  ‘பிரான் பிரதிஷ்டா’ சடங்குகளை தொடங்கி வைக்க உள்ளார். ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த தீட்சித் தலைமையில் 121 அர்ச்சகர்கள் இன்று கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர். செவ்வாய்கிழமை முதல் பொதுமக்கள் வழிபாடுக்கு அனுமக்கப்பட உள்ளனர். 



  • Jan 22, 2024 11:00 IST
    ஆலியா பட், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப் அயோதிக்கு வருகை

    அமிதா பச்சன், பிஷேக் பச்சன், ஆலியா பட், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், இயக்குநர் ரோஹித் ஷெட்டி அயோத்திக்கு வந்துள்ளனர்.

     



  • Jan 22, 2024 10:46 IST
    ராமர் கோவிலுக்கு வந்தடைந்த மோகன் பகவத்

    ராமர் கோவிலுக்கு வந்தடைந்த, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத். பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.



  • Jan 22, 2024 10:33 IST
    யோகி ஆதித்யநாத் ராமர் கோவிலுக்கு வருகை

    ராமர் கோவிலுக்கு வந்தார் யோகி யோகி ஆதித்யநாத். அங்கிருந்த பொது மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.  



  • Jan 22, 2024 10:17 IST
    அம்பானி, அதானி முதல் அமிதா பச்சன் வரை : கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் லிஸ்ட்

    ராம்நாத் கோவிந்த், பிரதிபா பாட்டில், வெங்கையா நாயுடு, முன்னாள் சபாநாயகர்  மீரா குமார், சுமித்ரா மஹாஜன், முகேஷ், அனிதா அம்பானி, லக்‌ஷ்மி நிவாஸ் மிட்டல், நஸ்லி வைடையா, கௌதம் அதானி, அஜய் பிரமல்

    அனில் அகர்வால், ரேகா ஜுன்ஜுன்வாலா, ஆதி காத்ரேஜ், என்.என்.டி முதல்வர் ஏ.எம் நாயக், சுதா மூர்த்தி, சுனில் மிட்டல், சச்சின், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பி.டி உஷா, சுனில் காவஸ்கர், சாய்னா நேவால்

    அமிதாப் பச்சன், ஆலியா பட், ரன்பீர் கபூர், ரஜினிகாந்த், ஹேமா மாலினி, ஆஷா போஸ்லே, உஷா மங்கேஷ்கர், அருண் கோவில், பிரசூன் ஜோஷி, சங்கர் மகாதேவன், சுபாஷ் காய், அனுராதா பாட்வால்



  • Jan 22, 2024 09:44 IST
    அயோத்தி வந்தடைந்த 5 லட்சம் லட்டுக்கள்

    மத்திய் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் கோவிலில் இருந்து 5 லட்சம் லட்டுக்கள் தயார் செய்து, அயோத்திக்கு  அனுப்பப்பட்டுள்ளது. ஒரு லட்டு 50 கிராம் வரை எடை கொண்டது.



  • Jan 22, 2024 09:35 IST
    பிரதிஷ்டை நிகழ்வை வழி நடத்தும் 121 பூசாரிகள்

    ஆச்சாரியா லக்‌ஷ்மிகாந்த் தீக்‌ஷித் தலைமையில் 121 பூசாரிகள், பிரதிஷ்டை நிகழ்வை, முன்நின்று வழி நடத்துகின்றனர். இந்த நிகழ்வை தொடர்ந்து, விழாவில் கலந்து  கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் ,திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் குழந்தை ராமரை, பிரதமர் முன்னிலையில் வழிபடுவர். இன்று மாலை வரை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் ராமர் சிலையை வழிபடுவார்கள். மேலும் இன்று அயோத்தியில் தீபாவளி கொண்டாடப்படும். பல விளக்குகள் ஏற்றப்படும். ராமர் வருகையை குறிப்பிட இந்த நிகழ்வு நடைபெறும்.



  • Jan 22, 2024 08:56 IST
    அயோத்தி ராமர் கோவிலுக்கு மேலாக  மலர் தூவும் ராணுவ விமானம்

    இந்திய ரணுவத்தின் விமானங்கள், அயோத்தி ராமர் கோவிலுக்கு மேலாக  மலர் தூவ உள்ளது.



  • Jan 22, 2024 08:45 IST
    உணர்ச்சி நிறைந்த மக்கள் அனுபவத்தின் தொகுப்பு



  • Jan 22, 2024 08:44 IST
    பிரதமர் மோடியின் நேரப் பட்டியல்

    பிராண பிரதிஷ்டை நிகழ்வை பிரதமர் மோடி மதியம் 12.05 தொடங்கி வைக்கிறார். 5 மணி நேர பட்டியல் இதோ.

    10.25 : அயோத்தி விமானநிலையத்திற்கு வரும் மோடி, தனி ஹெலிகாப்டர் மூலமாக நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருவார்.

    10.55: கோவில் உள்ள இடத்திற்கு பிரதமர் வருவார்.

    11.00- 12.00- இந்த நேரத்தில் கோவிலையும், சுற்றுப்புர இடங்களையும் பார்வையிட வாய்ப்புள்ளது.

    12.05 முதல் 12.55:  பிராண பிரதிஷ்டை நடைபெறும்

    1.00 : மக்கள் கூடி இருக்கும் இடத்திற்கு மோடி வருவார்.

    1.00 முதல் 2.00: மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறும்.

    2.10 மணிக்கு : குபேர் திலா சிவன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்



  • Jan 22, 2024 08:27 IST
    நேற்றே வந்த யோகி ஆதித்யநாத்: மோகன் பகவத்தை சந்தித்தார்

    ராமர் கோயில் திறப்பு நிகழ்வுக்கு முன்பாகவே  உத்தரபிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் அயோத்திக்கு வந்துள்ளார். ராமர் கோவில் திறப்பு விழாவின் ஏற்பாடுகள், தயாரிப்புகள் பார்வையிட்டார். மேலும் அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார்.  



  • Jan 22, 2024 08:16 IST
    ராமஜென்ம பூமியிலிருந்து கிடைத்த நேரடிக் காட்சிகள்



  • Jan 22, 2024 08:14 IST
    பிராண பிரதிஷ்டா நிகழ்வு எப்போது?

    ராமர் கோவில் திறப்பு விழாவின் பிராண பிரதிஷ்டா நிகழ்வு மதியம் 12.20 மணிக்கு தொடங்க உள்ளது. 1 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடையும். 7 ஆயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வு நடந்து முடிந்த பிறகு நரேந்திர மோடி பேச உள்ளார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment