சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான், வெறுப்பு பேச்சு வழக்கில் வியாழக்கிழமை (அக்.27) தண்டனை பெற்றதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை, விதான் சபாவின் முதன்மைச் செயலாளர், அவரது ராம்பூர் சதார் இருக்கை "காலியாக" இருப்பதாக அறிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் கான் தானாகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், காலியிடங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பதியப்பட்ட வெறுப்புப் பேச்சு வழக்கில் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ராம்பூர் எம்பி/எம்எல்ஏ நீதிமன்றம் கானுக்கு ஜாமீன் வழங்கியது.
முன்னதாக, ஜூலை 2013 இன் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கான் எட்டு நாட்கள் அவகாசம் கோரினார்.
இந்த நிலையில், ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட எம்பி அல்லது எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்வதற்கு மேல்முறையீடு தடையாக இருக்காது எனக் கூறப்பட்டது.
ஏனெனில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றுள்ளார்.
இந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கான் 59.71% வாக்குகள் பெற்று ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் பாஜகவின் ஆகாஷ் சக்சேனா 34.62% வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கான் தண்டனை பெற்றதும் அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி சச்சேனா வெள்ளிக்கிழமை முறையிட்டார்.
ஏனெனில் கிரிமினல் வழக்கில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.
தொடர்ந்து 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8 (4) ஐ நீக்கியது.
நவம்பர் 2021 இல் இதேபோன்ற ஒரு வழக்கில், அயோத்தியின் கோசைகஞ்ச் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏவான இந்திரா பிரதாப் என்ற ‘கப்பு திவாரி’ 29 ஆண்டுகள் பழமையான போலி மார்க்ஷீட் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் . இதுபோன்ற வழக்குகளில் ஆளுநரின் உத்தரவு கூட தேவையில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கானின் வழக்கறிஞர் வினோத் சர்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், "செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி மேல்முறையீடு செய்வோம்" என்று கூறினார்.
. சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “எங்கள் மேல்முறையீட்டில் செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவைப் பார்ப்போம்” என்றார்.
மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களை வென்றது. பாஜகவின் 255 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், “சட்ட அம்சங்களை கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் விவாதிப்போம். சட்டப்படி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்போம்” என்றார்.
ஏப்ரல் 9, 2019 அன்று, மிலாக் விதான் சபா பகுதியில் கான் பேசியபோது, "அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களை மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், அவர்களை அச்சுறுத்தினார், கலவரத்தைத் தூண்ட முயன்றார்" என்று கான் மீது தேர்தல் அதிகாரி ஒருவர் புகார் அளித்தார்.
அப்போது, PC பிரிவுகள் 153-A (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 505(1) (எந்தவொரு அறிக்கை, வதந்தி அல்லது அறிக்கையை வெளியிடுதல் அல்லது பரப்புதல்) மற்றும் பிரிவு 125 (தேர்தல் தொடர்பாக வகுப்புகளுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.