ராமர் கோவில் அமையும் இடத்தில் 200 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் : டிரஸ்ட் அறிவிப்பு

Ayodhya time capsule : அயோத்தி நகரத்தின் சிறப்பம்சங்கள், கடவுள் ராமரின் பிறப்பு உள்ளிட்ட தகவல்கள் காப்பர் தகட்டில் எழுதப்பட்டு இந்த டைம் கேப்சூலில் வைக்கப்படும்

By: Updated: July 28, 2020, 11:25:14 AM

Maulshree Seth

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில், கால் பாத்ரா எனும் டைம் கேப்சூல் புதைக்கப்பட உள்ளதாக ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராம் ஜென்ம பூமி இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக எழுந்த சட்ட சிக்கல்கள் அது கடந்துவந்த பாதை உள்ளிட்டவைகளை வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த டிரஸ்ட் உறுப்பினர் காமேஸ்வர் செளபால் தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது, அயோத்தி நகரத்தின் சிறப்பம்சங்கள், கடவுள் ராமர், அவரின் பிறப்பிடம் உள்ளிட்ட தகவல்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கும் வண்ணம், இந்த டைம் கேப்சூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஐடியா, தங்களது அனுபவத்தில் இருந்து தோன்றியது. இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின்படி, கடவுள் ராமர், அனைத்து இடங்களிலும் உள்ளார். சட்டரீதியாக நாங்கள் கடந்துவந்த பாதை குறித்த தகவல்களை, வருங்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ளும் வகையிலும், அடுத்து ஏதாவது சட்ட சிக்கல்கள் ஏற்பட்டால் அப்போது பயன்படும் வகையிலேயே, இந்த டைம் கேப்சூல் திட்டம் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த டைம் கேப்சூல் பணி உருவாக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது, கோயிலின் மாதிரி வரைபடம் தயாரித்த பின்னர், அது எங்கே புதைக்கப்படும் என்று முடிவெடுக்கப்படும்.

இந்த ராமர் கோயில் விவகாரத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் இன்று முதுமையை எட்டியுள்ளனர். அந்தளவிற்கு 70 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த விவகாரத்தில் தற்போது முடிவு கிடைத்துள்ளது. வருங்கால சந்ததியினர் இதுபற்றி தெரிந்துகொள்ளவும், வேறு ஏதேனும் சட்ட சிக்கல்கள் வந்தால் அதை வெற்றி கொள்ளவும் இந்த டைம் கேப்சூல் உருவாக்கப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகள் வரை பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கேப்சூல், ராமர் கோயில் கட்டுமானத்தின் கீழே 200 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட உள்ளது.

அயோத்தி நகரத்தின் சிறப்பம்சங்கள், கடவுள் ராமரின் பிறப்பு உள்ளிட்ட தகவல்கள் காப்பர் தகட்டில் எழுதப்பட்டு இந்த டைம் கேப்சூலில் வைக்கப்படும் ஆயிரம் ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருக்கும் வகையில் இந்த கேப்சூல் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி உள்ளிட்டோ் கலந்துகொள்ள உள்ளனர். அன்றைய நாளிலேயே, மேலும் பல்வேறு புதிய திட்டங்களையும் துவக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Trust to place time capsule with message on Ayodhya, Ram in temple foundation

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Ayodhya time capsulein temple foundation pm modi ram temple ram temple inauguration

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement