ஷரிய சட்டப்படி பாபர் மஸ்ஜித் ஒரு மசூதி; உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம்: ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர்

உச்சநீதிமன்றத்திற்கு மிக உயர்ந்த மரியாதை உள்ளது என்று கூரிய ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி, அயோத்தி நில தகராறு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு யாருக்கு ஆதரவாக இருந்தாலும் ஷரிய சட்டப்படி பாபர் மஸ்ஜித் ஒரு மசூதி என்றும் கடைசி காலம் வரை அது ஒன்றுதான் இருக்கும் என்றும் கூறினார்.

ram janmabhoomi case, babri masjid - ayodhya case, ayodhya supreme court verdict, பாபர் மசூதி வழக்கு, பாபர் மசூதி அயோத்யா வழக்கு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, ஹர்ஷத் மதானி, ayodhya land dispute case, jamiat ulama-i-hind president, india news, Tamil indian express
ram janmabhoomi case, babri masjid – ayodhya case, ayodhya supreme court verdict, பாபர் மசூதி வழக்கு, பாபர் மசூதி அயோத்யா வழக்கு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, ஹர்ஷத் மதானி, ayodhya land dispute case, jamiat ulama-i-hind president, india news, Tamil indian express

உச்சநீதிமன்றத்திற்கு மிக உயர்ந்த மரியாதை அளித்துப் பேசிய ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி, அயோத்தி நில தகராறு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு யாருக்கு ஆதரவாக இருந்தாலும் ஷரிய சட்டப்படி பாபர் மஸ்ஜித் ஒரு மசூதி என்றும் கடைசி காலம் வரை அது ஒன்றுதான் இருக்கும் என்றும் கூறினார்.

“இந்திய உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு மிக உயர்ந்த மரியாதை உள்ளது. அதன் தீர்ப்பைக் கடைப்பிடிப்போம்” என்று மதானி கூறினார்.

அயோத்தியில் மத்தியஸ்த முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று கேட்டதற்கு, இரு தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளிலிருந்து கீழே இறங்கி வர வேண்டும் என்று மதானி கூறினார். “சர்ச்சைக்குரிய வக்ஃப் நிலத்தில் ராம் சபுத்ரா, ராம் பண்டாரா மற்றும் சீதா ரசோய் ஆகியோர் இருந்தபோதிலும் நாங்கள் ராம் சபுத்ராவை ஒப்புக்கொள்ள தயாராக இருந்தோம். ஆனால் இந்து கட்சிகள் மூன்று குவிமாடம் பகுதியையும், அதன் முற்றத்தில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தையும் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்த இடத்தையும் விட்டுத்தர தயாராக இல்லை. ஷரியா சட்டப்படி இது ஒரு மசூதி என்பதால் இந்திய வக்ஃப் சட்டம் அதை வழங்க அனுமதிக்காது. இருப்பினும், இந்து கட்சிகள் தங்கள் கோரிக்கையை அளவிட தயாராக இல்லை. அதனால், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை”என்று மதானி கூறினார்.

சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் இல்லத்தில் அனைத்துப் பிரிவு முஸ்லிம் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைச் சந்தித்து அயோத்தி வழக்கின் முடிவைப் பொருட்படுத்தாமல் மத நல்லிணக்கத்தைப் பேணத் தீர்மானித்தனர். இந்த சூழலில் மதானியின் கருத்துகள் வந்துள்ளன.

தாருல் உலூம் தியோபந்தின் ஆசிரியரும் ஜாமியத்தின் மூத்த தலைவருமான மதானி, கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக இன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்திக்க உள்ளார்.

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 40 நாள் விசாரணையை முடித்த பின்னர் இந்த மாத தொடக்கத்தில் தனது தீர்ப்ளிப்பதாக உறுதி செய்தது. நவம்பர் 17 ஆம் தேதி தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்பு, நவம்பர் நடுப்பகுதியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நிலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்க தீர்ப்பளித்தது. மசூதி பக்கத்திற்கு ஒரு பகுதி (சன்னி வக்ஃப் வாரியம்), இரண்டு இந்து தரப்பினருக்கு மூன்றில் இரண்டு பங்கு – ராம்லல்லா விராஜ்மான், தெய்வம், நிர்மோகி அகாரா ஆகியவற்றுக்கு சம பாகங்கள் என கூறியது.

பிரதமர் நரேந்திர மோடி தனது கடைசி ‘மான் கி பாத்’ உரையில், செப்டம்பர் 2010-இல் அயோத்தி வழக்கு தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றி பொதுமக்கள் மனமுதிர்ச்சியுடன் பதிலளித்தது குறித்து பேசினார். அவர் வரவிருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவர் தனது உரையில் குறிப்பிடவில்லை என்றாலும் அவரது குறிப்பு நீதிமன்றத்தின் உத்தரவைக் கடைப்பிடிப்பதற்கு ஒரு மறைமுகமான ஆலோசனையாக இந்த விவகாரம் தோன்றியது.

காஷ்மீர் முஸ்லிம்களின் அவலநிலையை புறக்கணிக்காதீர்கள்

370வது பிரிவை திருத்தியதற்கு பின்பு அவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் என்பதாலேயே காஷ்மீர் மக்களின் அவலநிலையை புறக்கணிக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை மதானி வலியுறுதினார். மேலும், இந்து, சீக்கிய, சமண, பௌத்த, கிறிஸ்தவ அகதிகளுக்கு உறுதியளித்து கொல்கத்தாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கள் சட்டத்துக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் வகுப்புவாத நட்பைப் பேணுவது தொடர்பான எனது கலந்துரையாடல்களின் மனப்பான்மைக்கு எதிராகவும் இருந்தது” என்றும் கூறினார்.

கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில் பாஜக தொண்டர்களிடையே பேசிய அமித்ஷா, “இந்து, சீக்கிய, சமண, பௌத்த, கிறிஸ்தவ அகதிகள் அனைவரும் நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படாது என்று உறுதியளிக்க விரும்புகிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். என்.ஆர்.சி.க்கு முன், குடியுரிமை (திருத்த) மசோதாவை நாங்கள் கொண்டு வருவோம். இது இந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதை உறுதி செய்யும். அவர்கள் ஒரு இந்திய குடிமகனின் அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பார்கள்” என்று கூறினார்.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று மதானி கூறினார். நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்ள உள்துறை அமைச்சருக்கு இது பொருத்தமானது இல்லை. இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கவா இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக எம்.பி.யாக உறுதியேற்றார்கள். நான் பகவத்தை சந்தித்தேன். ஏனென்றால், இன்று மட்டுமல்ல சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஜாமியத் இந்து முஸ்லீம் ஒற்றுமையை நம்பி அதற்காக உழைத்தது. ஆனால், அமித் ஷா கூறியது அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் அந்த பேச்சுகள் இறைமைக்கும் எதிரானது. இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். அத்தகைய எந்தவொரு சட்டத்தையும் எதிர்ப்போம்” என்று மதானி கூறினார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Babri masjid ayodhya case supreme court verdict reserved jamiat ulama i hind president arshad madani says

Next Story
இளம் பல்கலைக்கழக வேந்தர்… அம்பேத்கர் விருது பெற்று சாதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com