Ayodhya Ram Mandir Ceremany Latest Updates: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது. 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில், முக்கிய விருந்தினர்களாக , அயோத்தி நிலம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, அன்சாரி பங்கேற்றார். கொரோனா பரவல் காலம் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு 175 பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். மேடையில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் டிரஸ்ட் தலைவர் நிருத்ய கோபால்தாஸ் மகாராஜ், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் அமர பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, புதிய ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டிய பிறகு, சிறப்பு தபால்தலையை வெளியிட்டார்.
ராமர் கோயில் பூமி பூஜை விழாவையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரம் முழுவதும் மஞ்சள் வர்ணத்தால் நிரம்பியுள்ளது. இந்த நிகழ்ச்சி, தூர்தர்சன் சேனலில் நேரலை செய்யப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலம் என்பதால், பார்வையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 அடி இடைவெளியில் உட்காருவதற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை – இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ராமர் கோயில் பூமி பூஜை விழாவையடுத்து, அனுமார் கோயிலில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அயோத்தி நகரத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அகண்ட ராமாயண சொற்பொழிவு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றொரு தீபாவளி போன்று, அங்கு இரவு முழுவதும் வீடுகளில் தீபங்களால் ஒளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Ayodhya Ram Temple Bhumi Pujan: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். பாரம்பரிய சடங்குகள் நடைபெற்று வருகின்றன. உடனடியாக நிகழ்வுகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
அயோத்தி கோவில் அடிக்கல் நாட்டு விழா பற்றி, சிவசேனா பத்திரிகையான, ‘சாம்னா’வில் கூறப்பட்டுள்ளதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதை விட, வேறு சிறப்பான நேரம் இருக்க முடியாது. நாட்டை பீடித்துள்ள கொரோனா வைரஸ், ராமரின் அருளால் முற்றிலும் ஒழிந்து விடும்.இவ்வாறு, சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ‘பூமி பூஜை’ நடத்தினார். இதையொட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை சமூகங்களுக்கிடையிலான சகோதரத்துவத்தையும், பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் பழைய மரபுகளையும் பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் பழைய மரபுகளை நம் நாடு எப்போதும் ஆதரித்து வருகிறது. இதை நாம் இறுதி மூச்சு உள்ள வரை பாதுகாக்க வேண்டும்” மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை “ஐந்து நூற்றாண்டுகளின் தலைவர்” என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புதன்கிழமை புகழாரம் சூட்டினார்.
பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில், “திறம்பட வழிநடத்திய பல பெரிய தலைவர்களை நாடு கண்டது. ஒரு தசாப்தத்திலும் ஒரு நூற்றாண்டிலும் கூட தனித்துவமான தலைவர்களையும் (திறமை வாய்ந்தவர்களையும்) நாடு கண்டது. ஆனால், பிரதமர் மோடி ஐந்து நூற்றாண்டுகளின் தலைவராக மாறிவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், “இந்தியாவின் புகழ்பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, 500 ஆண்டுகால சர்ச்சையை தனது திறமையான தலைமையால் முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கு வழி வகுத்துள்ளார். இது மோடியின் வலுவான விருப்பத்தினாலும் ஸ்ரீராமரின் ஆசீர்வாதத்தினாலும் சாத்தியமானது” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதால் அவர் பதவியேற்பு உறுதிமொழியை மீறியுள்ளார்” என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி புதன்கிழமை தெரிவித்தார்.
“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. பிரதமர் நரேந்திர மோடி ராம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் பதவியேற்பு உறுதிமொழியை மீறியுள்ளார். இது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் தோல்வி நாள். இந்துத்துவாவின் வெற்றி நாள்” என்று அசாதுதீன் ஓவைசி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், “பிரதமர் இன்று உணர்ச்சிவசப்பட்டதாக கூறினார். குடியுரிமையின் சகவாழ்வையும் சமத்துவத்தையும் நான் நம்புகிறேன். ஏனென்றால், நானும் சமமாக உணர்ச்சிவசப்படுகிறேன் என்று கூற விரும்புகிறேன். பிரதமரே, நான் உணர்ச்சி வசப்படுகிறேன்ன். 450 ஆண்டுகளாக ஒரு மசூதி அங்கு இருந்தது என்பதால் நான் உணர்ச்சிவசப்படுகிறேன்” என்று அவர் கூறினார் .
பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யா ட்விட்டரில், “தர்மம் நிலைபெறுவதற்கு இந்துக்களால் அரசு கட்டுப்படுத்தப்படுவது முற்றிலும் அவசியம்” என்று கூறினார். இந்துக்கள் முன்பு கோயிலை இழந்தனர், ஏனென்றால், அவர்களுக்கு அரசின் மீது அதிகாரம் இல்லை. நாங்கள் மீண்டும் வந்தபோது, நாங்கள் மீண்டும் கட்டினோம்,” என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா மூலம், 500 ஆண்டுகால சர்ச்சை எவ்வாறு அமைதியாக தீர்க்கப்பட்டது என்பதை இந்தியா காட்டியுள்ளது” என்று புதன்கிழமை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை பகவான் ராமர் மிக உயர்ந்த மனித விழுமியங்களின் உருவகம் என்றும் அவர் ஒருபோதும் கொடுமை, வெறுப்பு அல்லது அநீதியில் தோன்ற முடியாது என்றும் கூறினார். ராகுல் காந்தி ட்விட்டரில், “இறைவன் புருஷோத்தமன் ராமர் மிக உயர்ந்த மனித விழுமியங்களின் இறுதி உருவகம். அவர் நம் இதயங்களில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ள மனிதநேயத்தின் அடிப்படை” என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு பிரமாண்டமான ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்கு வருகை தந்தார். இன்று அயோத்தியில் பூமி பூஜை விழாவில் என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
ராமர் கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை தினத்தன்று துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் அவரது இல்லத்தில் பிரார்த்தனை செய்தார். “கோயிலின் கட்டுமானம் உண்மை, அறநெறி மற்றும் இலட்சியங்களின் மிக உயர்ந்த மனித விழுமியங்களின் மறு முடிசூட்டல் என்று மரியாதை புருஷோத்தம் தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார்” என்று அவரது ட்வீட் செய்துள்ளார்.
பாட்னாவின் மகாவீர் கோயில் அறக்கட்டளை 1.25 லட்சம் ‘ரகுபதி லட்டுக்கள்’ விநியோகிக்கப் போவதாகக் கூறியது. இந்த சிறப்பு இந்திய இனிப்புகளின் மொத்த எண்ணிக்கையில், 51,000 லட்டுக்கள் ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு “பூமி பூஜை” நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன.
தூய பசு நெய்யில் தயாரிக்கப்பட்ட அந்த மீதமுள்ள லட்டுக்கள் பீகாரில் உள்ள சீதாமாரியில் உள்ள ஜானகியின் பிறப்பிடத்தில் உள்ள கோயில்களுக்கும், மேலும் 25 புனித யாத்திரை இடங்களுக்கும் அனுப்பப்படும். அங்கு ராமரின் கால்தடங்கள் உள்ளன என்று நம்பப்படுகிறது. அந்த லட்டுக்கள் பீகாரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமர் மற்றும் அனுமனின் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று மகாவீர் கோயில் அறங்காவலர் ஆச்சார்யா கிஷோர் குணால் தெரிவித்தார்.
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை முன்னிட்டு கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மக்களை வரவேற்றனர். தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வரும் எடியூரப்பா ட்விட்டரில், “பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ராமர் முடிசூட்டுதல் அயோத்தியில் நடக்கும் …” என்று கூறினார். அவர் இந்த கோயில் கனவு நனவாவதற்கு பல துறவிகள் மற்றும் பக்தர்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். இது விரைவில் நனவாகும். கோயில் கட்டுவதைக் காண மக்கள் தங்கள் போராட்டத்தில் பல சிரமங்களை எதிர்கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.
