அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயிலைக் கட்டுவதற்குப் பொறுப்பான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் கீழ் பதிவு பெற்றுள்ளது. இது உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க உதவுகிறது.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
ராமர் கோயிலின் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும். ஜனவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஜனவரி 20-24 ஆம் தேதிகளுக்கு இடையே நடைபெறும் 'பிரான் பிரதிஷ்டா' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோவில் ஜனவரி 24 அன்று திறக்கப்பட உள்ளது. ஒரு முன்மொழியப்பட்ட அருங்காட்சியகம் அகழ்வாராய்ச்சி மற்றும் கட்டுமானத்தின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிக்கு வைக்கப்படும்.
இதற்கு தொல்லியல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. எனினும் இதற்கான அனுமதி இன்னமும் நிலுவையில் உள்ளது எனக் கூறப்படுகிறது.
ராமர்கோவிலுக்கு இதுவரை சுமார் ரூ.900 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. மொத்த கோவிலுக்கு ரூ.1,700-1,800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“