கிழக்கு பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் பங்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் இஸ்லாம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஒரு கும்பல், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டையும் காவல் நிலையத்தையும் தாக்கினர். இதனால், கிழக்கு பெங்களூர்வில் ஏற்பட்ட வன்முறையில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, எம்.எல்.ஏ.வின் உறவினர் உட்பட 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி ஒருவர் விசாரணை நடத்துவார் என்று கர்நாடகா முதல்வர் பிஎஸ் எடியுரப்பா தெரிவித்துள்ளார்.
“இந்த வன்முறை உள்ளூர் அரசியல் குழுக்களிடையே நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. ஆனால், விசாரணை நடைபெறும் வரை நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம்” என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.
வன்முறையில் கர்நாடகாவின் முஸ்லீம் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் களமிறங்க முயற்சிக்கும் அரசியல் அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ)யின் பங்கை விசாரிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை பாக்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் தாக்குதல் நிலையை கண்டித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
துப்பாக்கிச் சூட்டில் அதே பகுதியைச் சேர்ந்த வாஜித் கான் (19), சையத் யாசின் பாஷா (21) மற்றும் சையத் ஷேக் (24) என 3 பேர் உயிரிழதனர். இந்த 3 பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததால் உயிரிழந்தனர். என்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவர் ஒருவர் கூறினார்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது வாஜித் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது உடலை அப்புறப்படுத்த ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தேவர ஜீவன ஹல்லி (டிஜே ஹல்லி) நிலையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவாதம் இல்லை என்று கூறியுள்ளனர். அதிகாரிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் போலீசார் ஆரம்பத்தில் கட்டுப்பாடுகளைக் விதித்தனர். ஆனால், நிலைமை கட்டுப்பாட்டை மீறியது.
உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு போலீசாருடன் தொடர்பு கொண்ட சமூக சேவகர் மஸ்தான் அஹமது கூறுகையில், “காவல்துறையினர் லேசான தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச முயற்சித்தனர். ஆனால், வன்முறை ஒரு கட்டத்திற்குப் பிறகு கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. அதன்பிறகு, துப்பாக்கிச் சூடு மட்டுமே வன்முறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது” என்று கூறினார்.
ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்த வாஜித் கானின் தொடையிலும் முதுகிலும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயம் இருந்தது. தனது சகோதரரின் ஆட்டிறைச்சி கடையில் வேலை செய்து வந்த சையத் யாசின் பாஷாவின் இடுப்பு பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்த காயம் இருந்தது. ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான சையத் ஷேக்குக்கு மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து உள்ளது.
யாசின் பாஷாவின் சகோதரர் ஷோயிப் பாஷா கூறுகையில், “துப்பாக்கிச் சூடு நடந்தபோது யாசின் எங்கள் கடையிலிருந்து திரும்பி வந்தார். அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக அவர் இறந்தார்” என்று கூறினார். “வாஜித் கான் ஒரு குழந்தை. அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம். அவர்கள் ஏன் அவரை சுட்டார்கள்” என்று வாஜித் கானின் சகோதரர் ஷாஹித் கான் கூறினார். சையத் ஷேக்கின் தாய் கூறுகையில், “அவரது தந்தை இறந்ததிலிருந்து அவன்தான் என்னை பாதுகாத்து வந்தான்” என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ அகந்தா சீனிவாச மூர்த்தியின் மருமகன் பி.நவீன் பதிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் இருந்து நிலைமை வன்முறையாக மாறியுள்ளது. வன்முறையின்போது, அப்பகுதியில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது.
அதற்கு அருகிலுள்ள காவல் பைரசந்திரா பகுதியில் உள்ள எம்.எல்.ஏ மூர்த்தியின் வீட்டில் ஒரு தனி குழு கற்களை வீசத் தொடங்கியது.
மாலை 6 மணியளவில் வேகமாக அதிகரித்த வன்முறை உள்ளூர் அரசியல் நோக்கத்துக்காக ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
டிஜே ஹல்லியில் உள்ள அதிகாரிகளின் கூறுகையில், எஸ்.டி.பி.ஐ.யின் பிரதிநிதிகள் குழு செவ்வாய்க்கிழமை மாலை காவல் நிலையத்திற்கு வருகை தந்தனர். வெளியில் கூட்டம் கூடத் தொடங்கியபோதும் போலீசார் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்வதை தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சந்தேக நபரை போலீசார் நிலையத்தில் வைத்திருப்பதாக வதந்திகள் பரவியது என்று தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “சந்தேக நபரை ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். விரைவில், நிலைமை கையை விட்டு போய்விட்டது. எஸ்.டி.பி.ஐ செயற்பாட்டாளர்களை வன்முறையுடன் தொடர்புடைய வீடியோ காட்சிகள் எங்களிடம் உள்ளன” என்று கூறினார்.
புதன்கிழமை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட எஸ்.டி.பி.ஐ ஆர்வலர் ஜாஃபர் அகமது, உள்ளூர் தலைவர் முசம்மில் பாஷா தலைமையிலான பிரதிநிதியின் ஒரு பகுதியாக உள்ளார். ஆனால், வன்முறையில் அதற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் மறுத்தார். இந்த வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பாஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“நவீனுக்கு எதிரான புகாரின் அடிப்படையில் நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.டி.பி.ஐ யின் பங்கு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று டிஜே ஹல்லி இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி கூறினார்.
இருப்பினும், இன்னொரு அதிகாரி கூறுகையில், இன்ஸ்பெக்டர் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை என்றும் அதனால், திட்டமிட்ட தாக்குதலுக்கு வழிவகுத்தது. இதில் சுமார் 50 பேர் சிறிய காயங்களுக்கு ஆளானார்கள் என்று கூறினார்.
“இரவு 7 மணிக்கு காவல் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டபோது, இன்ஸ்பெக்டர் மற்றும் ஏ.சி.பி எங்களை காத்திருக்கச் சொன்னார்கள். இரவு 11.30 மணியளவில் கூட குற்றவாளியை போலீசார் கைது செய்யவில்லை. இது நிலைமை மோசமடைய வழிவகுத்தது”என்று எஸ்.டி.பி.ஐயின் கர்நாடக பொதுச் செயலாளர் அப்துல் ஹன்னன் கூறினார்.
எம்.எல்.ஏ.வின் மருமகன் பாஜகவுடன் தொடர்புடையவர் என்றும், கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் ஆளும் கட்சியை ஆதரித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறினார்.
எம்.எல்.ஏ மூர்த்தி பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். முஸ்லிம்கள் மக்கள் அதிகம் உள்ள புல்கேஷிநகரில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இவர் 2018ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்த 8 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூர்மையான ஆயுதங்கள், தடிகள், கட்டைகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளால் ஆயுதம் ஏந்திய 3,000 க்கும் மேற்பட்டவர்களால் தனது வீடு தாக்கப்பட்டது என்றும் வீட்டிற்கு உள்ளே இருந்த மதிப்புமிக்க பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும்” கூறினார். மேலும், எம்.எல்.ஏ கடந்த 10 ஆண்டுகளாக தனது மருமகனுடன் எந்த உறவும் இல்லை என்று எம்.எல்.ஏ மூர்த்தி கூறினார்.
“2018 சட்டமன்றத் தேர்தலில், மூர்த்தி 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது பெங்களூரில் மிக அதிக வாக்கு வித்தியாசமாக இருந்தது. முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் அவர் இவ்வளவு வித்தியாசத்தில் வென்றிருக்க முடியாது. இந்த சம்பவம் மூர்த்தியை இழிவுபடுத்துவதற்கும், அப்பகுதியில் தோல்வியடைந்த மற்றொரு அரசியல்வாதிக்கு உதவுவதற்காகவும் நடந்திருக்கலாம்” என்று உள்ளூர் சமூக சேவகர் ஷாஃபி அகமது கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.