இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்கிய டிசம்பர் 6... அயோத்தியில் இதுவரை நடந்தது என்ன ?

26வது நினைவு தினத்தை ஒட்டி தேசம் முழுவது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...

பாபர் மசூதி இடிப்பு தினம் : இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சை மற்றும் மதக்கலவரங்களுக்கு வழிவிட்ட மிகவும் முக்கியமான நாள் இன்று தான். 26 வருடங்களுக்கு முன்பு உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த மசூதியான பாபர் மசூதியை இந்து அமைப்புகள் அழித்தது.  இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6ம் தேதி தேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம்.

அயோத்தி : பாபர் மசூதியும் ராம ஜென்ம பூமியும்

பாபரின் படைத்தலைவர் மிர் பக்கி, 1528ம் ஆண்டு, உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அயோத்தியில் பாபரின் ஆணைக்கு இணைங்க பாபர் மஸ்ஜித் என்ற பாபர் மசூதி கட்டப்பட்டது. 1940ம் ஆண்டுக்கு முன்பு வரை மஸ்ஜித் – இ – ஜன்மஸ்தான் என்று அழைக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு தினம், ராமர் கோவில் விவகாரம்

பாபர் மசூதி இடிப்பு தினம்

இதிகாசத்தில் கூறப்பட்டிருக்கும் 7 புனித தலங்களில் ராம ஜென்ம பூமியும் ஒன்று. பாபர் மசூதி கட்டப்படுவதிற்கு முன்பே அங்கு ராமரின் கோயில் ஒன்று இருந்ததாகவும், அதனை இடித்தே அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் பரவலாக நம்பிக்கை இருந்தது வந்தது. பத்தாம் நூற்றாண்டு முதலில் இருந்தே மசூதிக்கு மிக அருகிலேயே ராமரின் கோவில் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வந்தன. சர்ச்சைக்குரிய பகுதி என்பதால் 1948ம் ஆண்டு தொடங்கி 1989ம் ஆண்டு வரை பாபர் மசூதி பூட்டியபடியே இருந்தது.

பாபர் மசூதி தினம், ராமர் கோவில் விவகாரம்

பாபர் மசூதி இடிப்பு தினம்  – சர்ச்சை

1989ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம், அங்கு இந்துக்களுக்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தன. 1990களின் தொடக்கத்தில் இருந்தே, பாபர் மசூதியை முற்றிலும் இடித்துவிட்டு அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் என சங்பரிவார் இயக்கத்தினர் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருந்தனர்.

அன்றைய நாளில் இருந்து இன்று வரை, பாஜகவின் தேர்தல் பிரச்சார பரப்புரைகளில் ஒன்றாக மாறிவிட்டது இந்த பாபர் மசூதியும் ராம ஜென்மபூமியும். எல்.கே. அத்வானி இந்தியா முழுவதும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான ரத யாத்ரை மேற்கொண்டனர். இந்திய முழுவதும் எப்போது வேண்டுமானாலும் கலவரங்கள் நடைபெறலாம் என்ற நிலையை உருவாக்கப்பட்டது.

 

பாபர் மசூதி தினம், ராமர் கோவில் விவகாரம்

26 வருடங்களுக்கு முன்பு 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கர சேவர்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு சிறிய ராமர் சிலையை வைத்தனர். இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதக்கலவரங்கள் ஏற்பட்டது.

மேலும் படிக்க : ஜனவரி மாதம் தான் ராமர் கோவில் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும்

வழக்கு மற்றும் பெயர் மாற்றங்கள்

மசூதி இடிக்கப்பட்ட பின்பு மசூதியும் மசூதியைச் சுற்றிய இடத்தையும் அரசு கைப்பற்றியது. 67.7 ஏக்கர் நிலமும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அலகாபாத் நீதிமன்றம் இந்த சர்ச்சைக்குரிய பகுதியினை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என கடந்த 2010-ல் தீர்ப்பளித்தது.  இதற்கு மத்தியில் ராமர் கோயில் அமைந்திருக்கும் பைசாபாத்தின் பெயரை அயோத்தியா என்று மாற்றப்பட்டுள்ளது.

பாபர் மசூதி தினம், ராமர் கோவில் விவகாரம்

ராமர் கோவில் கட்டுவதற்கு இந்திய அரசு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ராமர் கோவில் தொடர்பான வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று எழுப்பி வந்த கோரிக்கைகளையும், அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close