Advertisment

7 கொல்கத்தா நிறுவனங்களிடம் இருந்து ரூ.5 கோடி பெற்ற எடியூரப்பா பேரன் நிறுவனங்கள்

பெங்களூரு வீட்டுத் திட்டத்திற்கு பிரதிபலன் பெற்றார் என்ற தனியார் டிவி சேனல் குற்றச்சாட்டுக்கு, கர்நாடக முதல்வரின் பேரன் ‘செயலில் உள்ள கடன்கள்’ என்கிறார்.

author-image
WebDesk
New Update
B S Yediyurappa, Sashidhar Mardi, Kolkata shell companies, கொல்கத்தா நிறுவனங்கள் இடம் இருந்து 5 கோடி ரூபாய் பெற்ற எடியூரப்பா பேரன், கர்நாடகா, எடியூரப்பா, எடியூரப்பா பேரன் சஷிதர் மார்டி, karnataka cm B S Yediyurappa, B S Yediyurappa grandson Sashidhar Mardi, money from kolkata shell companies, Karnataka bjp, karnataka bjp govt, tamil indian express

கர்நாடகாவில் ஜூலை 2019 இல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலமைச்சர் பி எஸ் யெடியுரப்பாவின் பேரன் சஷிதர் மார்டி இயக்குநராக உள்ள 2 நிறுவனங்கள், மார்ச் மற்றும் ஜூலை 2020க்கு இடையில் ஏழு கொல்கத்தா ஷெல் நிறுவனங்களிடமிருந்து ரூ .5 கோடியைப் பெற்றுள்ளது.

Advertisment

இந்த நிறுவனங்களின் பதிவாளர்களால் (RoC) தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் காணப்படும் பரிவர்த்தனைகளின் தொடர்பு சண்டே எக்ஸ்பிரஸால் ஆய்வு செய்யப்பட்டது. 2 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்கள் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலால் ஒளிபரப்பப்பட்டது. அந்த சேனல், 8 நாட்களாக மாநில அரசாங்கத்தால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. ஆனால், அது இப்போது மீண்டும் ஒளிபரப்பாகிறது.

கடந்த மாதம், பெங்களூருவில் ரூ .660 கோடி அரசு வீட்டுவசதி திட்டத்தை நிர்மாணிப்பதற்காக தனியார் நிறுவனமான ஆர்.சி.சி.எல் நிறுவனத்திற்கு அரசாங்க அனுமதி பெறுவதற்காக இந்த பணம் ஒரு பகுதியாக இருந்தது என்று பவர் டிவி தொடர்ச்சியாக செய்திகளில் குற்றம் சாட்டியது.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஏப்ரல், 2019-ல் ஆர்.சி.சி.எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த திட்டம் இறுதி பணி உத்தரவுக்காக காத்திருக்கிறது.

சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய மார்டி, இந்த பணத்தை “ஒரு திட்டத்திற்கான செயலில் உள்ள கடன்கள்” என்று குறிப்பிட்டார். அதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார். டிவி சேனலால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அவை தவறான நோக்கத்துடனும் குடும்பத்தை கெடுக்கும் முயற்சியிலும் செய்யப்பட்டவை என்று கூறினார். 30 வயதாகும் மார்டி எடியூரப்பாவின் மகள் வி.ஒய்.பத்மாவதியின் மகன் ஆவார்.

ஆர்.சி.சி.எல் இயக்குனர் சந்திரகாந்த் ராமலிங்கம் இது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. இருப்பினும், பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் (பி.டி.ஏ) வீட்டுவசதி திட்டத்திற்கான அனுமதிகளில் ஊழலைக் குறிக்கும் உரையாடல்களின் ஸ்டிங் பதிவுகளை ஒளிபரப்பியதற்காக பவர் டிவிக்கு எதிராக அவர் கடந்த மாதம் போலீஸ் புகார் அளித்தார். எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா (45) மற்றும் ஒரு மாநில அரசு அதிகாரி ஆர்.சி.சி.எல் நிறுவனத்திடமிருந்து ரூ.17 கோடி கேட்டதாக அந்த டிவி சேனல் குற்றம் சாட்டியது.

