Absent Akhilesh, strong BJP campaign & BSP: Why SP sank in Azamgarh, Rampur bypolls: அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சி பிரச்சாரத்தின் தலைமையாக இல்லாததாலும், பா.ஜ.க.,வின் ஆக்ரோஷமான பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாததாலும், சமாஜ்வாதி கட்சி (SP) ஒரு காலத்தில் அதன் கோட்டையாக கருதப்பட்ட உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் மற்றும் அசம்கர் மக்களவை இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தது. அசம்கரில் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) வலுவான தேர்தல் செயல்பாடு சமாஜ்வாதி கட்சியை கடுமையாக சேதப்படுத்தியது.
இரண்டு இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றதன் மூலம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாக உத்திரப்பிரதேசத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் நிலையை பாஜக வலுப்படுத்தியுள்ளது. லோக்சபாவில் எதிர்கட்சிகளின் எண்ணிக்கையை இப்போது 3 குறைத்து எதிர்க்கட்சிக்களை ஆளுங்கட்சி முடக்கியுள்ளது. இந்த தோல்விகள் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கட்சியின் தொண்டர்களின் மன உறுதிக்கு அடியாக இருப்பது மட்டுமல்லாமல், அடுத்த மாதம் ஜனாதிபதித் தேர்தல் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளரை ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சியின் திட்டத்தை பலவீனப்படுத்தும்.
இதையும் படியுங்கள்: மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு; மத்திய படைகள் தயார் – ஆளுநர் கடிதம்
தற்போது பா.ஜ.க.,வின் கைகளில் சென்றுள்ள, அகிலேஷ் யாதவ் தனது உறவினர் தர்மேந்திர யாதவ் போட்டியிட்ட அசம்கர் மற்றும் ஒரு காலத்தில் மூத்த சமாஜ்வாதித் தலைவர் அசம் கானின் கோட்டையான ராம்பூர் ஆகியவற்றில் பிரச்சாரம் செய்யாதது குறித்தும் இந்தத் தேர்தல் தோல்விகள் கேள்விகளை எழுப்பக்கூடும். இந்த தோல்வியைத் தொடர்ந்து மூத்த தலைவரான அசம் கான் தனது நீண்டகால கூட்டாளியான அசிம் ராஜாவுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க அகிலேஷுடன் கடுமையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்ததால் கட்சியில் தனது நிலை குறித்தும் கேள்விகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி ராம்பூரில் போட்டியிடாத நிலையில், அசம்கரை வெல்ல முடியவில்லை என்றாலும், குட்டு ஜமாலி என்று அழைக்கப்படும் அதன் வேட்பாளர் ஷா ஆலம் 2.66 லட்சம் வாக்குகளைப் பெற்று தர்மேந்திர யாதவின் வெற்றி வாய்ப்புகளை திறம்பட தடுத்தார். ஜமாலி முபாரக்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர். இந்த முடிவுகள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், “பி.எஸ்.பி.,க்கு மட்டுமே பா.ஜ.க.,வை தோற்கடிக்க தத்துவார்த்த மற்றும் அடித்தள பலம் உள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன” என்றார். மேலும், “மாநிலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் மாற்றத்திற்காக” கட்சி முஸ்லிம்களை அணுகிக்கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அகிலேஷைப் போலவே மாயாவதியும் பிரச்சாரத்தில் இருந்து ஒதுங்கியிருந்தார். பா.ஜ.க.,வைப் பொறுத்தவரை, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது ஒட்டுமொத்த அமைச்சரவையும் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் அடிப்படையில் கட்சியின் வேட்பாளர்களுக்காக இரண்டு இடங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
அசம்கர்
2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பா.ஜ.க மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் ஆதரவு அலை இருந்தாலும் SP இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மாநிலத் தேர்தல்களில் கூட, அசம்கரில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை, 2019 இல் அகிலேஷிடம் தோல்வியடைந்த பா.ஜ.க வேட்பாளர் தினேஷ் லால் யாதவ் “நிராஹுவா” இரண்டாவது முறையில் அதிர்ஷ்டசாலியாக இருந்ததால், நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க.,விடம் வீழ்ந்தது.
18 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட அசம்கரில் தலித்துகள், முஸ்லீம்கள் மற்றும் யாதவர்களின் ஆதிக்கத்தைக் கருத்தில் கொண்டு, SP மற்றும் BSP ஆகியவை அசம்கரில் முக்கியப் போட்டியாளர்களாகக் கருதப்பட்டன. ஆனால் பிரச்சாரத்தின் போது இளைஞர்களின் பெரும் கூட்டத்தை ஈர்த்த நிராஹுவா, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, SP இன் ஆதரவு தளத்தை அரித்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். பிரபல போஜ்புரி நடிகர்-பாடகர் தர்மேந்திர யாதவை 8,679 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் மற்றும் 34.39 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார், இது அவர் கடந்த முறை பெற்ற 35.1 சதவீதத்தை விட சற்று குறைவு. SP இன் வாக்குகள் 60.36 சதவீதத்தில் இருந்து 33.44 சதவீதமாக சரிந்தது, இது BSP ஏற்படுத்திய சேதத்தை விளக்குகிறது.
