யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு டிவி நேர்காணல் நிகழ்ச்சியில் சாதி ஒழிப்பை வலியுறுத்திய அம்பேத்கர், பெரியார் ஆகிய தலைவர்களின் ஆதரவாளர்களை அறிவார்ந்த பயங்கரவாதிகள் என்று கூறியதால் அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பதஞ்சலி உணவுப் பொருட்கள் விற்பனை மூலம் தொழிலதிபராகவும் யோகா குருவாகவும் உள்ள பாபா ராம்தேவ் ஒரு தனியார் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த நேரகாணல் ஒளிபரப்பானது. அதில், பாபா ராம்தேவ், டாக்டர் அம்பேத்கரையும் பெரியாரையும் பின்பற்றுபவர்களை கண்டு, தான் கவலை கொள்வதாகவும், அஞ்சுவதாகவும், தந்தை பெரியாரை “அறிவார்ந்த தீவிரவாதி” என்றும் விமர்சித்தார்.
மேலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் சிந்தனை கொண்ட கும்பலுக்கு, ஒவைசி தலைவர் போல செயல்படுவதாகவும் கூறினார்.
பாபா ராம்தேவின் இந்த பேச்சுக்கு டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெரியார், அம்பேத்கர் குறித்த தனது கருத்துக்கு, பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று பலரும் வலியுறுத்திவருகின்றனர்.
Intellectual honest thinker, pride of India#JaiPeriyarJaiBhim@dilipmandal pic.twitter.com/Lx5MW9MImr
— Kamlesh R Narayan (@kamleshRnarayan) November 18, 2019
ராம்தேவுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பலரும் பதிவிட்டதால், ராம்தேவுக்கு எதிரான கண்டனம் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. மேலும், பலர் ஜெய் பெரியார், ஜெய்பீம் என்று பதிவிட்டதால் இந்த வாசகமும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
I strongly condemn this targeted attack on Periyar and our ideology by right-wing forces.
Periyar fought for the downtrodden classes. He voiced the rights of women. He spoke against the caste system.
The DMK will defend the Dravidian ideology against all such oppressive forces. https://t.co/gONKdZ8HCQ— M.K.Stalin (@mkstalin) November 18, 2019
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாபா ராம்தேவ் பேசியதைக் குறிப்பிட்டு, பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதலை கடுமையாக கண்டனம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் கீழ்நிலையில் உள்ளவர்களுக்காகப் போராடினர். அவர் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அவர் சாதி முறைக்கு எதிராகப் பேசினார். அனைத்து ஒடுக்குகிற சக்திகளின் எதிர்ப்பிலிருந்தும் திராவிடக் கொள்கையை திமுக பாதுகாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.