இந்த புகாரைத் தொடர்ந்து, செப்டம்பர் 28ம் தேதி பெங்களூருவில் உள்ள பவர் டிவியின் வளாகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அதனால், அக்டோபர் 7ம் தேதி வரை சேனல் ஒளிபரப்பப்படவில்லை.

சண்டே எக்ஸ்பிரஸ் ஆராய்ந்த RoC ஆவணங்கள் 7 கொல்கத்தா நிறுவனங்கள் மூலம் ரூ.5 கோடி பெல்கிரேவியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மார்டி இயக்குநராக இருக்கும் விஎஸ்எஸ் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதைக் காட்டுகிறது. கொல்கத்தா நிறுவனங்கள் RoC உடன் தாக்கல் செய்தபடி பொதுவான முகவரிகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால்ம் சண்டே எக்ஸ்பிரஸ் அந்த இடங்களுக்குச் சென்று பார்த்ததில் அவை எதுவும் அங்கிருந்து செயல்படவில்லை என்பதைக் கண்டறிந்தது. வி.எஸ்.எஸ் எஸ்டேட்ஸ் மற்றும் பெல்கிரேவியா சமர்ப்பித்த வாடகை ஒப்பந்தங்கள் 2020 ஜூன் 15ம் தேதி அதே பெங்களூரு முகவரியைக் கொண்டுள்ளன.

பெல்கிரேவியாவின் ஆக்சிஸ் வங்கி கணக்கின் அறிக்கைகளின்படி, 7 கொல்கத்தா நிறுவனங்களிடம் இருந்து மார்ச், 2020 முதல் ஜூன், 2020 வரை அந்த நிறுவனம் ரூ.5.35 கோடியைப் பெற்றுள்ளது. இந்த பணம் பதிவுகள், வி.எஸ்.எஸ் எஸ்டேட் நிறுவனத்தின் ஆக்ஸிஸ் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதைக் காட்டுகிறது. இந்த பரிவர்த்தனைகளின் ஒரு பகுதி RoC தாக்கல்களில் தெளிவாகத் தெரிகிறது.

# முதலில் ரூ.1.95 கோடி, ரெமாக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சாகம்பரி மெர்ச்சண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் ஸ்ட்ரேட்டஜிக் வின்காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து NEFT மற்றும் RTGS மூலம் மார்ச் 13, 2020 முதல் 2020 மார்ச் 20 வரை பெல்கிரேவியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ.1.5 கோடி பெல்கிரேவியாவிலிருந்து வி.எஸ்.எஸ் எஸ்டேட்ஸ் ஆக்சிஸ் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

# பின்னர், சாகம்பரி மெர்சண்ட்ஸ் மற்றும் ஜகதாம்பா கம்மோசல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கன்னாயக் கம்மாடிட்டிஸ், நவ்தெக் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்ம் மற்றும் ராகரனா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களிலிருந்து ரூ.3.40 கோடி பெல்கிரேவியாவின் ஆக்சிஸ் வங்கி கணக்கிற்கு மே 14, 2020 மற்றும் ஜூன் 26, 2020-க்கு இடையில் மாற்றப்பட்டுள்ளது. பின்னர், ரூ.3.41 கோடியின் இரண்டாவது தவணை பெல்கிரேவியாவிலிருந்து வி.எஸ்.எஸ் எஸ்டேட்களுக்கு ஜூலை 6, 2020-இல் மாற்றப்பட்டது.

மூன்று கொல்கத்தா நிறுவனங்கள், ரிமேக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், கன்னாயக் கம்மாடிட்டிஸ், ராஜ்கரணா சேல்ஸ் ஆகியவை 301இ, பிபி கங்குலி தெரு, அறை எண் 4, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700012 என்ற முகவரியில் உள்ளதாக Roc தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ளது. மற்ற 4 நிறுவனங்களான ஸ்ட்ரேட்டஜிக் வின்காம், நவ்டெக் கிரியேஷன், சாகம்பரி மெர்ச்சண்ட்ஸ், ஜகதாம்பா கம்மோசேல்ஸ் நிறுவனங்கள் 277, பிபி கங்குலி தெரு, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700012 என்ற முகவரியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதல் முகவரி மத்திய கொல்கத்தாவில் நெரிசலான சந்தைக்குள் அமைந்துள்ளது. "சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடையில் இருந்து செயல்படும் சில நிறுவனங்கள் இருந்தன. ஆனால், அந்தக் கடைகள் வெகு காலத்திற்கு முன்பே மூடப்பட்டுவிட்டன என்று ஆப்டிகல் கடையில் பணிபுரியும் ராஜீவ் ஷா கூறினார்.