அசம்கர் கட்சிக்கு முக்கியமான இடமாக இருந்தபோதிலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நிலைமையை மாற்றியமைக்கும் உணர்வை அது ஏற்படுத்தியது என்றாலும், SP தலைமை முஸ்லிம் மற்றும் யாதவர் வாக்குகளை ஒருங்கிணைக்க எந்த ஒரு கூட்டு முயற்சியும் எடுக்கவில்லை. அகிலேஷும் பிரசாரத்துக்கு வந்திருந்தாலும் பலனில்லை. கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில், தொகுதிக்கு வருகை தராததற்காக SP தலைவர் அகிலேஷ் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
காஜிபூர், ராம்பூர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் தனது முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களை SP கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பியது. ஆனால் ஜமாலி போன்ற உள்ளூர்வாசிகள் உள்ளூர் மக்களிடம் அதிக ஈர்ப்பைப் பெற்றனர், தேர்தல் நாளுக்கு முன்னதாக உள்ளுர் மற்றும் வெளி நபர் போட்டியை ஜமாலி கிளப்பினார். முஸ்லீம் பிரச்சினைகளில் SP இன் மௌனம் என்பதும் முஸ்லிம் வாக்காளர்களுக்குப் பிடிக்கவில்லை.
ராம்பூர்
அசம் கானின் கோட்டையாகக் கருதப்படும் ராம்பூரில், கட்சியின் வெற்றியை உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் SP கட்சி, மூத்த தலைவர் அசம் கான் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பிரச்சாரத்தை விட்டுச் சென்றது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த மாநிலத் தேர்தலில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டில் வெற்றி பெற்ற பா.ஜ.க, தொகுதியை கைவிடவில்லை, மேலும் அசம் கானின் கோட்டையைத் தாக்க அதன் முழு தலைமையையும் திரட்டியது.
குறைந்தது 16 மாநில அமைச்சர்கள் ராம்பூரில் வாக்காளர்களைச் சந்தித்தனர், அங்கு கிட்டத்தட்ட 52 சதவீத வாக்காளர்கள் முஸ்லிம்கள். ஆனால் 41.39 சதவிகிதம் குறைந்த வாக்குப்பதிவு (2019 ஆம் ஆண்டு அசம் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 63.19 சதவிகிதம் வாக்குகள் பதிவானது) ஆளும் கட்சி வெற்றிக்கு உதவியது, ஏனெனில் அது 2019 இல் 42.33 சதவிகிதத்திலிருந்து 51.96 சதவிகிதமாக அதிகரிக்க முடிந்தது. இதற்கிடையில் SP இன் வாக்கு சதவீதம் 52.69 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக குறைந்துள்ளது. வியாழன் அன்று வாக்குப்பதிவுக்குப் பிறகு, காவல்துறை வாக்காளர்களை மிரட்டுவதாகவும், முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்க வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்றும் அசம் கானும் பிற தலைவர்களும் குற்றம் சாட்டினர்.
வேட்பாளர் அசம் கானின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதால், முஸ்லிம் வாக்காளர்களில் ஒரு பகுதியினரும் இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை என்று உள்ளூர்வாசிகள் சிலர் கூறினர். மூத்த தலைவர் அசம் கான் வேட்பாளர் அசிம் ராஜாவுக்காக பிரச்சாரம் செய்தார், மேலும் சிறையில் அவரும் அவரது குடும்பத்தினரும் சந்தித்த கஷ்டங்களை விவரிப்பதன் மூலம் அனுதாபத்தைப் பெற முயன்றார். ஆனால் பா.ஜ.க.,வின் கூற்றுக்கு முன்னால் இந்த வியூகம் தோல்வியடைந்தது, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற பி.எஸ்.பி மற்றும் காங்கிரஸின் முடிவிலிருந்து SP தலைவரால் பயனடைய முடியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி களமிறங்காத நிலையில், பல தலித் வாக்காளர்கள் பா.ஜ.க.,வைத் தேர்ந்தெடுத்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இது ஆளுங்கட்சிக்கு தொகுதியை கைப்பற்ற உதவியது.
தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த SP தலைவர் ஒருவர், “தலைமை இப்போது பல்வேறு பிரிவு வாக்காளர்களைச் சென்றடைவதற்கான அதன் அரசியல் உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டும், மேலும் அதன் ஆலோசகர்கள் குழுவை மறுசீரமைக்க வேண்டும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil