ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான "தடை" நீக்கப்பட்டதாகக் கூறுவதற்காக கடந்த வாரம் வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவை காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை மேற்கோள் காட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்களால் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அரசாங்க உத்தரவின் உண்மைத்தன்மையை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்றாலும், பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மாளவியாவும் இந்த உத்தரவின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துகொண்டு, 58 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட "அரசியலமைப்புக்கு எதிரான" உத்தரவு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இது மோடி அரசால் வாபஸ் பெறப்பட்டது எனக் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : ‘Ban’ on govt employees taking part in RSS activities removed: Cong, BJP cite DoPT ‘order’
காங்கிரஸ் பொதுச் செயலாளர் (தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ், ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பது தொடர்பாக, பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஜூலை 9 தேதியிட்ட அலுவலகக் குறிப்பைப் பகிர்ந்துகொண்டார்.
அந்த உத்தரவின் படத்துடன் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “சர்தார் படேல் காந்திஜியின் படுகொலையைத் தொடர்ந்து 1948 பிப்ரவரியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்தார். இதையடுத்து, நல்ல நடத்தை உறுதியளித்ததன் பேரில் தடை வாபஸ் பெறப்பட்டது. இதற்குப் பிறகும் ஆர்எஸ்எஸ் நாக்பூரில் மூவர்ணக்கொடி பறக்கவில்லை. 1966 ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 4ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்ற பின்னர் ஆர்எஸ்எஸ்- பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டது. இந்தத் தடை வாஜ்பாய் காலத்தில் கூட தொடர்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த உத்தரவின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ள காங்கிரஸின் ஊடகங்கள் மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா, 58 ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.