அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி சமீப வாரங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது, 2024 ஜனவரியில் சன்னதி பக்தர்களுக்காக திறக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தொழிலாளர்களின் எண்ணிக்கையை 550ல் இருந்து 1,600 ஆக உயர்த்தும் பணியை அறக்கட்டளை நிர்வாகம் மேற்கொண்டது.
18 மணி நேர ஷிப்ட் முறையில் நடைபெற்று வந்த பணிகள் தற்போது இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரமாண்டமான நடக்க உள்ள 'பிரான் பிரதிஷ்டை' (கும்பாபிஷேகம்) விழாவில் ராமர் சிலை நிறுவப்படும் கருவறை (கர்ப்ப கிரஹம்) வளாகத்தின் தரைத்தளத்தில் ஃபுளோரிங் மற்றும் மின்சாதனப் பணிகள் மட்டுமே மீதம் உள்ளன,
கோயிலைக் கட்டுவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் திட்ட மேலாளர் ஜகதீஷ் அபாலே, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், கோயிலின் தரை மற்றும் முதல் தளங்கள் இரண்டும் ஜனவரிக்குள் முடிக்கப்படும், என்றார்.
தற்போது, டிசம்பர் மாதத்திற்குள் தரை தளத்தை முடித்து, பிரதிஷ்டைக்கு தயார்படுத்துவதே எங்கள் முன்னுரிமை. முதல் தளத்தின் பணியும் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது, அதன் முக்கிய கட்டமைப்புகள், பலகைகள் மற்றும் தூண்கள் உள்ளிட்டவை ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும், இதனால் பக்தர்கள் சன்னதியை தரிசிக்க முடியும்.
ஆனால் மார்ச் 2024 வரை முதல் மாடியில் நுழைய அனுமதிக்கப்படாது, ஏனெனில் அங்கு வேலை முடிவடையாது.
மூன்று மாடி கட்டிடம் மற்றும் 'பர்கோட்டா' (வளாகத்தின் வெளிப்புற சுவர்) கட்டி முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்று அபாலே கூறினார்.
“மழை சில சமயங்களில் ‘பார்கோட்டா’ வேலையில் இடையூறு விளைவிக்கிறது. ஆனால், மழை பெய்தாலும் உள் கட்டுமான வேலைகள் குறையாமல் தொடர்கின்றன. 24 மணி நேரமும் நடந்து வருவதால், பணிகள் வேகமெடுத்துள்ளன.
அயோத்திக்கு வெளியில் இருந்து வரும் பொறியாளர்கள், மேற்பார்வை ஊழியர்கள் மற்றும் தினக்கூலிகள் உட்பட ஏறக்குறைய 1,200 தொழிலாளர்கள் இந்த வளாகத்தில் பணிபுரிகின்றனர், என்று அவர் மேலும் கூறினார்.
பொறியியல் குழுவுடன், அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா, கோயில் வளாகத்திற்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றபோது, மற்றொரு திட்ட அதிகாரியான ராதே ஜோஷி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செதுக்குதல் தொடர்பான பணிகள் மட்டுமே நிறுத்தப்படும் என்றும் மற்ற சிவில் பணிகள் தடையின்றி தொடரும் என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“