/tamil-ie/media/media_files/uploads/2020/11/baba-ka-dhaba.jpg)
Baba from dhaba files case against YouTuber who put him into limelight : நீங்கள் ஒரு பயங்கரமான யுடியூப் ஃபாலோவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் Baba from dhaba என்ற வீடியோ நிச்சயம் பரீட்சையமாக இருக்கும். தெற்கு டெல்லியில் அமைந்திருக்கும் அந்த அந்த கடையில் கந்தா பிரசாத் என்பவர் தாபா ஒன்றை நடத்தி வந்தார்.
கொரோனா வைரஸ் காரணமாகவும், ஊரடங்கின் காரணமாகவும் மற்ற அனைத்து சிறு வியாபாரிகள் போன்று பிரசாத்தும் பெரிய அளவில் பாதிப்பிற்கு ஆளானர். 80 வயது பிரசாத்தும் அவருடைய மனைவியும் கஷ்டப்பட்டு அந்த கடையை நடத்த, அவர்களின் பிரச்சனையை யுடியூபர் கௌரவ் வாசன் என்பவர் வீடியோவாக எடுத்து யுடியூபில் வெளியிட்டார்.
அதன் பின்பு அக்கடைக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதனை மறுத்து பேசியுள்ளார் பிரசாத். முன்பாவது தினமும் 10 ஆயிரத்திற்கு வேலை நடக்கும் தற்போது வெறும் 3000 (1), 4000த்திற்கு தான் வேலை நடக்கிறது. இங்கு வருபவர்கள் எல்லாம் என்னுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துவிட்டு செல்கின்றனர். மேலும் என் பெயரை கூறி வாசன் நிறைய பேரிடம் இருந்து நன்கொடை பெற்று அதனை எனக்கு அனுப்பாமல் என்னை ஏமாற்றிவிட்டார் என்று மால்வியா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பிரசாத்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
முதல் தகவல் அறிக்கை இன்னும் பதிவு செய்யப்படாத நிலையில், வாசன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தாத்தாவை தொடர்ந்து தொந்தரவு செய்வார்கள் என்று தான் என்னுடைய வங்கி கணக்கினை கொடுத்தேன். எனக்கு நன்கொடையாக வந்த பணம் அனைத்தையும் நான் அவரிடம் திருப்பி கொடுத்துவிட்டேன். இப்போது என்னிடம் பணம் ஏதும் இல்லை என்று கூறி தன்னுடைய முகநூல் பக்கத்தில் வாசன் விளக்கம் ஒன்றையும், பணப்பறிமாற்றம் தொடர்பான விபரங்களையும் பகிர்ந்துள்ளார். நல்லது செய்ய போய் கெட்டதாகிவிட்டது என்று இவரும், பிரபலம் என்ற பெயரில் இருந்ததையும் இழந்து விட்டு நிற்கின்றோம் என்று அந்த தாத்தாவும் தற்போது புலம்பிக் கொண்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.