'அங்கே போக வேண்டாம்; உங்களை அமைச்சர் ஆக்குகிறேன்' - பேரம் பேசும் முதல்வர் எடியூரப்பா!

பேரம் பேசும் முதல்வர் எடியூரப்பா!

கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆடியோ ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதில், பணம், அமைச்சர் பதவி தருவதாக ராய்சூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பாஜகவின் ஜனார்த்தன் ரெட்டி பேரம் பேசுவது போன்று இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏ பிசி பாட்டில் என்பவருடன் பேரம் பேசுவது போன்ற ஆடியோ டேப்பை காங்கிரஸ் இன்று வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் இடம்பெற்றிருக்கும் பேச்சுவார்த்தை எழுத்து வடிவமாக இங்கே,

பிசி பாட்டில் – ஹலோ … ஹலோ … ஹலோ ….

எடியூரப்பா – ஹலோ

பாட்டில் – அண்ணா நமஸ்காரா, வாழ்த்துகள்

எடியூரப்பா – எங்கே இருக்கிறீர்கள்?

பாட்டில் – பேருந்தில் கொச்சினுக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன்

எடியூரப்பா – கொச்சினுக்கு போகாதீர்கள், திரும்பி வாங்க. திரும்பி வாங்க, உங்களை நான் அமைச்சர் ஆக்குகிறேன். உங்களுக்கு தேவையானவற்றை அனைத்தையும் செய்து தருகிறேன்.

பாட்டில் – ஆனால், நாங்கள் பேருந்தில் இருக்கிறோம்

எடியூரப்பா – போகாதீர்கள், ஏதாவது சொல்லிவிட்டு இங்கு வந்துவிடுங்கள்.

பாட்டில் – அப்போ, எனக்கு என்ன பதவி?

எடியூரப்பா– நீங்கள் அமைச்சர் ஆக்கப்படுவீர்கள்

பாட்டில் – அண்ணா, என்னுடன் இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள்.

எடியூரப்பா– அவர்களையும் உடன் அழைத்து வந்துவிடு. என்னை நம்புகிறாய் தானே?

பாட்டில் – ஆமாம்.. ஆமாம்

எடியூரப்பா– அப்போ, பேருந்தில் செல்லாமல் திரும்பி வாருங்கள்

பாட்டில் – சரி அண்ணா, சரி.

எடியூரப்பா – ஒருவேளை நீங்கள் கொச்சினுக்கு சென்றுவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். ஏனெனில், அப்போது நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள முடியாது.

பாட்டில் – சரி சரி அண்ணா

எடியூரப்பா – இப்போது சொல்லுங்க, நீங்க என்ன செய்யப் போறீங்க?

பாட்டில் – நான் 5 நிமிடத்தில் திரும்பி உங்களுக்கு தொடர்பு கொண்டு, முடிவு என்னவென சொல்கிறேன்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close