Advertisment

நாட்டு மக்களை காக்க முன்வந்த இந்திய நிறுவனங்கள்... ரூ.1125 கோடியை வழங்கிய அசிம் பிரேம்ஜி!

தமிழகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் மார்க்கெட் சொசைட்டி சார்பில் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Azim Premji Foundation, Wipro commit ₹1,125 crore to tackle coronavirus crisis

Azim Premji Foundation, Wipro commit ₹1,125 crore to tackle coronavirus crisis

Azim Premji Foundation, Wipro commit ₹1,125 crore to tackle coronavirus crisis : இந்தியாவில் கொரோனா நோய் பரவலை தடுக்க இந்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது. மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்கி மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

மேலும் படிக்க : நீங்கள் தான் எங்களின் தெய்வம்… துப்புரவு தொழிலாளர்களை மாலை அணிவித்து வரவேற்ற மக்கள்!

நோயின் பரவலைத் தடுக்க அரசு மக்களிடத்தில் நிதி நிவாரணம் கேட்டுள்ளது. பிரதமர் நிவாரண நிதிக்கு தொழிலதிபர்கள், நடிகர்கள் நடிகைகள் பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற அளவு நிதியை வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில் தொழில் அதிபர் அசிம் பிரேம்ஜி கீழ் இயங்கும் விப்ரோ நிறுவனம் மற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் ரூ 1125 கோடி நிதி உதவியை வழங்கியுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

ஏற்கனவே டாட்டா நிறுவனம், டிவிஎஸ், மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களால் இயன்ற நிதியை அரசுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் துணை ராணுவ வீரர்கள் சார்பில் 116 கோடியை நிதியாக கொடுத்தது.  அதேபோன்று எஸ்பிஐ ஊழியர்கள் தங்களின் இரண்டு நாள் சம்பளத்தை நிதியாக கொடுத்தனர்.  மேலும் நெய்வேலி அமைந்திருக்கும் என்எல்சி சார்பில் ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.  தமிழகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் மார்க்கெட் சொசைட்டி சார்பில் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

மேலும் படிக்க : கொரோனா நிவாரண நிதி : மோடி பேரில் போலி கணக்கு துவங்கிய கும்பல்

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment