சமாஜ்வாதி மூத்தத் தலைவர் அசம் கான், 10 முறை வெற்றி பெற்ற ராம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு டிசம்பர் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இடைத்தேர்தலிலும் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் அசம் கானின் மதிப்பு அப்படியே உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அவரது உதவியாளர் அசிம் ராசா தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், அசம் கானின் தண்டனை மற்றும் ராம்பூர் சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதால், ராசா மீண்டும் பாஜகவின் முழு பலத்திற்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளார்.
முஸ்லீம்களை வென்றெடுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கூற்றுக்களுக்கு மத்தியில், சமாஜ்வாதி அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் அசம் கான்.
கேள்வி : ராம்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதோடு, சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறிவருகிறதே?
பதில் : மக்களவை தேர்தலில் அவர்கள் வெற்றி பெறவில்லை. சான்றிதழ் மட்டுமே அவர்களுககு கொடுக்கப்பட்டது. அது அவர்களுக்கே தெரியும். பெரும் அச்சுறுத்தலுக்கு இடையேயும் அவர்கள் 3.6 லட்சம் வாக்குகள்தான் பெற்றார்கள்.
கேள்வி : ராம்பூர் தேர்தலில் அசம் கான் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார் என்று கூறப்படுகிறதே?
பதில் : அதற்கு காரணம் அசம் கான் அல்ல, 1980க்கு முன், இங்கு அரண்மனை மற்றும் கோட்டை என்ற இரண்டு பெரிய கட்டிடங்கள் மட்டுமே இருந்தன. குடிசைகள் மற்றும் பறக்கும் தூசி தவிர வேறு எதுவும் இல்லை. இன்று நீங்கள் பார்க்கும் ராம்பூர் அதன் பிறகு கட்டப்பட்ட ராம்பூர் ஆகும்.
கேள்வி : வாக்காளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அசம் கான் தேர்தலில் வெற்றி பெறுகிறீர்கள் என்ற பாஜகவின் குற்றச்சாட்டை எப்படி பார்க்கீறீர்கள்?
பதில் : தினமும், 10-20 கதவுகள் உடைக்கப்படுகின்றன, பெண்களை அறைகிறார்கள், போலீஸ் ஸ்டேஷன் பூட்டுகள் உள்ளூர் மக்களால் நிரம்பியுள்ளன.
ஆயுதப்படைகளின் கொடி அணிவகுப்புகள் நகரத்தில் நடக்கின்றன. நேர்மையற்ற ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் பாஜகவில் இணைகிறார்கள். இந்த சிறிய நகரை பாரதிய ஜனதா தான் பயமுறுத்துகிறது.
கேள்வி : பாஸ்மாண்டா முஸ்லிம்களை ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் புறக்கணிப்பதாக பாஜக குற்றம் சாட்டுகிறதே?
பதில் : பாரதிய ஜனதா கட்சி குறைந்தபட்சம் போக்கையாவது மாற்றிக்கொண்டிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது அது முஸ்லீம் வாக்குகளை பெற அவர்களை திருப்திப்படுத்த வந்துவிட்டது.
கடுமையான முஸ்லிம் குற்றவாளிகள் அனைவரும் பாஜகவில் இணைந்துள்ளனர். அது இப்போது முஸ்லிம் பாரதீய ஜனதா கட்சியாக மாறிவிட்டது.
இந்தியாவில் பாஸ்மாண்டா மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களும் பாஸ்மாண்டா (கீழான பிற்படுத்தப்பட்ட நிலை) ஆகவே உள்ளனர்.
இப்போது எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. பசுவைக் கொல்பவர்கள் எல்லாம் பாஜகவுடன் அமரும் போது, பசுக்களை யார் பாதுகாப்பார்கள் என்பதுதான் கேள்வி.
கேள்வி : இது இந்து-முஸ்லிம் தேர்தலாக இருக்குமா அல்லது பிரச்சனைகளில் போராடுமா?
பதில் : நிச்சயம் இது இந்து முஸ்லிம் பிரச்னையாக இருக்காது. அனைத்து முஸ்லிம் குற்றவாளிகளும் அவர்களுடன் இருக்கிறார்கள்.
பிரச்னை, தன்னை பாதுகாத்துக் கொள்வதே ஆகும். மேலும் பணத்தை கொடுத்து பாரதிய ஜனதா அவர்களை தன் பக்கம் இழுக்கிறது. ஆனால் ஒரு உண்மையை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள்.
இவ்வாறு தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil