/tamil-ie/media/media_files/uploads/2022/02/Bajrang-dal-1.jpg)
Karnataka minister blames Congress for murder of Bajrang Dal worker, Congress asks BJP ministers to quit: ஞாயிற்றுக்கிழமை இரவு கர்நாடகாவின் சிவமோகா பகுதியில் வலதுசாரி பஜ்ரங் தள் குழுவின் செயல்பாட்டாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் ஆளும் பாஜக உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போரைத் தூண்டியுள்ளது.
நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட குழுவால் ஹர்ஷா என அடையாளம் காணப்பட்ட 26 வயது பஜ்ரங் தள் செயல்பாட்டாளர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஹர்ஷாவின் உடல் அரசு மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, திங்கள்கிழமை காலை சிவமோகா நகரில் பதற்றம் நிலவியது. ஊர்வலத்தின் போது கல் வீச்சு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
Karnataka | Body of the 26-year-old Bajrang Dal activist Harsha, who was allegedly murdered yesterday in Shivamogga, being taken to his residence amid Police security after postmortem.
— ANI (@ANI) February 21, 2022
Large numbers of workers of Hindu organisations join in. pic.twitter.com/6jllIkEZ0q
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா மற்றும் சிவமோகாவைச் சேர்ந்த அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில், கொலையாளிகளை அரசு கண்டுபிடித்து, அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது சொந்த மாவட்டத்தில் கொலை நடந்ததால் தார்மீக அடிப்படையில் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார்.
இதற்கிடையில், அமைச்சர் ஈஸ்வரப்பா, இது காங்கிரஸ் கட்சியால் தூண்டப்பட்ட கொலை என்று கூறினார். “சிவமோகாவில் எங்கள் கட்சியின் ஒரு நல்ல தொண்டர் கொல்லப்பட்டுள்ளார். அதை முஸ்லிம் குண்டர்கள் செய்துள்ளனர். சிவமோகாவில் முஸ்லிம் குண்டர்கள் ஒருபோதும் தைரியமாக இருந்ததில்லை, அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.
“சிவகுமாரின் (மாநில காங்கிரஸ் தலைவர்) ஆத்திரமூட்டும் அறிக்கைகளால் கொலை நடந்துள்ளது,” என்றும் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார்.
இதையும் படியுங்கள்: மத்திய அரசின் மூலதன செலவுகளுக்கான கடன், எங்கள் கைகளை கட்டிப் போடுகிறது – எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்
தேசியக் கொடியை அவமதித்ததற்காக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகக் கோரி காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எதிர்காலத்தில் காவிக்கொடியே தேசியக் கொடியாக மாறக்கூடும் என அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார். ஈஸ்வரப்பாவின் கருத்துக்கு பதிலளித்த சிவக்குமார், “தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, அதில் எனக்கு தொடர்பு இருந்தால் என் பெயரையும் சேர்க்கட்டும்” என்று கூறினார்.
அப்பகுதி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். மேலும், “இந்து ஹர்ஷா என்ற இளைஞர் கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அவர் எங்கள் அமைப்பின் ஊழியர். விசாரணை தொடங்கியுள்ளது. பல தடயங்கள் கிடைத்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்,'' என்றும் முதல்வர் கூறினார்.
“அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம். சிவமோகா மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் பொம்மை கூறினார். மேலும், ஈஸ்வரப்பா கூறியதற்கு நான் பதிலளிக்க மாட்டேன். விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருப்போம்” என்றும் முதல்வர் கூறினார்.
“கொலைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவத்தில் நான்கைந்து பேர் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் வலுவான முறையில் கையாளப்படும் என்ற தெளிவான செய்தியை தெரிவித்துக் கொள்வோம். பாதிக்கப்பட்டவர் மீதும் ஓரிரு வழக்குகள் இருப்பதாக சில தகவல்கள் உள்ளன” என்று உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார்.
"ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் இந்த கொலை நடந்துள்ளது, இது அமைதியை குலைக்கும் நோக்கம் கொண்டது" என்று மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் கூறினார்.
அதிகாரிகள் அப்பகுதியில் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.