பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, ஜோஷி உள்பட 32 பேரும் விடுவிப்பு

போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும் மசூதி இடிப்பு திட்டமிட்டு அரங்கவில்லை என்றும் தீர்ப்பு

Babri order today in the dock are Advani Joshi Bharti

 Manish Sahu

28 வருடங்கள் கழித்து பாபர் மசூதி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பினை வழங்க உள்ளது. எல்.கே. அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட இந்த குற்றத்தில் ஈடுபட்ட 32 நபர்களையும் நேரில் ஆஜராக அறிவித்துள்ளது நீதிமன்றம். செவ்வாய் கிழமை மாலை வரை எத்தனை நபர்கள் வருவார்கள் என்பதில் சந்தேகமே நிலவியது.

அத்வானி, ஜோஷி, நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் 80 வயதிற்கு மேற்பட்டோர் எனவே அவர்களின் உடல் நிலையை காரணம் காட்டலாம். உமா பாரதி, சதீஷ் ப்ரதான் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். உமா பாரதிக்கு கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார். சதீஷ் ப்ரதான் கேங்ரேன் நிலைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் உ.பி. முதல்வர் கல்யான் சிங் கொரோனா சிகிச்சை முடிவுற்று திங்கள் கிழமை தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களிலேயே மிகவும் வயது குறைந்தவர் பவன் குமார் பாண்டே. ஆனால் அவருக்கு தற்போது வயது 50ஐ தாண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

நாளை யார் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது கலந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. இதுவரை இவர்கள் சார்பில் எந்த வழக்கறிஞர்களும் விலக்கு வேண்டி விண்ணப்பங்கள் அனுப்பவில்லை என்று டிபென்ஸ் வழக்கறிஞர் கே. கே. மிஸ்ரா அறிவித்துள்ளார். தீர்ப்பைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

குற்றம் சாட்டப்பட்ட நிருத்யா கோபால் மற்றும் வி.எச்.பி. துணை தலைவர் சம்பத் ராய் ஆகியோரும் ராமர் கோவில் கட்ட உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தலைமை செயலாளர் ஆவார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மோடியுடன் அவர்கள் இருந்தனர்.

இதர குற்றம் சாட்டப்பட்டவர்கள் உன்னாவ் எம்.பி. சாக்‌ஷி மகாராஜ், ஃபைசாபாத் எம்.பி. லல்லு சிங், கோண்டா எம்.பி. ப்ரிஜ் பூஷண் ஷரன் சிங், வினய் கதியார் மற்றும் சாத்வி ரிதம்பாரா ஆவார்கள். இந்த வழக்கில் 49 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது, அவர்களில் 17 பேர் விசாரணையின் போது இறந்தனர். நீதிமன்றம் 351 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்தது.

2001 ஆம் ஆண்டில், குற்றம் சாட்டப்பட்ட 21 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை நீதிமன்றம் கைவிட்டது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், ஏப்ரல் 19, 2017 அன்று, உச்சநீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுகளை மீட்டெடுக்க உத்தரவிட்டது மற்றும் இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கூறி தினசரி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.

இரண்டு மதக்குழுக்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்திய குற்றசாட்டுகளுடன் சேர்த்து சதி குற்றங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர்கள் விசாரணையையும் எதிர்கொள்கின்றனர். இவர்கள் மீது மேலும், தேசிய ஒருமைப்பாட்டை பாரபட்சமாக்கியது மற்றும் வழிபாட்டு தலத்திற்கு சேதத்தை உருவாக்குதல் போன்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பவர்கள் சதித்திட்டம் தீட்டி கர சேவர்களை மசூதியை உடைக்க தூண்டுவிட்டதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்த வழக்குகள் அன்றைய காங்கிரஸ் கட்சியால் இந்த வழக்கில் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளோம் என்று கூறினர்.

கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் மசூதியை இடித்தது விதிமுறைகளை மீறியது என்றும் கூறியது. பாபர் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் உ.பி. அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. கடந்த மாதம், சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கிரிமினல் ப்ரோசிஜர் கோட் பிரிவு 313 இன் கீழ் பிரதான், அத்வானி மற்றும் ஜோஷி ஆகியோரின் அறிக்கைகளை வீடியோ வாயிலாக பதிவு செய்திருந்தது. இப்பிரிவின் கீழ், ஒரு நீதிபதி ஆதாரத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேள்வி எழுப்புகிறார் மற்றும் குற்றச்சாட்டுகளை விளக்க அவளுக்கு அல்லது அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தீர்ப்பினை வாசித்த சி.பி.ஐ சிறப்பு நீதிபதி 

எல்.கே. அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோஹர் ஜோஷி, உமா பாரதி, சதிஷ் ப்ரதான், மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலமாக ஆஜாரானார்கள். இவர்களை தவிர்த்து குற்றம் சுமத்தப்பட்ட 32 நபர்களில் 26 நபர்கள் லக்னோவில் அமைந்திருக்கும் அயோத்யா ப்ரகாரன் நீதிமன்றத்தில் உள்ள 18வது நீதிமன்ற அறையில் ஆஜராகினர்.   சி.பி.ஐ நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் 1992ம் ஆண்டு நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பினை வழங்கினார். அந்த தீர்ப்பில் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் மீது சுமத்திய குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் மசூதி இடிப்பு திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Babri order today in the dock are advani joshi bharti

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com