மற்றொரு முகவரியில், சுமார் 100 மீட்டர் தொலைவில், நான்கு நிறுவனங்களின் எந்த அடையாளமும் இல்லை. “நான் மிக நீண்ட காலமாக இங்கே இருந்து வருகிறேன். இந்த நிறுவனங்களின் பெயர்களை நான் கேள்விப்பட்டதே இல்லை” என்று அங்கு ஒரு பிளைவுட் கடையை நடத்தி வரும் தேவேந்தர் ஜெயின் கூறினார்.

விஎஸ்எஸ் எஸ்டேட்ஸ் கணக்கு அறிக்கையின்படி, மார்ச் 13 முதல் ஜூலை 6 வரை பெல்கிரேவியா டெபாசிட் செய்த ரூ.5 கோடி ஜூலை 27, 2020 அன்று மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது - ஒரு கூட்டு நிறுவனமான விஎஸ்எஸ் ஒர்க்ஸ் எல்எல்பி, மார்டியின் பங்குதாரர் சஞ்சய் ஸ்ரீ ஒரு இயக்குநராக உள்ளார். அதனுடன் ஒரு ரியல்டி நிறுவனத்தின் பிரதிநிதி பி.ஆர்.ராமகிருஷ்ணன்.

வி.எஸ்.எஸ் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நவம்பர், 2019-ல் நவம்பரில் மார்டி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பங்குதாரர் சஞ்சய் ஸ்ரீ ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. அதன் 2019-20 வருவாய் குறித்த விவரங்களை இதுவரை RoC தாக்கல் செய்யவில்லை. வி.எஸ்.எஸ் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் Roc தாக்கல் செய்த 2020 மே 25 முதல் 27 வரையிலான காலப்பகுதியில் அதன் வங்கி அறிக்கையின் நகலை உள்ளடக்கியுள்ளது. அதன் கணக்கில் ரூ.1.59 கோடி உள்ளதாகக் காட்டுகிறது.

வி.எஸ்.எஸ் எஸ்டேட்களுக்கான மே 2020 க்கான வங்கி கணக்கு விவரங்களை RoC தாக்கல் செய்துள்ளது. அதில், பெல்கிரேவியா எண்டர்பிரைசஸ், விஎஸ்எஸ் எஸ்டேட்ஸ் மற்றும் விஎஸ்எஸ் ஒர்க்ஸ் ஆகிய 7 கொல்கத்தா நிறுவனங்களுக்காக பவர் டிவி வெளியிட்ட வங்கி அறிக்கைகளுடன் இணைந்து பார்க்கும்போது, ​​சஷிதர் மார்டியுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ச், 2020 முதல் ஜூலை வரை ரூ.5 கோடி சென்றதைக் காட்டுகிறது.

மார்டியுடன் சேர்ந்து, ஸ்ரீ ஒரு பொது நிறுவன நிறுவனமான பெல்கிரேவியாவில் இயக்குநராகவும் உள்ளார். எடியூரப்பா முதல்வரான சிறிது காலத்திலேயே, மார்டி இயக்குநராக ஆகஸ்ட் 29, 2019 அன்று சேர்க்கப்பட்டார். மார்ச் 2019 வரை RoC தாக்கல் செய்ததில், அந்த நிறுவனம் பூஜ்ஜிய வருவாய் மற்றும் ரூ.38,458 நஷ்டத்தை அறிவித்தது.

இந்த பணத்தைப் பற்றி கேட்டபோது, ​​மார்டி கூறியதாவது, “அவர்கள் ஒரு திட்டத்திற்காக கடன்களைப் பெறுகிறார்கள். அதற்கான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சில தவறான நோக்கங்களுடன், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது இறுதியில் நிலையான வைப்புகளுக்குச் சென்றது. ஏனெனில், அனைத்து நிதிகளையும் உடனடியாக ஒரு திட்டத்திற்கு பயன்படுத்த முடியாது. தேவைப்படும்போது அதை அணுகுவோம். இது ஜே.வி. திட்டத்தில் பயன்படுத்தப்பட இருந்தது.” என்று கூறினார்.

கொல்கத்தா நிறுவனங்களின் பொதுவான முகவரிகளைப் பற்றி அவர் கூறுகையில், “அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மேலும், அது பற்றி எனக்கு அதிகம் தெரியாது.” என்று கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு பதில் அளித்த மார்டி, “முதலில், எனது பங்குதாரர் இந்த நிறுவனங்களில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார். நான் 12 சதவீதம் மட்டுமே வைத்திருக்கிறேன். பெல்கிரேவியாவில், எனக்கு எந்தப் பங்கும் இல்லை. எனது பங்குதாரர்தான் உரிமையாளர். எனக்கும் அரசாங்கத் திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் ஒரு தனியார் தனிநபர். ஒரு திட்டத்தில் வேலை செய்ய அவர்களுக்கு கடன் கிடைத்துள்ளது. புலனாய்வு இதழியல் மேற்கொள்வதாகக் கூறி டிவி சேனல் தொடர்பில்லாத விஷயங்களில் எங்களை இழிவுபடுத்தியுள்ளது.” என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், “பெல்கிரேவியா குடும்பத்துடன் தொடர்புடையது அல்ல. ஆறு மாதங்களுக்கு முன்பு நான் ஒரு இயக்குநராக சேர்க்கப்பட்டேன். ஆனால், என்னிடம் பங்குகள் எதுவும் இல்லை. இது 12-13 ஆண்டுகள் பழமையான நிறுவனம். அவர்கள் 2013 வரை செயலில் இருந்தனர். அவர்கள் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்க விரும்பவில்லை. எனவே, அவர்கள் பெல்கிரேவியாவை புதுப்பித்தனர். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக அது செயலற்றதாக இருந்தது உண்மைதான்.” என்று கூறினார்.

பணம் குறித்த ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இது டி.டி.எஸ் செலுத்தப்பட்ட உண்மையான கடன்கள். அனைத்து அலுவலக சான்றுகளும் செய்யப்பட்டுளது. எல்லா நிறுவனங்களுக்கும் இந்த வகையான பரிவர்த்தனைகள் உள்ளன. எங்கள் குடும்பத்தை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே அவர்கள் தொடர்பில்லாத விஷயங்களுடன் இணைக்கின்றனர். நான் ஒரு தனிநபராக வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

வீட்டு வசதி திட்டத்திற்கான ஒரு டெண்டர், மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது ஆகும். அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் அக்டோபர், 2017ல் தொடங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் 21, 2017 அன்று பி.டி.ஏ-வின் வாரியக் கூட்டத்தில் ஆர்.சி.சி.எல். எடுக்கப்பட்ட ஏலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2018-ல் காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ந்ததும், ஜூன் 2018-ல் ஒரு மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டதும் இந்த திட்டம் நீடித்தது.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, இந்த கூட்டணி அதே ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஆர்.சி.சி.எல்-க்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.33.31 கோடி பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்தக் கோரியது. தேர்தலுக்குப் பிறகு, ஜூன் 24ம் தேதி இந்த திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஆர்.சி.சி.எல் மற்றும் பி.டி.ஏ ஆகியவற்றால் முறையான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி, 2019 ஜூன் 24 முதல் பணிகள் தொடங்கி 2021 டிசம்பர் 23க்குள் முடிவடைய வேண்டும்.

ஜூலை மாதம், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட சிறிது காலத்திலேஎய், கூட்டணி அரசாங்கம் வீழ்ந்தது. எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சி, இந்த திட்டத்தைத் தொடங்குவதற்கான பணி உத்தரவு பாஜகவால் தாமதமாகிறது என்று குற்றம் சாட்டியது.

“அண்மையில் அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொனடசபுரா திட்டம் பெரிய அளவில் இடம்பெற்றது. இந்த திட்டம் இன்னும் தொடர்கிறது என்று பதில்கள் தெரிவிக்கின்றன” என்று பி.டி.ஏ-வின் ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறினார். ஆனால், இந்த திட்டத்தைத் தொடங்குவதற்கான பணி ஆணையின் நிலை குறித்து கருத்து தெரிவிக்க அந்த அதிகாரி மறுத்துவிட்டார்.

Karnataka Yeddyurappa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment