கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது எழுப்பபட்ட இந்துத்துவா பிரச்சனைகள், பஜ்ரங் தளத்திற்கு எதிராக காங்கிரஸ் வாக்குறுதி அளித்த நிலையிலும் கர்நாடகா மக்களிடையே அது எதிரொலிகத் தவறிவிட்டது. பா.ஜ.க ஆதிக்கம் செலுத்தும் கரையோரப் பகுதியில் மட்டுமே அது பயனளித்தது.
பா.ஜ.க பிரச்சாரத்தின் போது ஹிஜாப் மற்றும் ஹலால் இறைச்சி மீதான தடை போன்ற பிரச்சினைகளை கவனமாக கையாண்டது. பின்னர், பிரச்சாரம் கடினமாகப் போவதை அறிந்து காங்கிரஸ் அறிக்கையை கையில் எடுத்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உடன் பஜ்ரங் தள் இணைத்து அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் குறித்து விமர்சித்தது.
இதற்கு பாஜகவின் பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இருந்தது. அவர் பேசுகையில் காங்கிரஸ் அனுமனை சிறையில் அடைக்க பார்க்கிறது என்று கூறினார். இதற்கு பின் மேலே ஒரு படி சென்று வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும்போது “ஜெய் பஜ்ரங் பலி” என்று கோஷமிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆனால் தேர்தல் முடிவில், 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஹிஜாப் விவகாரம் முதல் முதலில் ஒலித்த உடுப்பி மாநிலத்தில் மட்டுமே அங்குள்ள 5 தொகுதிகளையும் பா.ஜ.க வெற்றி பெற்றது.
பல்கலைக்கழக வளாகங்களில் ஹிஜாப் அணிய தடை செய்யும் பிரச்சாரத்தை முன்னின்றி நடத்திய பசுக் காவலராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய யஷ்பால் சுவர்ணா, காங்கிரஸ் வேட்பாளர் பிரசாத்ராஜ் காஞ்சனை விட சுமார் 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தலில் பாஜகவால் நிறுத்தப்பட்ட புதிய முகங்களில் சுவர்ணாவும் ஒருவர். அவர் சிட்டிங் எம்எல்ஏ கே. ரகுபதி பட்டைக்கு பதிலாக களமிறக்கப்பட்டார். தட்சிண கன்னடா மாவட்டத்தில், 8 இடங்களில் 6 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது – ஆனால் இது 2018-ல் வென்றதை விட 1 இடம் குறைவு. காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ராய் வெற்றி பெற்ற புத்தூரில் பாஜக தோல்வியடைந்தது. அருண் குமார் புதிலா, கிளர்ச்சி வேட்பாளரும், ஹார்ட்கோர் இந்துத்துவ ஆதரவாளரும் ஆவார். புத்தூரில், கிளர்ச்சி காரணமாக, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, தேர்தலுக்கு முன், பிரசாரம் செய்ய பா.ஜ.க தடுத்தது.
பா.ஜ.க கோட்டையில் எம்.எல்.ஏ.க்கள் தோல்வி
2018 இல் தட்சிண கன்னடாவில் காங்கிரஸ் வென்ற ஒரே தொகுதியான மங்களூர் தொகுதியை அதன் வேட்பாளர் யு.டி காதர் தக்க வைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர், இம்முறை 22,977 வாக்குகள் வித்தியாசத்தில் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்துத்துவா அடிப்படையைக் கொண்ட குடகு மாவட்டத்தில் பஜ்ரங் தளம் விவகாரம் சற்று முன்னேற்றம் தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜ.க தனது கோட்டையாக கருதப்படும் மாவட்டத்தில், இரண்டு தொகுதிகளையும் இழந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களான ஏ.எஸ்.பொன்னண்ணா மற்றும் மந்தர் கவுடா ஆகியோர் பாஜகவின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.போபையா மற்றும் அப்பாச்சு ரஞ்சன் ஆகியோரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினர்.
2013-2018- ம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், குடகுவில் திப்பு ஜெயந்தியைக் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது.
திப்பு கதை
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, வொக்கலிகா தலைவர்களான உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகிய இருவரும் திப்புவை கொன்றதாக பா.ஜ.க கூறியது. இது வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்பட்டது. பழைய மைசூர் பகுதியில், குறிப்பாக மாண்டியா மாவட்டத்தில் இந்தக் கதை வேலை செய்யும் என்று பாஜக நம்பியது.
ஆனால் லிங்காயத் சமூகத்தின் முக்கிய மடமான ஆதிசுஞ்சனகிரி மடம் இதை மறுத்தது. சனிக்கிழமையன்று வெளியான முடிவுகளில், மாண்டியாவில் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது. அமைச்சராக இருந்த கே.சி. நாராயண் கவுடாவும் தொகுதியை இழந்தார். 1 இடத்தில் மட்டும பா.ஜ.க வென்றது. இதையொட்டி காங்கிரஸ் வொக்கலிகாவின் மையப்பகுதியில் பெரும் இடத்தைப் பிடித்தது.
வொக்கலிகா தலைவரின் கோட்டையாக கருதப்படும் சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.திம்மையாவிடம் பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி தோல்வியடைந்தார். சி.டி.ரவி தீவிர இந்துத்துவா சித்தாந்தத்தை பின்பற்றுபவர் ஆவார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் பாஜக அங்கு 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
மற்றொரு சர்ச்சைக்குரிய இந்துத்துவா சித்தாந்தவாதியான பசங்கவுடா பாட்டீல் யத்னால் விஜயப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“