அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள டிரஸ்ட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த டிரஸ்டின் முதல் உறுப்பினராக முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டும் பணிகள் வேகம்பிடித்தன. ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக டிரஸ்ட் அமைப்பது என்று முன்னதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் தற்போது அதற்கான டிரஸ்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டிரஸ்ட் குறித்த முறையான அறிவிப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரஸ்டின் முதல் உறுப்பினர் மற்றும் தலைவராக முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இல்ல முகவரியான ஆர்-20, கிரேட்டர் கைலாஷ் பகுதி -1, புதுடில்லி – 110048 என்ற முகவரியே, டிரஸ்டின் முகவரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பராசரன்?
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான ராம ஜென்மபூமி வழக்கில், இந்து அமைப்புகளின் சார்பில் பராசரன் வாதிட்டது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு, அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது. முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆட்சிக்காலங்களில் இவர் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.
ராம ஜென்மபூமி டிரஸ்ட், தற்போதைக்கு பராசரன் இல்ல முகவரியிலேயே இயங்கும் என்றும், டிரஸ்டுக்கான உறுப்பினர்கள் நியமனம் முழுவதுமாக நிறைவு பெற்றவுடன் அதிகாரப்பூர்வமான அலுவலகம் அமைக்கப்பட்டு ஆலோசனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரஸ்டில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள்…
2. ஜகத்குரு சங்கராச்சார்யா ஜோதிஷ்பீததீஸ்வர் சுவாமி வசுதேவானந்த் சரஸ்வதி ஜி மஹராஜ், பிரயாக்ராஜ்.
3. ஜகத்குரு மாதவச்சார்யா சுவாமி விஸ்வ பிரசன்னதீர்த்தஜி மஹராஜ், பெஜாவர் மடம், உடுப்பி.
4. யுகபுருஷ் பரமானந்த் ஜி மஹராஜ், ஹரித்வார்.
5. சுவாமி கோவிந்தேவ் கிரி ஜி மஹராஜ், புனே.
6. ஸ்ரீ விம்லேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா அயோத்தி.
7. ஹோமியோபதி டாக்டர் அனில் மிஸ்ரா, அயோத்தி.
8. ஸ்ரீ கமலேஸ்வர் சவுபால், பாட்னா.
9 மற்றும் 10வது உறுப்பினர்களை அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளவர்கள், இந்து மதத்தை பின்பற்றும் நபரை, பெரும்பான்மை ஆதரவுடன் தேர்வு செய்வர்.
11. மகந்த் தினேந்திர தாஸ், நிர்மோகி அஹாரா, அயோத்தி பைதக், அயோத்தி.( நிர்மோகி அஹாரா அமைப்பின் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி இவர் நியமிக்கப்படுகிறார்)
12. மத்திய அரசில், இணை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரத்தில் உள்ள, இந்து மதத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை மத்திய அரசு நியமிக்கும்
13. உ.பி., மாநில அரசில், செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.
14. அயோத்தி கலெக்டர் உறுப்பினராக இருப்பார். அவர் இந்துவாக இல்லாத பட்சத்தில், அயோத்தி கூடுதல் கலெக்டர், உறுப்பினராக இருப்பார்.
15. ராமர் கோயில் வளாகம் தொடர்பான விவகாரங்களில், நிர்வாகம் மற்றும் வளர்ச்சி கழக தலைவர் ஒருவரை அறக்கட்டளை உறுப்பினர்கள் நியமிப்பார்.
தமிழ் இந்தியன் எக்ஸt.me/ietamilபிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற