Abantika Ghosh, Asad Rehman, Shaju Philip
அயோத்தி வழக்கில், ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம். பாபர் மசூதி கட்டுவதற்காக, அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை, மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி தர வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு, யாருக்கும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக்கூடாது என்று தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளனர்.
சீராய்வு மனு இல்லை : இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம், இந்த தீர்ப்பு தொடர்பாக, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த சன்னி வக்பு வாரிய தலைவர் ஜூபார் பரூக்கி கூறியதாவது, இந்த தீர்ப்பு, இஸ்லாமிய அமைப்புகளிடையே மாற்றுக்கருத்துகளை உருவாக்கி உள்ளது மறுப்பதற்கில்லை என்றாலும், இந்த தீர்ப்பு தொடர்பாக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் : இந்த தீர்ப்பு தங்களுக்கு முரண்பாடான கருத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த தீர்ப்பை மதிப்பதாக தெரிவித்துள்ளது. நாங்கள் மத்தியிலும், கேரளத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். இந்த தீர்ப்பு தொடர்பாக, திங்கட்கிழமை கூடி விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
அனைத்து இந்திய முஸ்லீம் பெர்சனல் சட்ட வாரியம் : இந்த தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தியளிக்கிறது. இந்த தீர்ப்பில் சமத்துவமின்மை உள்ளது. அயோத்தியாவில் வேறு இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள இடம் தரப்பட்டுள்ளது என்று கவுன்சில் உறுப்பினர் ஜபார்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்.
ஜிலானி மேலும் கூறியதாவது, இந்த தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். 5 ஏக்கர் நிலம், ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். இந்த தீர்ப்பு, இந்துக்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற நாடு இந்தியா என்பது இந்த தீர்ப்பில் மறுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேள்விக்குரியதாக மாற்றியுள்ளது என்று வக்கீல் சம்ஷத் தெரிவித்துள்ளார்.
ஜிலானி கூறியதாவது, எங்களுக்கு மசூதி தான் முக்கியமே தவிர, இடம் கிடையாது. இந்த விவகாரத்தில் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று கூறியுள்ளார். சட்டம் 142 படி, இந்த தீர்ப்பை மறுக்கவும் செய்யலாம். ஆனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு அழுத்தம் அளிக்க விரும்பவில்லை. அனவைரும் தப்பு செய்வது இயல்பே. உச்சநீதிமன்றமே, தான் வழங்கிய தீர்ப்புகளி்ல மறு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும்.
கமால் பரூக்கி கூறியதாவது, எங்களுக்கு இடம் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவர்களுக்கு தேவையில்லை என்றால், 100 ஏக்கர் வரை தர நாங்கள் தயார் என்று கூறினார்.
அக்கட்சியின் எம்.பி. அசாசுதீன் ஓவைசி கூறியதாவது, 5 ஏக்கர் நில தீர்ப்பை ஏற்றுக்கொள்ளக்ககூடாது. இது சட்ட விவகாரத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம். இந்த தீர்ப்பு, இந்தியா இந்து நாடு என்பதை சொல்வதாக உள்ளது என்று அவர் கூறினார்.
சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளதாவது, 5 ஏக்கர் நிலம் என்பது எங்கள் கோரிக்கை அல்ல. நிலம் வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வரவேற்கிறோம். ஓவைசி கூறியது அவரது சொந்த கருத்து என்று தெரிவித்துள்ளது.
டில்லி ஜூம்மா மசூதி இமாம் கூறியதாவது, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அமைதியையே விரும்புகிறார்கள். இந்த தீர்ப்பை மதிக்கிறோம், அனைவரும் மதிக்க வேண்டும்.
ஆல் இந்தியா முஸ்லீம் மஜிலிஸ் இ முஷாவராத் கூறியுள்ளதாவது, நிலம் வழங்குதல் தொடர்பான உத்தரவு, ஜோக் போன்று உள்ளது. எங்களிடம் இருந்து 67 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொண்டு எங்களுக்கு வெறும் 5 ஏக்கர் வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
ஜாமியாத் உலாமா இந்த் :இந்த தீர்ப்பால், இஸ்லாமியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அல்லா மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களால் முடிந்தவரை சிறப்பாக செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜாமியாத் இ இஸ்லாமி இந்த் கூறியதாவது, நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கான காரணிகள் தீர்ப்பில் உள்ளன. சிலருக்கு இந்த தீர்ப்பில் அதிருப்தி உள்ளது மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.