அமித்ஷா: “பிரமாண்டமான ராமர் ஆலயத்தை நிர்மாணிப்பது பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான மற்றும் தீர்க்கமான தலைமையை நிரூபிக்கிறது. இந்த மறக்க முடியாத நாளில் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய கலாச்சாரத்தையும் அதன் மதிப்புகளையும் பாதுகாக்கவும் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அமித்ஷா சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமர் கோயில் பூமி பூஜைக்குப் பிறகு பேசிய ராமர் மோடி, “ராமர் கோயிலுக்காக பலர் தியாகங்களைச் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன்” என்று பிரதமர் கூறினார்.
பல இந்துக்கள் ராமர் பிறந்தார் என்று நம்பும் இடத்தில் கோவிலின பூமி பூஜை விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி கூறுகையில், பகவான் ராமரின் இருப்பை ஒழிப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் நம் இதயத்தில் வாழ்கிறார். நமது கலாச்சாரத்தின் அடிப்படை இது என்று மோடி கூறினார். “சமூக நல்லிணக்கமே ராம ராஜ்ஜியத்தின் முக்கிய கொள்கையாக இருந்தது” என்று பிரதமர் மோடி கூறினார். ராமர் கோயிலின் கட்டுமானம் நாட்டை ஒன்றிணைக்கும் கருவியாகும் என்றார். ராமர் கோயில் கட்டுமானம் முழு பிராந்தியத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் என்று மோடி கூறினார். பிரதமர் ஒரு பட்டையத்தை வெளியிட்டு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
பிரதமர் மோடி, “இந்த கோயிலின் கட்டுமானத்துடன், வரலாறு உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல், அது மீண்டும் உருவாக்கப்படுகிறது. பழங்குடியின படகு வீரர்கள் ராமருக்கு உதவியது, குழந்தைகள் கிருஷ்ணர் கோவர்தன மலையை உயர்த்த உதவியது போல அனைவரின் முயற்சியாலும் இந்த கோயில் கட்டுமானம் முடிவடையும்.” என்று கூறினார்.
மேலும், கோயிலுக்கான போராட்டத்தை சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிடுவதாக பிரதமர் மோடி கூறினார். “ராமர் கோயில் அயோத்தியின் பொருளாதாரத்தை மாற்றும். ராமர் இந்தியாவின் அண்டை நாடுகளின் கலாச்சாரத்திலும் வாழ்கிறார். ராமர் இந்தியாவின் பன்முகத்தன்மையின் ஒற்றுமையின் சின்னமாகும்.” என்று கூறினார்.
பிரதமர் மோடி “ஸ்ரீ ராமர் பெயரைப் போலவே அயோத்தியில் கட்டப்படவுள்ள இந்த மாபெரும் ராமர் கோயில் இந்திய கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் என்று நான் நம்புகிறேன். இது மொத்த மனிதகுலத்தையும் நித்தியம் வரை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். சமூக ஒற்றுமை என்பது பகவான் ராமர் ஆட்சியின் முக்கிய கொள்கையாகும். ராமர் எல்லா இடங்களிலும் இருக்கிறார். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் ” என்று கூறினார்.
பிரதமர் மோடி, “வரலாறு படைக்கப்பட்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கோடிக் கணக்கான இந்த்யர்கள் அந்த நாள் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. முழு நாடும் ராமர் என்று சொல்கிறது. இன்றைய புனிதமான சந்தர்ப்பத்தில் ராம பக்தர்களுக்கும் இந்த தேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, “ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த நம்முடைய ராம் லல்லாவுக்கு இப்போது ஒரு பெரிய கோயில் கட்டப்படும். இன்று ராம ஜென்மபூமி மீண்டும் கட்டப்படும். ராம ஜென்ம பூமி ஒரு சுழற்சியில் இருந்து விடுபடுகிறது. இது பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. முழு இந்தியாவும் இன்று கொண்டாடுகிறது. சரயு ஆற்றின் கரையில் பொற்கால வரலாறு எழுதப்பட்டுள்ளது. ராமர் கோயில் நமது கலாச்சாரத்தின் நவீன குறியீடாக இருக்கும். மேலும் அன்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கற்பிக்கும்” என்று கூறினார்.
ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற போராட்டத்திற்கு அத்வானி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர்.தற்போது இக்கட்டான சூழல் நிலவிவருவதாலேயே, அத்வானி உள்ளிட்ட பலர் அழைக்க முடியவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற தனது கனவை பிரதமர் மோடி நனவாக்கியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.
ராமர் கோயில், நவீன இந்தியாவில், ராமராஜ்யத்தின் கொள்கைகளுக்கு சாட்சியாக திகழ்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் என்ற 500 ஆண்டுகால போராட்டம், இந்திய அரசியலமைப்பு மற்றும் நீதித்துறையின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் 40 கிலோ சுத்தமான வெள்ளியினால் ஆன செங்கல் பயன்படுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மணலும், 2000க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரும் பூமி பூஜையில் பயன்படுத்தப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜை நிகழ்ச்சியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று பொறிக்கப்பட்ட செங்கல்கள் பயன்படுத்தப்பட்டன.
ராம் லல்லாவில் உள்ள ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
அயோத்தியில் உள்ள 10ம் நூற்றாண்டை சேர்ந்த ஹனுமார் கோயிலில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினர்.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்பதற்காக அயோத்தி வந்த பிரதமர் மோடியை, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தனிநபர் இடைவெளியை பின்பற்றி வரவேற்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை அனைவரும் மதிக்க வேண்டும், இந்த கொள்கையையே தனது கட்சி கடைப்பிடித்து வருவதாக மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
சந்திரகாந்த் சோம்புரா (77 வயது), அவர்களின் மகன்கள் நிகில் மற்றும் ஆஷிஷ். இவர்கள் தான் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுபவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் நாட்டின் பலபகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டியுள்ளனர்
(Express Photo by Javed Raja)
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ள இடத்திற்கு கவர்னர் ஆனந்தி பென் படேல், பாரதிய ஜனதா கட்சி தேசிய துணை தலைவர் உமாபாரதி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ள இடத்திற்கு கவர்னர் ஆனந்தி பென் படேல், பாரதிய ஜனதா கட்சி தேசிய துணை தலைவர் உமாபாரதி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அங்கு நடைபெறும் பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு வருகிறார்.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட 175 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை, பிற்பகல் 12.30 மணிக்கு விநாயகர் பூஜை உடன் துவங்கும். பின் ராமர் சிலை, கோயில் கட்டப்பட உள்ள இடத்தில் வைக்கப்படும். அதன்பின்னர் 8 சிறிய சிலைகள் வைக்கப்படும். புதிய கோயிலுக்கான் அடிக்கல் நாட்டு விழா சரியாக 12.44 முதல் 12.45 மணிக்கும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ புறப்பட்டுச்சென்றார். லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் அயோத்தி செல்ல உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பிறகு, கோயிலின் வடிவம் இவ்வாறுதான் இருக்கும் என்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள்
இலங்கையில் ராவணனை தோற்கடித்த பிறகு ராமன்ல லட்சுமணன் மற்றும் சீதா அயோத்தி திரும்பிய படம், இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் அட்டைப்படமாக இடம்பபெற்றிருந்தது. அதனை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பகிர்ந்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சிக்காக அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சரயு நதிக்கரை அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சிகள்
பிரதமர் மோடி ராமர் கோயில் பூமி பூஜைக்கு முன்னதாக அயோத்தியில் உள்ள அனுமார் கோயிலில் வழிபாடு மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.