16,000 கோடி ரூபாய் செலவில் 262 கிமீ நீளமுள்ள மத்திய அரசின் லட்சிய சாலையான பெங்களூர்-சென்னை விரைவுச்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமானத்திற்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு வழியாகச் செல்லும், இரண்டு பெருநகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் குறைக்கும். இந்த சாலை, சித்தூர் பிரிவு உட்பட பலமனேர் மற்றும் தெக்குமண்டா காப்புக்காடுகளின் வழியே அமைகிறது.
இது பாரத்மாலாவின் கீழ் உள்ள கவுண்டினியா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ராயாலா யானைகள் காப்பகத்தின் ESZ இன் ஒரு பகுதியாகும்.
இந்நிலையில், 61.73 ஹெக்டேர் வன நிலத்தை விரைவுச்சாலை அமைப்பதற்காக பயன்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன்மொழிந்துள்ளது.
தேசிய வனவிலங்கு வாரியம், ஏப்ரல் 25 அன்று நடந்த கூட்டத்தில், திட்ட ஆதரவாளரான தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பராமரிக்க வேண்டிய சில நிபந்தனைகளை வைத்தது.
முன்மொழியப்பட்ட பகுதியை விரைவுச்சாலைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், எந்த வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியாது, மாற்றுப்பாதை வனத்துறையின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படும், திசை திருப்பும் பகுதிகள் பணி தொடங்கும் முன் நிறுவனத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.
மேலும் ஆணையம் சுற்றியுள்ள வன நிலத்தில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியாது.
1,698 லட்சத்திற்கான வனவிலங்கு பாதுகாப்புத் திட்டத்தை நெடுஞ்சாலை ஆணையம், டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் மனித-யானை மோதலைச் சமாளிக்க யானைகளின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்காக திட்ட மதிப்பீட்டில் 2 சதவீதம் செலுத்த வேண்டும்.
2022 டிசம்பரில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் கூட்டத்திற்குப் பிறகு, முன்மொழிவை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வழிவகுத்தது.
இந்த குழு சித்தூர் வனப் பிரிவு மற்றும் ராயலா யானைகள் காப்பகத்தின் காடுகள் வழியாகச் செல்லும் 7.1 கி.மீ நீளமுள்ள 4-வழி விரைவுச் சாலைக்கான விலங்கு வழித் திட்டத்தை பரிந்துரைத்தது.
இந்திய வனவிலங்கு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி யானைகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு பாதாள பாதைகள் அமைக்க வேண்டும் என்று அது கூறியது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பின்னர் முன்மொழிந்த சாலையில் விலங்குகளுக்கான தெளிவான பாதையின் நீளத்தை 3,090 மீட்டராக மாற்றியது.
உத்தேச விரைவுச் சாலையின் 7.1 கிமீ நீளம் முழுவதும், விலங்குகள் சாலையின் மேல் கடக்க அனுமதிக்கக் கூடாது.
விரைவுச் சாலையின் உயரமில்லாத பிரிவுகளில், பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோல் தேசியப் பூங்காக்களில் கர்நாடக வனத் துறையால் பயன்படுத்தப்படும் இயந்திர ரயில்வே தடுப்பு வடிவமைப்பை (mechanical railway barrier design) பின்பற்றுவதன் மூலம் யானைக்கு இதை உறுதி செய்யலாம்.
பாலூட்டிகளான சிறுத்தைகள், கரடிகள் மற்றும் பிற விலங்குகள் விரைவுச் சாலையைக் கடப்பதைத் தடுக்க தடுப்புச்சுவரின் கீழ் பகுதியில் சங்கிலி இணைப்பு வேலி சேர்க்கப்படலாம், என தேசிய வனவிலங்கு வாரியம் கூறியது.
விலங்கு வழிகளின் செயல்திறனை உறுதி செய்வதற்கும், வனவிலங்கு-மனித மோதல்கள் போன்ற சாத்தியமான பின்விளைவுகளைக் கண்காணிப்பதற்கும், இந்த நிலப்பரப்பில் யானைகள் மற்றும் பிற விலங்கினங்களின் நடமாட்டத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆராய்ச்சி திட்டத்தையும் தேசிய வனவிலங்கு வாரியம் முன்மொழிந்தது.
இது ஜிபிஎஸ் காலரிங் உட்பட, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதியுதவியுடன், பிராந்திய நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், வன உயிர் காப்பாளர்/DFO மற்றும் களப் பணியாளர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ESZ இலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் 48 கிமீ நீளத்திற்கு, விரைவான பதில் குழு மற்றும் வனவிலங்கு-மனித மோதல்களைத் தணிப்பதற்கான பிற நடவடிக்கைகள் உட்பட பல்லுயிர் பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது, இது தேசிய நெடுஞ்சாலையின் நிதியுதவியுடன் ஆந்திரப் பிரதேச வனத் துறையால் செயல்படுத்தப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“