பெங்களூருவில் தண்ணீர் தொட்டி கட்டுமான பணியில் 3 பேர் பலி, 20 பேர் படுகாயம்

Water Tank Collapse at Bangalore: இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

By: June 17, 2019, 5:14:55 PM

பெங்களூருவின் நாகவரா பகுதியில் கட்டுமானத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரை அடுத்த நாகவரா பகுதியில் உள்ளது ஜோகப்பலா லே அவுட். இங்கு பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இன்று தொழிலாளர்கள் கட்டுமானப்பகுதியில் ஈடுபட்டுக் கொண்டிக்கும் போது, நீர் தொட்டியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

பல தொழிலாளர்கள் இடிந்து விழுந்த கட்டுமானப் பொருட்களுக்குள் சிக்கியிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் அவசர சேவைகள் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது இடிபாடுகளின் கீழ் சிக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் தொழிலாளர்களை காப்பாற்ற மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டுமானப் பணியின் கீழ் இருந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Bangalore water tank collapse 3 killed 20 injured

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X