இந்தியா தனது ராணுவத்தை உஷார் நிலையில் வைத்திருக்கும் அதே வேளையில் வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்று காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு உத்தியை கடைபிடிக்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அண்டை நாட்டில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்து தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Bangladesh crisis: India maintaining wait-and-watch strategy, Army on alert, S Jaishankar informs all-party meet
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறிய ஒரு நாளுக்குப் பிறகு, வேலையில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்களில் தொடங்கிய போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்கிழமையன்று, வங்கதேச நிகழ்வுகள் இந்தியாவில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், வெளியில் இருந்து குறுக்கீடு இருந்தால் என்ன உத்தியாக இருக்கும் என்பது குறித்தும் பேசினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கதேச நிகழ்வுகளின் வளர்ச்சியில் வெளி சக்திகளின் பங்கு குறித்து அரசாங்கத்திடம் ஏதேனும் தகவல் உள்ளதா என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டதற்கு, ஜெய்சங்கர், “பாகிஸ்தான் தூதரகத்தின் மாற்றப்பட்ட டி.பி பற்றிய தகவல்கள் மட்டுமே அரசிடம் உள்ளது. அது இந்த கிளர்ச்சிக்கு அவரது ஆதரவைக் காட்டுகிறது” என்று கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைய வாய்ப்பு இருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷேக் ஹசீனாவின் திட்டங்களைப் பற்றி இந்திய அரசுக்கு ஏதேனும் யோசனை இருக்கிறதா என்று ராகுல் காந்தி கேட்டபோது, அவரது எதிர்கால நடவடிக்கை குறித்து இந்தியா அவரிடம் பேசியதாகவும், ஆனால், அதை தற்போது வெளியிட முடியாது என்றும் ஜெய்சங்கர் தலைவர்களிடம் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் ஏதேனும் “வெளிநாட்டு சக்திகள் குறிப்பாக சீனாவின் பங்கையும், அந்நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பற்றியும் அரசாங்கம் கவனிக்கிறதா என்றும் ராகுல் காந்தி கேட்டார். இதற்கு ஜெய்சங்கர் கூறியதாவது, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகி, அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதைக் காண இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் காந்தியைத் தவிர, மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால், தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, ஐக்கிய ஜனதா தளம் கட்சிய்ன் லல்லன் சிங், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் டெரெக் ஓ பிரையன், சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் அணி) அரவிந்த் சாவந்த், பிஜு ஜனதா தளத்தின் சஸ்மித் பத்ரா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) சுப்ரியா சுலே மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆவர். இந்தக் கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்துடன் நிற்போம் என்று உறுதியளித்தனர்.
“வங்காளதேசத்தில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்து இன்று பார்லிமென்டில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட ஒருமித்த ஆதரவையும் புரிதலையும் பாராட்டுகிறேன்” என்று ஜெய்சங்கர் கூட்டத்துக்குப் பிறகு எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவில் கூறினார்.
வங்கதேச ராணுவத்துடன் புது டெல்லி தொடர்பில் இருப்பதாகவும், இந்திய ராணுவத்தை எச்சரித்ததாகவும் ஜெய்சங்கர் தலைவர்களிடம் தெரிவித்தார். “நமது நாட்டின் பாதுகாப்பையும் காவலையும் உறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தலைவருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக் காட்டிப் பேசினார்.
மேலும், நிலைமை மேலும் மோசமடைந்தால் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அரசாங்கத்தின் குறுகிய கால உத்தி குறித்து ராகுல் காந்தி கேட்டதற்கு அவர் பதிலளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் மேற்கு வங்க அரசாங்கத்தை இணைப்பில் வைத்திருக்க வேண்டும் என்று முற்பட்டனர். ஏனெனில், வங்கதேச நிகழ்வுகளின் அனைத்து அழுத்தங்களையும் உள்வாங்கப் போவது அந்த மாநிலம்தான் என்று தெரிவித்தனர்.
சிவ சேனாவின் (உத்தவ் பாலாசாகேப் அணி) சாவந்த், எல்லைக்கு வந்த வங்கதேச நாட்டைச் சேர்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டபோது, ஜெய்சங்கர் அது குறித்த விவரம் இல்லை என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.