பாலகோட் தாக்குதல் : இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து வதந்தி பரப்பியவர்கள் யார்? - ப. சிதம்பரம் கேள்வி

இந்திய குடிமகன் என்ற ரீதியில் என்னுடைய அரசை நான் நம்புகின்றேன். உலகம் நம்ப வேண்டுமே?

Balakot attack P.Chidambaram asks question : புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை.  பாகிஸ்தானில் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 300 வீரர்கள் பலியானார்கள் என்று தகவல்கள் வெளியாகின.

Balakot attack P.Chidambaram asks question

இது குறித்து பலருக்கும் பல்வேறு விதமான சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில் ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு விதமான கருத்துகளையும் எண்ணிக்கைகளையும் கூறி வந்தனர்.

இது குறித்து கோவை மாவட்டம் சூலூரில் அமைந்திருக்கும் விமானப்படை பள்ளியில், செய்தியாளர்களை சந்தித்தார் விமானப்படை தளபதி தனோவா. அப்போது அவரிடம் எத்தனை தீவிரவாதிகள் பலியாகினர் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை இந்திய விமானப்படை கணக்கிடவில்லை. ஆனால் எத்தனை இலக்குகளை தாக்கும் என்று தான் கணக்கிடும் என்று கூறினார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலகோட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300/350 என பரப்பியது யார் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், விமானப்படை துணைத் தளபதி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கூற மறுத்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய குடிமகன் என்ற ரீதியில் என்னுடைய அரசை நான் நம்புகின்றேன். உலகம் நம்ப வேண்டுமே ? அதற்கான முயற்சியினை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கைகள் வைப்பதில் என்ன தவறும் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close