Bandipur Tiger Reserve: கர்நாடக-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள பந்திப்பூர் டைகர் ரிசர்வ் ஃபாரஸ்டில், இரண்டு விவசாயிகளைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் புலியைக் கண்டுபிடிக்க கர்நாடக வனத்துறை ட்ரோன் கேமராக்கள், ஆறு யானைகள் மற்றும் கிட்டத்தட்ட 140 கேமரா பொறிகளை தயார் செய்திருக்கிறது.
Advertisment
சிவலிங்கப்பா என்ற விவசாயி அக்டோபர் 8-ஆம் தேதி செளதஹள்ளி வனப்பகுதியில் உள்ள அவரது நிலத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தேடல் தொடங்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களில் ஹுண்டிபுரா கிராமத்திற்கு அருகே, பல புலிகள் நடமாடியதை உள்ளூர்வாசிகள் கண்டிருக்கிறார்கள். அதோடு சந்தேகப்படும் புலி, கடந்த மாதமும் தாக்குதல் நிகழ்த்தியது.
செப்டம்பரில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, வனத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர், ஆனால் அகப்படாத புலி, தொடர்ந்து மழுப்பி வந்தது.
இது குறித்துப் பேசிய வனத்துறை அதிகாரி, அவர்கள் (உள்ளூர்வாசிகள்) நாங்கள் புலியைப் பிடிக்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த மாதம் அதைப் பிடிக்கத் தவறியதால் தான், இந்த மாதம் புதிய சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். வனத்துறையினர் முன்பு மூன்று யானைகளின் சேவையை நாடியிருந்தனர். சமீபத்தில் நடந்த சம்பவத்தையடுத்து மேலும் மூன்று யானைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஊழியர்களைக் கொண்ட ஐந்து குழுக்களையும் வனத்துறை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வன அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். புலியின் சமீபத்திய விசிட்டுகளின்படி, மறைத்து வைக்கக்கூடிய ஐந்து இடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்” என்றார்.
ஹுண்டிபுராவில் உள்ள விவசாயி நாராயண் செட்டி, “நாங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக எங்கள் வயலுக்குச் அழைத்துச் சென்றால் புலி தாக்கப்படும் அபாயம் உள்ளது. இங்கு யானைகளைப் பார்ப்பதற்கு நாங்கள் பழக்கமாகிவிட்டோம், ஆனால் கடந்த ஆறு மாதங்களாக, பல புலிகளை காண்கிறோம். நாங்கள் 30 ஆண்டுகளாக இங்கு இருக்கிறோம். மேய்ச்சலுக்கு எங்கள் கால்நடைகளை பண்ணைகளிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது” என்றார்.
பந்திப்பூர் டைகர் ரிசர்வின் கள இயக்குநர் டி.பாலசந்திரா கூறுகையில், ”புலியின் கோடு சுயவிவரம் கேமரா பொறிகளிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட விலங்குகளை அறிய டி.என்.ஏ விவரக்குறிப்பும் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
”கடந்த ஆண்டு மகாராஷ்டிராவின் யவத்மாலில் அவ்னி புலியை சுட்டுக்கொன்றதில் ஈடுபட்டிருந்த ஷார்ப்ஷூட்டர் தந்தை மகனான, ஷபத் அலி கான் மற்றும் அஸ்கர் அலி ஆகியோருக்கு பந்திப்பூருக்கு அருகில் சொத்து இருக்கிறது. அங்கு வந்த அவர்கள், புலியை தேடித்தர முன்வந்தனர், ஆனால் வன அதிகாரிகளும் வனவிலங்கு ஆர்வலர்களும் அதை நிராகரித்தனர்” என உள்ளூர் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.