“பாபா ராம்தேவ் தனது மருத்துவ முறையைப் பற்றிய மகத்துவத்தை சொல்லலா. ஆனால், அனைத்து மருத்துவர்களையும், அலோபதி மற்றும் அனைத்து மருத்துவ முறையையும் ஏன் குற்றம் சாட்ட வேண்டும்… இறுதியில், நாங்கள் அவரை மதிக்கிறோம். அவர் யோகாவை பிரபலப்படுத்தினார். நாங்கள் அனைவரும் அவருடைய திட்டங்களுக்குச் சென்று யோகாவைப் பார்ப்போம். ஆனால், அவர் மற்ற மருத்துவ முறைகளை விமர்சிக்கக்கூடாது.” என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினார்.
உச்ச நீதிமன்ற தலைமை அமர்வுக்கு தலைமை வகித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, பாபா ராம்தேவ் யோகாவை பிரபலப்படுத்தியுள்ளார் என்று கூறினார். ஆனால், அவர் ஏன் மற்ற மருத்துவ முறைகளை விமர்சிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், அவர் மற்ற மருத்துவ முறைகளைக் குற்றம் சாட்டுவதில் இருந்து கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
“பாபா ராம்தேவ் தனது மருத்துவ முறையைப் பற்றிய மகத்துவத்தை சொல்லலாம். ஆனால், அனைத்து மருத்துவர்களையும், அலோபதி மற்றும் அனைத்து மருத்துவ முறையையும் ஏன் குற்றம் சாட்ட வேண்டும்… இறுதியில், நாங்கள் அவரை மதிக்கிறோம். அவர் யோகாவை பிரபலப்படுத்தினார். நாங்கள் அனைவரும் அவருடைய திட்டங்களுக்குச் சென்று யோகாவைப் பார்ப்போம். ஆனால், அவர் மற்ற மருத்துவ முறைகளை விமர்சிக்கக்கூடாது. ஆயுர்வேதம் அல்லது அவர் பின்பற்றும் எந்த மருத்துவ முறையும் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? விளம்பரங்களின் வகை, அனைத்து மருத்துவர்களும் கொலையாளிகள் போல குற்றம் சாட்டுகிறார்கள்…” என்று தலைமை நீதிபத் என்.வி. ரமணா கூறினார்.
நவீன மருத்துவம் மற்றும் தடுப்பூசிக்கு எதிராக தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டதாக ராம்தேவ் மீது குற்றம் சாட்டிய இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சி.டி.ரவி குமார் ஆகியோரையும் உள்ளடக்கிய அமர்வு விசாரித்தது.
அலோபதி மருத்துவ முறையை விமர்சித்து தேசிய நாளிதழ்களில் ராம்தேவ் வெளியிட்ட விளம்பரங்களை இந்திய மருத்துவ சங்கம் தனது மனுவில் மேற்கோள் காட்டியது.
இந்திய மருத்துவ கவுசில் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் பிரபாஸ் பஜாஜ், அந்த விளம்பரங்களில் சிலவற்றைக் குறிப்பிட்டு, “அது (விளம்பரங்கள்) நீங்கள் குருடராகிவிடுவீர்கள் என்று கூறுகிறது, அலோபதியிலிருந்து உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பிரச்சினைகள் இருக்கும், உங்கள் எலும்புகள் பலவீனமடையும்…” குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, “இது வேறு பிரச்சினை, ஆனால், அவரால் மருத்துவர்களையும் அமைப்புகளையும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது… மற்ற மருத்துவ முறைகளைக் குற்றம் சாட்டுவதை அவர் நிறுத்த வேண்டும்” என்று கூறினார். இது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அலோபதி பற்றிய இழிவான அறிக்கைகள் தவிர, அந்த விளம்பரங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரைக்கான ஆராய்ச்சி மற்றும் சான்றுகள் அடிப்படையிலான மருந்து பற்றியும் விளம்பரங்கள் கூறுகின்றன என்று பஜாஜ் கூறினார். விளம்பரங்களின் உள்ளடக்கங்கள் அனைத்து மருத்துவ அமைப்புகளின் நல்லிணக்கத்தை கடுமையாக பாதிக்கின்றன என்று அவர் கூறினார். “இவை அனைத்தும் வணிக நோக்கங்களுக்காக மட்டுமே செய்யப்படுகின்றன” என்று குற்றம் சாட்டிய அவர், பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக அவர் கூறினார்.
இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பினால் கிரிமினல் குற்றம் என்று கூறும் மத்திய சட்டங்கள் உள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வழக்கறிஞர் கூறினார்.
நீதிபதி ரவிக்குமார், வழக்கறிஞரிடம் அவர் கூறுவது அனைத்தும் மோசடி என்று கூறுகிறீர்களா என்று கேட்டார். “விசாரனைக்கு பிறகு, நீங்கள் இதை ஒரு மோசடி என்று விவரிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது” என்று அவர் கூறினார். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் நிச்சயமாக என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“